அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. சரிவை சந்தித்த சாம்சங்.. கடுப்பில் கொரியன் நிறுவனம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் கொரியா : அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனையால் பல நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

 

இந்த நிலையில் ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் சந்தையின் ஜாம்பாவானாக இருக்கும் சாம்சங் நிறுவனம், கடந்த இரண்டாவது காலாண்டில் கிட்டதட்ட 56 சதவிகித லாபத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அட ஆமாங்க.. அடிச்சுக்கோ புடிச்சுக்கோ என்று இருந்த சீனாவும் அமெரிக்காவும் போட்டுக் கொண்ட நீயா? நானா ? சண்டையில், இடையில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்க நிற்பது என்னவோ இந்த நாடுகளிலும் நிறுவனங்களை வைத்திருக்கும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.

கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்?

கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்?

தென் கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பாவானாக இருக்கும் சாம்சங் நிறுவனம், தனது இரண்டாவது காலாண்டில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதாகவும், இதற்கு முதல் காரணமே அமெரிக்கா - சீனாவின் வர்த்தக பிரச்சனை என்றும் கூறியுள்ளது. ஒரு புறம் தனது பெரிய நுகர்வோரான சீனாவும், அமெரிக்காவும் அடிதடி போட்டுக் கொள்கின்றன. இதனால் பெருத்த நஷ்டம் என்கிறது இந்த நிறுவனம்.

வரியால் பாதிக்கும் ஏற்றுமதி?

வரியால் பாதிக்கும் ஏற்றுமதி?

அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து தங்களது வரி விகிதங்களை மாற்றிக் கொண்டே இருப்பதால், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் மற்றும் தென் கொரியாவை சேர்ந்த South Korea's SK Hynix நிறுவனமும் உலகளாவிய அளவில் மெமரி சிப் கார்டுகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனிடையே அதிகரித்து வரும் தேவை ஒரு புறம் இருந்தாலும், ஏற்றுமதி மிக சரிவடைந்துள்ளது மறுபுறம். இதனால் தற்போது மட்டும் அல்லாமல் மூன்றாவது காலாண்டிலும் இலாபம் சரியலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜப்பானிலும் தடை?
 

ஜப்பானிலும் தடை?

ஒரு புறம் அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனை இப்போதைக்கு சீரடைவதாக தெரியவில்லை. இந்த நிலைமையில், ஜப்பானில் விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடைகளும் மறுபுறம் பிரச்சனையை கூட்டுகின்றன. உலக அளவில் நிலவி வரும் இந்த வர்த்தக மோதல்கள் சீரடைய இன்னும் நாட்கள் ஆகும் என்ற நிலையில், இப்போதைக்கு இந்த பிரச்சனை தீருவதாக இல்லை. இது அடுத்த மூன்றாவது காலாண்டிலும் தொடரும் ஒன்றாகவே இருக்கிறது என்றும் Daishin Securities நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இலாபம் 56% வீழ்ச்சி?

இலாபம் 56% வீழ்ச்சி?

ஒரு புறம் இந்த நிறுவனத்தின் இலாபம் கடந்த ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் 56 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 6.5 டிரில்லியன் டாலர்களை மட்டுமே பெற்றுள்ளது. இதே வருவாய் 4.2 சதவிகிதம் குறைந்து 56 டிரில்லியன் டாலர்களாக மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்கிடம் திரும்ப கொடுத்த டிஸ்பிளே பேனல்கள்?

சாம்சங்கிடம் திரும்ப கொடுத்த டிஸ்பிளே பேனல்கள்?

அமெரிக்காவை சேர்ந்த கொண்ட ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்திடம் வாங்கிய டிஸ்பிளே பேனல்களை, திரும்ப சாங்சங்கிடமே கொடுத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 800 பில்லியன் டாலராகும். அமெரிக்கா அதன் இலக்கை தவற விட்டதால், சாம்சங் நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டமே என்கிறது.

பங்கு சந்தையிலும் வீழ்ச்சி?

பங்கு சந்தையிலும் வீழ்ச்சி?

சாமசங் நிறுவனத்தின் இந்த தொடர்ச்சியான வீழ்ச்சியை கண்டு, பங்கு சந்தையிலும் இதன் விலை கிட்டதட்ட 1 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே தென் கொரியாவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான எல்.ஜி நிறுவனம் கடந்த முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் 15.4 சதவிகித சரிவை சந்தித்துள்ளன. இதுவே இது ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 652.2 பில்லியன் லாபம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: samsung சாம்சங்
English summary

Samsung forecasts profit plunge after the U.S - China trade war

Samsung forecasts profit plunge after the U.S - China trade war
Story first published: Sunday, July 7, 2019, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X