பன்னீர் பட்டர் மசாலா கேட்டா பட்டர் சிக்கனா கொண்டு வரீங்க.."zomato" ரூ.55,000 அபராதம் கொடு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனே: நாளுக்கு நாள் இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல உணவு டெலிவரி நிறுவனங்கள் ஆஃபருக்கு மேல் ஆஃபராக போட்டு தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதிலும் அசைவ உணவு என்றால் அப்படி ஒரு அலாதி பிரியம் நம் மக்களுக்கு.

 

ஆனால் நம்ம புனேவை சேர்ந்த, "Zomato" நிறுவனத்திற்கு 55,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதி மன்றம். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான "Zomato" மீது, புனேவைச் சேர்ந்த சண்முக் தேஷ்முக் (Shanmukh Deshmukh ) என்ற வக்கீல் ஒருவர் நுகர்வோர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 
பன்னீர் பட்டர் மசாலா கேட்டா பட்டர் சிக்கனா கொண்டு வரீங்க..

அதில் அவர் "Zomato"வில் வெஜிடேரியன் உணவான பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான , "Zomato" நிறுவனமோ பட்டர் சிக்கனை டெலிவரி செய்துள்ளது.

இரண்டிலேமே கறி (Curry) என்ற வார்த்தை இருப்பதால் நம்ம வக்கீல் அண்ணனும், அந்த உணவை சாப்பிட தொடங்கியுள்ளார். இதை சாப்பிடத் தொடங்கிய பின்பு தான் தெரிந்திருக்கிறது. அது பன்னீர் பட்டர் மசாலா அல்ல, பட்டர் சிக்கன் என்று.

இது முதல் முறை அல்லவாம். ஏற்கனவே இதேபோல் ஆர்டர் செய்து இதே தவறை செய்துள்ளது. "Zomato" நிறுவனம். இதனால் கடுப்பான அண்ணன், வக்கீல் இல்லையான? ஆக தனது ஆயுத்தத்தை எடுத்துள்ளார்.

ஆமாங்க.. பேனாவை எடுத்து கட கடவென மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில் நான் , "Zomato" நிறுவனத்தில் வெஜிடேரியன் உணவை ஆர்டர் செய்தேன், ஆனால் அவர்கள் கொடுத்ததோ அசைவ உணவனா? பட்டர் சிக்கனையே. இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு முறை ஆர்டர் செய்து இப்படி தான் செய்து விட்டார்கள் என்றும், இதனால் எனக்கு மிக வேதனையளிக்கிறது. இதனால் நீதிமன்றம் இதற்கு சரியான தீர்வை அளிக்குமாறும் கூறியுள்ளார்.

அதோடு அந்த நிறுவனம் தான் செய்துள்ள தவறை புரிந்துக் கொள்ளவும் தயாராய் இல்லை. ஏற்கொள்ளவும் தயாராய் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து "Zomato" நிறுவனம் கூறுகையில், வாடிக்கையாளருக்கு தவறான உணவு வழங்கியதில் தவறு இருப்பதாகவும், இதில் ஹோட்டலின் தவறும் இருக்கிறது என்று தப்பிக்க பார்த்திருக்கிறது அந்த நிறுவனம்.

ஆனால் நம்ம நீதிபதியோ இதில் இருவருக்குமே சமமான பங்கு உள்ளது என்று தீர்ப்பு வழங்கியதோடு, அபராதமாக ரூ.55,000 -யும், இதை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நாங்கள் தவறான உணவை வழங்கிவிட்டோம் என்றும் ஹோட்டல் நிர்வாகமும் ஒப்புக் கொண்டுள்ளதாம். என்ன பன்னி என்ன செய்ய? வட போச்சே? ரூ.55,000 பேச்சே என்ன பன்ன?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato அபராதம்
English summary

Zomato got fined Rs.55,000 for serving chicken instead of paneer

Zomato got fined Rs.55,000 for serving chicken instead of paneer
Story first published: Monday, July 8, 2019, 12:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X