சரக்கு விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.31,157.83 கோடி வருமானம்..மொத்தபணமும் இங்கதான் இருக்கும் போல?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதையே இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஆமாங்க.. பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும் வருமானம் மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்வதென்றால் எப்படி? ஒன்று குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும்.

இல்லையேல் குடிமக்களே இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும்? அதிலும் கடந்த 5 வருடங்களாகவே வருடத்திற்கு வருடம் டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருமானம், வருடத்துக்கு வருடம் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

பல கடைகள் மூடப்பட்டும் வருவாய் அதிகரிப்பு?

பல கடைகள் மூடப்பட்டும் வருவாய் அதிகரிப்பு?

அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் தான் மிக அதிகம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 3 ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும், டாஸ்மாக் கடைகள் மூலம் 31,157.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, கடந்த ஆண்டை காட்டிலும் 4359 கோடி ரூபாய் அதிகமாகும்.

கடந்த ஆண்டுகளில் வருவாய் எப்படி?

கடந்த ஆண்டுகளில் வருவாய் எப்படி?

கடந்த 2014 - 2015ம் நிதியாண்டில் மட்டும் 24,164.95 கோடி ரூபாய் வருவாயை டாஸ்மாக் மூலம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2015 - 2016ம் ஆண்டில் 25,845.58 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த 2016 - 2017ம் நிதியாண்டில் 26,995.25 கோடி ரூபாயாக வருவாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது . அதுவே 2017 - 2018ம் நிதியாண்டில் சற்று குறைந்து 26,797..96 கோடி ரூபாயாக வருவாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த நிதியாண்டில் 2018 - 2019ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டதட்ட 16 சதவிகிதம் அதிகரித்து, அதாவது 4359 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து, 31,157.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில்லறை விற்பனையகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு?

சில்லறை விற்பனையகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு?

ஒரு புறம் பல கடைகள் மூடப்பட்டதாக கூறும் நிலையில், சில்லறை விற்பனையகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. வெறும் 3866 ஆக கடைகளின் எண்ணிக்கை 5152 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தடை மற்றும் கலாக் குறித்த கொள்ளைக் குறிப்பின் படி, இந்த ஆண்டு மே 31ம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சுமார் 5152 கடைகள் தற்போது உள்ளதாகவும், இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது வெறும் 3866 கடைகள் மட்டுமே இருந்ததும், இது சுமார் 1286 கடைகள் அதிகரித்திருப்பதும் இதன் மூலம் தெரிகிறது.

நகரங்களில் வருவாய் குறைந்துள்ளது?

நகரங்களில் வருவாய் குறைந்துள்ளது?

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், அந்த நேரத்தில் 3000 மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆனால் சில்லறை கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது என்றும் டாஸ்மாக் வட்டாரத்தில் கூறுகின்றனர். எனினும் நகர்புறங்களில் ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகள் மூடப்பட்டதால் கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் வருவாய் முந்தைய ஆண்டைவிட 200 கோடி ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விற்பனை குறைப்பு இல்லையே?

விற்பனை குறைப்பு இல்லையே?

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கடந்த 2016ல் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2016 அன்றைய முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து, ஜெயலலிதா தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 7896 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகளை மூடினார். அதோடு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்த கடையின் பணி நேரத்தை, நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணியாக குறைத்தும் உத்தரவிட்டார்.

என்ன செய்தது எடப்பாடி அரசு?

என்ன செய்தது எடப்பாடி அரசு?

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற ,பிறகு கடந்த 2017ம் வருடம், பிப்ரவரி 24ம் தேதி 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். இதற்கிடையே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்ட கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் செயல்பட்ட 3231 கடைகள் மூடப்பட்டன. ஆனால் மறுபுறம் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலை வகை மாற்றம் செய்து மீண்டும் கடைகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பேரில் 1,300 கடைகள் மீண்டும் மூடப்பட்டது கவனிக்கதக்கது.

வருமானம் அதிகரிப்பு?

வருமானம் அதிகரிப்பு?

தமிழகத்தில் அதிக வருவாய் கொடுக்கும் துறைகளில் டாஸ்மாக்கும் ஒன்று. மற்ற துறைகளின் வருமானத்தை காட்டிலும் டாஸ்மாக் மூலமாக கூடுதலாக வருவாய் கிடைத்து வருவது கவனிக்கதக்கது. இப்படி இருக்கையில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமாகுமா? என்பது தான் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu liquor sales rises 16%, also Its crosses Rs.30,000 crores

Tamilnadu liquor sales rises 16%, also Its crosses Rs.30,000 crores
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X