பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்.. 52 நிறுவனங்களுக்கு அதிரடி நோட்டீஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நாட்டில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க முக்கிய நடவடிக்கை பல எடுத்து வந்தாலும், அதை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.

 

அதை முழுவதும் அகற்ற முடியாவிட்டாலும் கூட, இருக்கும் பிளாஸ்டி கழிவுகளையாவது மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்த வேண்டும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால் அதை பல ஆன்லைன் நிறுவனங்கள் செய்வதேயில்லை. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அரசு இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாம்..

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்.. 52 நிறுவனங்களுக்கு அதிரடி நோட்டீஸ்!

ஆமாங்க.. இது குறித்து பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான், பிளிப்கார்ட் ,பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், இதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி, உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள், அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இதை நிறுவனங்களோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ, அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும். ஆனால் இதை மேற்கொள்ள தவறியதாகக் அமேசான், பிளிப்கார்ட், டானோன், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Ruby Roman Grapes: ஒரு கொத்து திராட்சைக்கு ரூ. 7.5 லட்சமா..? உலக சாதனை படைத்த திராட்சை பழம்..!

இதற்கான திட்ட அறிக்கையை கால அளவீட்டுடன் தர தவறும் பட்சத்தில் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் முன்னர் இருந்ததை விட பிளாஸ்டிக் கழிவுகள் உபயோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக்கை நிர்வகிப்பதில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு Central Pollution Control Boardன் மதிப்பின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றப்படுகிறதாம்.

 

இதில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளாக இருக்கிறதாம். இதில் கிட்டதட்ட 40 சதவிகிதம் சேகரிக்கப்படுவதே இல்லையாம். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் இந்த கழிவுகளால் மழை நீரும் மண்ணும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனவாம்.

இதில், பிளாஸ்டிக் பேக்கேஜிங் தான் முக்கிய பங்களிப்பாளாராக உள்ளதாம். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழ்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏப்ரல் 30, 2019க்குள் அதற்கான திட்டத்தினையும் தொகுப்பினையும் சமர்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த தவறுகளை சரி செய்து கொள்ளாத மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.1 கோடி அபாராதம் விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CPCB pulls up 52 firm including amazon over handling of plastic

CPCB pulls up 52 firm including amazon over handling of plastic
Story first published: Thursday, July 11, 2019, 13:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X