Passport: தட்கலில் ஒரே நாளில் பாஸ்போர்ட்! வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லத் தேவையான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று Passport என்கிற கடவுச் சீட்டு தான். இந்தியாவில் தற்போது Passport-க்கு விண்ணப்பித்து ஏறக்குறைய 11 நாட்களுக்குள் Passport வழங்கப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளிதரன் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். அதோடு அவசரத்துக்காக தட்கலில் விண்ணப்பிக்கும் இந்திய குடிமகன்களுக்கு கூடுமான வரை ஒரே நாளில் Passport வழங்கி வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.

 

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி Passport பெற மக்கள் ஏன் இவ்வளவு சிரமமாக உணர்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி முரளிதரன் "நாடு முழுவதும் 36 Passport அலுவலகங்கள் 93 PSK என்றழைக்கப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் 412 அஞ்சலக Passport சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் தன் பதிலில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அஞ்சலக Passport சேவை மையங்களில், Passport சேவைகளை வழங்கும் வேலையில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடவில்லை எனவும் பதில் அளித்திருக்கிறார்.

 
 Passport: தட்கலில் ஒரே நாளில் பாஸ்போர்ட்! வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதில்!

அதோடு ஒரு செயலி (அப்ளிகேஷன்) மூலமாக இந்தியாவில் 731 காவல் மாவட்டங்கள், இந்த Passport வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய சரிபார்ப்பு (Police Verification) வேலைக்காக இணைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாஸ்போர்ட் கட்டண விவரங்கள்

Sr. No.Service RequiredApplication FeeAdditional Tatkaal Fee
1Fresh Passport/Re-issue of Passport including additional booklet due to exhaustion of visa pages (36 pages) of 10 years validity.Rs.1,500/-*Rs.2,000/-*
2Fresh Passport/Re-issue of Passport including additional booklet due to exhaustion of visa pages (60 pages) of 10 years validity.Rs.2,000/-Rs.2,000/-
3Fresh Passport/Re-issue of Passport for Minors (below 18 years of Age), of 5 years validity or till the minor attains the age of 18 whichever is earlier (36 pages)Rs.1,000/-Rs.2,000/-
4Replacement of Passport (36 pages) in lieu of lost, damaged or stolen passportRs.3,000/-Rs.2,000/-
5Replacement of Passport (60 pages) in lieu of lost, damaged or stolen passportRs.3,500/-Rs.2,000/-
6Police Clearance Certificate (PCC)Rs.500/-NA
7Replacement of Passport (36 pages) for deletion of ECR / Change in personal particulars (10 year validity)Rs.1,500/-Rs.2,000/-
8Replacement of Passport (60 pages) for deletion of ECR / Change in personal particulars (10 year validity)Rs.2,000/-Rs.2,000/-
9Replacement of Passport (36 pages) for deletion of ECR/ Change in personal particulars for Minors (below 18 years of Age), of 5 years validity or till the minor attains the age of 18 whichever is earlier.Rs.1,000/-Rs.2,000/-
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

passport issued in one day for tatkal applicants mos external affairs said

passport issued in one day for tatkal applicants mos external affairs said
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X