இந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகம் படுமோசம்.. இனியாவது சீரடையுமா.. எதிர்பார்ப்பில் நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியா உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை துறையின் வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

 

அதிலும், கடந்த பிப்ரவரியில் 18% ஆக மதிப்பு, ஜூன் மாதத்தில் 15% ஆக குறைந்துள்ளது, அதிலும் குறிப்பாக தனியார் துறை நிறுவனங்களின் நிகர இருப்பு ஜூன் 2016ல் இருந்ததை போலவே தற்போதும் மிக மோசமடைந்துள்ளது என்றும் கருதப்படுகிறது.

அதிலும் கடந்த அக்டோபர் 2009 கிடைத்த தரவுவின்படி, கடந்த 2009லிருந்தே வர்த்தகம் வீழ்ச்சியடைந்து தான் காணப்படுகிறது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் தொழில் மந்தம்?

ஏன் தொழில் மந்தம்?

நீர் பற்றாக்குறை, பொதுக் கொள்கைகள் மற்றும் பலவீனமான விற்பனை, பொதுக் கொள்கைகள் ஆகியவற்றால் தொழில்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் இது குறித்து கூறுகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்க்ளுக்காக வரியினை அதிகமாக உள்ளது, திறமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு பற்றாக்குறை, வரி உயர்வு, நிதிச் சிக்கல்கள், வாடிக்கையாளர்கள் அதிகளவில் சலுகையை எதிர்பார்த்தல் இதுபோன்ற பல பிரச்சனைகள் தங்களுக்கு இருப்பதாகவும், இதனாலேயே தொழில் மந்தம் நீடிப்பதாகவும் கூறியுள்ளனர்.

எதிர்வரும் கொள்கைகள் தொழில் துறைக்கு சாதகமாக இருக்கலாம்!

எதிர்வரும் கொள்கைகள் தொழில் துறைக்கு சாதகமாக இருக்கலாம்!

எனினும் Pollyanna De Lima, Principal Economist at IHS Markit இது குறித்து கூறுகையில், எதிர்வரும் ஆண்டில் வணிக சார்பான மிகச் சிறந்த கொள்கைகள், சிறந்த நிதி வளர்ச்சியையும், உற்பத்தி வளர்ச்சியையும் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் இலாப வளர்ச்சியை நோக்கிய நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.

பொருளாதாரம் சராசரி நிலைக்கு திரும்பும்
 

பொருளாதாரம் சராசரி நிலைக்கு திரும்பும்

இந்திய பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இந்த நிலையில், நுகர்வு தேவை மந்தநிலை மற்றும் பணப்புழக்க நெருக்கடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்போது, எளிதாக இந்திய பொருளாதாரம் சராசரி நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

வணிக நிலைமை குறித்து சர்வே

வணிக நிலைமை குறித்து சர்வே

உலகளாவிய உற்பத்தி மற்றும் சேவை துறைகளிடையே நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, சுமார் 12,000 உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்களிடம் எடுக்கப்பட்டது. இவர்களிடம் எதிர்கால வணிக நிலைமைகள் குறித்து தங்கள் எண்ணங்களைத் தருமாறும் கேட்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian manufacturers and services providers fell to a multi-year low in June

Indian manufacturers and services providers fell to a multi-year low in June
Story first published: Monday, July 15, 2019, 16:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X