வெளிநாட்டு நாணயக் கடன் வேண்டாம்.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தே .. ரகுராம் ராஜன் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்திய நாணய வங்கியான ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், வெளநாட்டு நாணயக் மதிப்பில் வழங்கவிருக்கும் கடன் பத்திர முதலீட்டு திட்டத்தினால், இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லை, மாறாக இதனால் இந்தியாவிற்கே ஆபத்தே என்றும் கூறியுள்ளார்.

 

அட ஆமாங்க.. இந்திய அரசு வெளியிட இருக்கும் வெளிநாட்டு நாணயக் கடன் திட்டம் மூலம், இந்தியாவுக்கு உண்மையில் எந்த பலனும் இல்லையாம், மாறாக இதன் மூலம் இந்தியாவுக்கு பெரிய ஆபத்து தான் காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நாணயக் கடன் வேண்டாம்.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தே .. ரகுராம் ராஜன் அதிரடி!

இவ்வாறு வெளியிடப்படும் உலகளாவிய பத்திரமானது உள்ளூர் சந்தைகளில் மட்டும் அல்லாது, வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள். இது இந்தியாவுக்கு அதிகளவு முதலீட்டை ஈர்க்கும்.

ஆனால், இந்தியாவில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி இல்லை என்று தெரியவரும் பட்சத்தில், இது உண்மையில்லை என்று தெரிய வரும் போது முதலீட்டை திரும்ப கேட்கும்போது, இது மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். பின்னர் இதற்காக இந்தியா கவலை பட வேண்டியதாயிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மெதுவான பொருளாதார வளர்ச்சி வரி வருவாயை பாதிக்கும் என்பதால், நிதி திரட்டுவதற்காக விருப்பங்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இதனால் தான் வெளி நாடுகளில் பத்திரங்களை விற்கும் திட்டத்தினை செயல்படுத்த நினைக்கிறது இந்திய அரசு. அதிலும் இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பிலேயே கடன் பத்திரங்களை வெளியிட்டு வந்த அரசு, தற்போது அன்னிய நாடுகளின் கரன்சி மதிப்பிலேயே பத்திரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த திட்டத்திற்கு எதிரான பல குரல்களில், ரகுராம் ராஜன் ஒன்றாகும். இந்த நிலையில் மூன்று முன்னாள் மத்திய வங்கியின் அதிகாரிகளும், நிர்மலா சீதாராமனின் இந்த திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தில் 3.3 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே 3.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஒரு சிறிய அளவிலான முதலீடு என்பது இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் முதலீடுகள் வர ஆரம்பித்த பின்னர் இது, பெருக ஆரம்பித்து விடும். பின்னர் இது கவலைக்குரியதாகி விடும். அதோடு இது மிக அபாயகரமானதும் கூட என்றும் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan says India's overseas debt plan is full of risks

Raghuram Rajan says India's overseas debt plan is full of risks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X