SBI-க்கு ரூ.7 கோடி அபராதம்.. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிதி நிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல் மற்றும் இயக்குதலில் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன் களுக்கான மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடி அபாய மேலாண்மை, மோசடி புகார்கள் போன்றவைகளில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சரியாக பின்பற்றவில்லை என தெரிய வந்துள்ளது.

SBI-க்கு ரூ.7 கோடி அபராதம்.. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை!

இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர ஆய்வறிக்கை மார்ச் 30, 2017 நிலவரப்படி, வங்கியின் நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டது இந்த அறிக்கைகள். இவை பொதுமக்களால் அணுக முடியாதவை. ஆனால் இந்த மாத தொடக்கத்தில், ரிசர்வ் வங்கி 2012, 2013, 2014, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளின் ஆய்வறிக்கைகள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கைகள் கடன்களை பசுமைப்படுத்துதல், தரவை அடக்குதல், கே.ஒய்.சி விதிமுறைகள், பணமோசடி தடுப்பு விதிகளை மீறுதல் மற்றும் குறைபாடுகள் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளை புறக்கணித்தல் ஆகியவற்றை இந்த அறிக்கைகள் வெளி படுத்தின.

இந்த நிலையில் இணைய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததற்காக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ம் ஆண்டில் இந்த வங்கியிம் ஸ்விஃப்ட் அமைப்பி மூலம் மொத்தம் 171 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏழு மோசடி செய்திகளின் அடிப்படையில், வங்கியின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு ஆய்வு செய்ததன் மூலம், பல குறைபாடுகள் தெரிய வந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஸ்விஃப்ட் மேசேஜ் மையாகக் கொண்டுதான் பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி மன்னன் நீரவ் மோடி ரூ.14,000 கோடியை எடுத்துச் செல்வதற்கு வழிவகுத்தது என்றும், இதன் பின்னர் தான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விதிமுறைகளை மிகக் கடுமையாக்கியது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI imposes Rs.7crore penalty on SBI for non-compliance with norms

RBI imposes Rs.7crore penalty on SBI for for non-compliance with norms
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X