சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சரவண பவன் ஹோட்டலின் அனைத்து கிளைகளிலும் இருந்த வந்த ஒரே மாதிரியான தரம், சுவை, விலை ஆகியவை ஹோட்டலின் நிர்வாகம் அதன் உரிமையாளரான ராஜகோபாலின் கையை விட்டு சென்றவுடனேயே அம்மூன்றும் கூடவே காணாமல் போய்விட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

 

சென்னையில் அப்போது பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பசியாறுவதற்கு மட்டுமே இருந்தன. ருசி என்பது மருந்துக்கு கூடி கிடையாது. பசி ருசி அறியாது என்பதற்கு ஏற்ப அப்போதிருந்த ஹோட்டல்களில் பரிமாறப்பட்டு வந்த உணவுகளின் சுவையும் இருந்தது. வாடிக்கையாளர்களும் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற நினைப்பிலேயே உண்டு வந்தனர்.

சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே

நாம் வீட்டில் சாப்பிடும் சாம்பார் சாதத்தை பிசிபேளா பாத் என்று புதிய பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் முதல் நாள் மீதம் உள்ள சாதத்துடன் தயிர், முந்திரி மற்றும் திராட்சையும் சேர்த்து புதிய முறையில் தயிர் சாதத்தை அறிமுகப்படுத்தியதற்கு காரணம் எதையும் வித்தியாசமாகவும் தரத்துடனும் சுவையாகவும் வழங்க வேண்டும் என்பது தான்.

கடந்த 1980களின் தொடக்கத்தில் சென்னையின் பிரபலமான கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் மளிகை கடை நடத்திவந்த ராஜகோபால் அண்ணாச்சிக்கு தன்னுடைய நண்பரின் பதிலில் கிடைத்த திடீர் ஞானமே ஹோட்டல் தொழில் தொடங்க மூல காரணமாகும். ஒரு நாள் தன்னுடைய மளிகை கடையில் பிஸியாக இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர் வேர்க்க விறுவிறுக்க தன்னை பார்க்க வந்தார்.

வந்தவரை வரவேற்று என்னவென்று கேட்க, நண்பரோ, அட என்னப்பா மத்தியான லஞ்ச் சாப்பிட இங்கருந்து தி.நகருக்கு போகவேண்டியிருக்குதே அதான் எரிச்சலா இருக்கு என்று நண்பர் பதிலளித்தார். அந்த பதிலில் அவருக்கு பளிச்சென்று ஒரு ஐடியா தோன்றியது. அட நாம ஏன் நல்ல ஹோட்டல் ஒண்ணு ஆரம்பிக்கக்கூடாது என்று. அதை உடனேயே செயல்படுத்த தொடங்கினார்.

 

எதற்கும் நம்முடைய ஆஸ்தான குருவான கிருபானந்த வாரியாரிடம் ஒருமுறை ஆலோசித்து விட்டு பின்பு ஆரம்பிக்கலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்ள, அவரும் தாராளமாக ஆரம்பி, வாடிக்கையாளர்களின் வயிற்றுப் பசியை போக்க நினைக்கும் உன்னுடைய மனமோ அந்த ஆகாயம் போல் பரந்து விரிந்தது. அவர்களின் மனமறிந்து பசியாற்று. நீ மென்மேலும் வளர்வாய் என்று ஆசீர்வதித்தார்.

சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே

தன்னுடைய குருவின் ஆசீர்வாதம் கிடைத்த உடனேயே செயலில் இறங்கத் தொடங்கினார். அதன் விளைவாக கடந்த 1981ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதியன்று கே.கே. நகரில் தனது குலதெய்வமான வடபழனி முருனை நினைத்து, சரவண பவன் என அவர் பெயரிலேயே முதல் கிளையை ஆரம்பித்தார்.

சென்னையில் அப்போது பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பசியாறுவதற்கு மட்டுமே இருந்தன. ருசி என்பது மருந்துக்கு கூடி கிடையாது. பசி ருசி அறியாது என்பதற்கு ஏற்ப அப்போதிருந்த ஹோட்டல்களில் பரிமாறப்பட்டு வந்த உணவுகளின் சுவையும் இருந்தது. வாடிக்கையாளர்களும் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற நினைப்பிலேயே உண்டு வந்தனர்.

சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே

இந்த நிலையில் தான் ராஜகோபால் அண்ணாச்சி புதிதாக ஹோட்டல் நடத்த முன்வந்தார். கையோடு முக்கியமான ஒரு உறுதிமொழியையும் தனக்குள் எடுத்துக்கொண்டார். சாப்பிட வரும் அனைவரும் தன்னுடைய ஒரு ஜான் வயிறு நிரம்பினால் போதும்டா சாமி என்று நினைக்காமல் அவர்களுடைய அனுபவத்தில், முகமலர்ச்சியில் எந்தவிதமான குறைபாடும் இருக்கக்கூடாது என்றும், பரிமாறப்படும் உணவு நல்ல தரம், சுவை, விலை ஆகிய மூன்றிலும் எப்போதும் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

ஹோட்டல் ஆரம்பித்த உடனேயே அவருக்கு ஆலோசனை சொல்றேன் என்று ஒட்டவந்தவர்களை ஒதுக்கியே வைத்தார். மலிவான விலையில் மட்டமான சரக்குகளை வாங்கி, அதிக விலை வைத்து ஹோட்டலை நடத்துவோம். அதோடு ஊழியர்களுக்கும் ரொம்ப கம்மியா சம்பளம் கொடுத்தா போதுமே என்று ஆலோசனை வழங்கியவர்களையும் அலற விட்டார். விளைவு, தொடக்கத்தில் மாதந்தோறும் சுமார் ரூ.10 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டது.

சரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே

இருந்தாலும், தேனுண்ணும் வண்டு, மாமலரைக்கண்டு திரிந்தலைந்து பாடியதே ரீங்காரம் கண்டு, என்பதற்கு ஏற்ப, சரவண பவன் ஹோட்டலின் சுவை மற்றும் தரத்தை அறிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் நாளடைவில் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் ஒரு கட்டத்தில் ஹோட்டலை இழுத்து மூடிவிட்டு மீண்டும் மளிகைக் கடை வியாபரத்தையே தொடரலாம் என்று தான் நினைத்ததை ரப்பர் வைத்து உடனடியாக அழித்தார்.

வாடிக்கையாளர்கள் வருகை கூடக்கூட, லாபமும் அதிகரிக்கத் தொடங்கியது. சரவண பவன் ஹோட்டலின் வெற்றி ஃபார்முலாவே நல்ல தரமான உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களும் இன்முகத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வேலை பார்க்கவேண்டும் என்று நினைத்தார். ஊழியர்கள் பணியாற்றும் சூழலையும் மேம்பட்ட தரத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

முதலில் ஒரே ஒரு கிளையுடன் ஆரம்பிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் இன்றைக்கு உலகம் முழுவதும் ஆலமரம் போல் தனது கிளைகளை பரப்பியதற்கு முக்கிய காரணமே, உணவு வகைகளின் தரம், சுவை போன்றவற்றுடன் ஊழியர்களையும் கனிவு மற்றும் கண்டிப்புடன் ஒரு ராணுவ ஒழுக்கத்துடன் நடத்தியது தான். ஊழியர்களுக்கு வேலையை உறுதி செய்வதில் இருந்து, ஊதியத்தை சரியான தேதியில் வழங்குவது, அவர்கள் குழந்தைகளின் கல்விக்காக துணை நிற்பது என அனைத்திலும் பக்கத் துணையாக இருந்துவந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், அவர்களின் குடும்ப நலனை நான் பார்த்துக்கொண்டால் தான் ஊழியர்கள் ஹோட்டலில் நிம்மதியுடன் வேலை செய்ய முடியும், இதனால் என்னுடைய வருமானமும் அதிகரிக்குமே என்றார்.

அதற்கு உதாரணம், வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை ஊழியர்கள் கழுவக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் விளைவாக, சாப்பாட்டு தட்டுகளில் வாழை இலையை அழகாக, அந்தந்த தட்டுகளின் வடிவத்திற்கு ஏற்ப வெட்டி தட்டில் வைக்கும் முறையை சரவண பவன் அண்ணாச்சி அறிமுகப்படுத்தினார். இதனால் ஊழியர்களின் வேலை இன்னும் சுலபமானது. இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெரும்பாலான ஹோட்டல்களிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மைதான்.

தனது ஹோட்டலில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு பதார்த்தங்களையும் அண்ணாச்சியே முதலில் சுவைத்துப் பார்த்து, அனைத்து உணவுகளிலும் அறுசுவையும் இருக்கவேண்டிய அளவில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து திருப்தியானால் தான் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதை தனது கடமையாகவே நினைத்திருந்தார் என்பது அவருடைய மேற்பார்வையில் ஹோட்டல் நிர்வாகம் இருந்தபோது சரவண பவன் ஹோட்டலில் சாப்பிட்ட அனைவரும் அறிந்ததே. அவர் திருப்தியடையாவிட்டால் அந்த உணவுப் பதார்த்தம் நிச்சயம் குப்பை கூடைக்குத்தான் செல்லும் என்பதும் நிஜம். அந்த அளவிற்கு உணவின் சுவையும் தரமும் சிறிதளவும் குறையாமல் பார்த்துக்கொண்டார்.

அதேபோல், நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பூரி மசாலா ஜோடியில் இருந்து மசாலாவை மட்டும் கதறக் கதற அநியாயத்திற்கு பிரித்துக்கொண்டு வந்து தோசையுடன் சேர்த்து வைத்து (ஜீவஜோதியை நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல) மசாலா தோசை என்று பெயர் வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த மசாலா தோசைக்காக சாகவும் ரெடி என்று நியூயார்க் பத்திரிக்கை சர்டிஃபிகேட் அளித்தே மசாலா தோசைக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்தான்.

நாம் வீட்டில் சாப்பிடும் சாம்பார் சாதத்தை பிசிபேளா பாத் என்று புதிய பெயரில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் முதல் நாள் மீதம் உள்ள சாதத்துடன் தயிர், முந்திரி மற்றும் திராட்சையும் சேர்த்து புதிய முறையில் தயிர் சாதத்தை அறிமுகப்படுத்தினார்.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல், இன்றைக்கு சாதாரண கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரையிலும் பரிமாறப்படும் காம்போ வகை உணவு வகைகளையும் நம்ம அண்ணாச்சிதான் அறிமுகப்படுத்தி வைத்தார். முதன் முதலில் சரவண பவன் ஹோட்டலில் தான் மினி டிபன் மற்றும் மினி லஞ்ச் (Quick Lunch) என்னும் காம்போ உணவு வகைகளை அறிமுகப்படுத்தப்பட்டது.

சரவண பவன் ஹோட்டலின் அனைத்து கிளைகளின் உணவு வகைகளும் சுவை மற்றும் தரம் ஆகியவை ஒரே மாதிரிதான். அதில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. விலை மட்டும் சிறிதளவு மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது. இதை உறுதிப்படுத்துவதற்காகவே நானும் என்னுடைய நண்பர்களும் அடிக்கடி சாப்பிடும் வடக்கு உஸ்மான் கிளையில் சாப்பிட ஆரம்பித்து, கே.கே நகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன் என ஒவ்வொரு நாளும் மாறி மாறி சாப்பிட்டு பரிசோதனை செய்தது தனிக்கதை.

இவை எல்லாம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தான். இன்றைக்கு சரவண பவன் ஹோட்டலின் உணவு வகைகளில் பெரும்பாலானவை இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் சுவையோ கேள்விக்குறிதான். ஒரே கிளையில் முதல் நான் சாப்பிட்ட உணவின் சுவை மறுநாள் இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், அண்ணாச்சி கொலை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி கைது நடவடிக்கை வரை சென்று ஹோட்டல் நிர்வாகத்தை கைகழுவி விட்டதுதான். அண்ணாச்சி என்றைக்கு ஹோட்டல் நிர்வாகத்தை கைகழுவினாரோ அன்றைக்கோ அந்த ஹோட்டலின் சுவை, தரம் என இரண்டும் காணாமல் போய்விட்டது.

இதோ கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாச்சி ராஜகோபாலின் உயிர், சிகிச்சை பலனின்றி அவருடைய உடலைவிட்டு பிரிந்தது. இந்த துக்க சமயத்தில் சரவண பவன் ஹோட்டல் வாடிக்கையாளர்களின் மனதில் தோன்றும் எண்ணம், 'அண்ணாச்சியோடு ஹோட்டலின் தரமும் சுவையும் சேர்ந்து செத்துப்போய்விட்டது' என்பதுதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hotel Saravana Bhavan- Quality and Taste died with Annachi Rajagopal

It seems that the same quality, taste and price that came from all branches of Saravanan Bhavan Hotel disappeared shortly after the hotel's management left Rajagopal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X