வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும், அது வணிக வாகனங்களுக்கு மட்டுமே மானிய சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

ஆமாங்க.. இது கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமே என்றும், தனிப்பட்ட சொந்த உபயோகங்களுக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

 
வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்..  தனி நபர் வாகனங்களுக்கு  சந்தேகம் தானாம்?

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனரக உற்பத்தி மற்றும் பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இந்தியா மின்சார வாகனங்களை அனைத்தும் இயற்கை போக்கிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அது பைக்குகளாக, கார்கள், லாரிகள், பேருந்துகள் மற்றும் மின் ரிக்ஷாக்களாக இருக்கலாம், அதே நேரத்தில், இந்தியா லண்டனுடனான Electric Mobility Forum 2019 என்ற ஒப்பந்தத்தின் படி, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க மாற்றம் அவசியம் என்றும் வலியுறுத்துகிறது.

அரசு வர்த்தக வாகனங்களுக்கு மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே, குறிப்பாக வணிக வாகனங்களுக்கு மானியத்தை வழங்குகிறது.

FAME திட்டத்தின் கீழ் 10,000 கோடி ரூபாய், வர்த்தக பயன்பாட்டிற்கான மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இது இரண்டு சக்கர வாகனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தனி நபர் பயன்பாட்டு நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கும் மானியம் அளிக்கப்பட வேண்டும். என்றும் பல்வேறு தொழில் துறையினர் அரசாங்கத்திடம் ஆதரவு கோரியுள்ளனராம்.

இதன் மூலம் மின்சார வாகனங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், எதிர்கால சந்ததியினருக்கு புகை இல்லாத சூழலை வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்கிறார்.

லண்டனின் ஒப்பந்தப்படி, கார்பன் வெளியேற்றத்தை குறைக்க நாங்கள் மின்சார வாகனங்களை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும், இது எதிர்கால சந்ததியினரின் உரிமை என்றும் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மில்லியனுக்கும் அதிகமான நகரங்களில் சார்ஜிங் உள் கட்டமைப்புகளை உருவாக்க விரும்பும் தனி நபர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஆரம்பத்தில் 1000 சார்ஜிங் நிலையங்கள் மூலம் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழிகாட்டுதல்களின் படி, அனைத்து சார்ஜிங் நிலையங்களும் தேவையான திறன் கொண்ட கட்டம் இணைக்கப்பட்ட சீரிய மின் நிலையத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt asserts subsidy for EVs only for commercial vehicles, not personal

Govt asserts subsidy for EVs only for commercial vehicles, not personal
Story first published: Friday, July 19, 2019, 19:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X