யாருங்க சொன்னது பனைப் பொருட்கள் அழியுதுன்னு.. அதிசயிக்க வைக்கும் திருச்செங்கோடு தம்பதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்செங்கோடு : பொதுவாக நாமக்கல் மாவட்டம் என்றாலே லாரி சம்பந்தமான கனரக தொழில்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த ஊரின் மற்றொரு பிரபலம் பனைமரங்கள். பனை மரங்கள் எல்லா ஊர்களிலும் இருந்தாலும், திருச்செங்கோடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும். அதன் மூலம் கிடைக்கும் பதனீரும் இங்கு ரொம்ப பிரபலம்.

 

ஆனால் இந்த பதனீரையும் இன்னும் பிரபலமாக்க, ஜேவி நேச்சுரல் ஃபுட்ஸ் அண்ட் ஹெர்ப்ஸ் என்ற நிறுவனத்தில் மூலம் உற்பத்தி பனை பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர் இந்த திருச்செங்கோடு தம்பதியர்.

ஆமாங்க.. இவர்களின் முதல் நோக்கமே அழிந்து வரும் பனையையும் இயற்கையையும் காப்பதே என்கிறார்கள் இந்த தம்பதிகள். கணவர் சரவணபவன் ஐ.டி ஊழியராக பணி புரிந்து வந்தாலும், மனைவிக்கு பக்கபலமாக இருந்து உதவிகளை செய்து வருகிறார். இதே மனைவி உஷாராணியோ முழுக்க தனது தொழிலை கண்கானித்து வருகிறார்.

எப்படி இந்த தொழில் தேர்வு?

எப்படி இந்த தொழில் தேர்வு?

எப்படி இந்த பனை சார்ந்த பொருட்களை தேர்தெடுத்தீர்கள் என்று கேட்டபோது, இந்த பொருட்கள் அழிந்து வரும் தருவாயில் இருக்கும் பனை மரங்கள் பற்றியும், இயற்கை வளங்கள் பற்றியும் நம்மாழ்வாரிடம் கற்றுக் கொண்டதாகவும், இதுபற்றியும் கற்றுக் கொண்டதாகவும், ஏதாவது சிறுதொழில் செய்யலாம் என்று நினைத்தபோது, நம்மாழ்வாரே வழிகாட்டியுள்ளார். ஆக அதிலும் மூதாதையரின் தொழிலான இந்த பனை தொழிலேயே தேர்தெடுக்கலாம் என்று எடுத்தோம் என்கிறார்கள்.

முதலீடு எவ்வளவு?

முதலீடு எவ்வளவு?

எந்தவொரு முயற்சியானலும் முதலில் சறுக்கலையே கண்டோம். எப்படியோ இன்று ஓரளவு நன்றாக செய்து கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் மக்கள் கேட்கும் அளவிற்கு தான் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதற்காக முதலீடு போட முடியவில்லை என்றும் கூறுகிறார்கள் இந்த தம்பதிகள். தற்போது தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டில் கால் ஏக்கர் நிலப்பரப்பளவில் விறகு சேமிக்கும் கூடம், சோலார் உலர்த்தி அறை, பதனீரை காய்ச்சும் கொப்பரைகள், கட்டுமானம் என கிட்டதட்ட ரூ.17 லட்ச செலவில் கட்டமைத்துள்ளதாகவும், அதோடு தாங்கள் ஆரம்பத்திலிருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதை பற்றி பெரிதாக தெரியாது?
 

இதை பற்றி பெரிதாக தெரியாது?

முதலில் இந்த தொழிலை பற்றி தெரியாது என்பதாலேயே, மற்றவர்களை நம்பி செய்ய வேண்டியாதாயிருந்தது. இதனால் பெருத்த நஷ்டத்தை மட்டுமே கண்டோம். பின்னர் தான் நாமே இதில் என்ன தான் இருக்கிறது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இதில் உள்ள சின்ன நுணுக்கமான விஷயங்களை பற்றிக் கற்றுக் கொண்டேன். இதன் பின்னர் ஊழியர்களுக்கும் இது இப்படிதான் என்றும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அதிலும் பதனீரின் பதம் கொஞ்சம் மாறி விட்டாலும் புளித்துப்போய் விட்டால் அதெல்லாம் வீணாகி விடும். அதோடு ஒரு நாள் முதலீடும் வீணாகி விடும் என்கிறார் உஷாராணி.

முதன்மை கருப்பட்டியும், பனை சர்க்கரையுமே!

முதன்மை கருப்பட்டியும், பனை சர்க்கரையுமே!

இவர்கள் தயாரிப்பிலேயே அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தது பனங்கருப்பட்டியும், பன சர்க்கரையும் என்கிறார் உஷா. அதிலும் பனங்கருப்பட்டிகள் தயாரிப்பில் பதம் கொஞ்சம் மாறிவிட்டாலும், அது வீணாகிவிடும். அதே போல் பதனீர் மரத்திலிருந்து இறக்கி அதை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு வரவே அதிகாலை நான்கு மணியிலிருந்து தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் அதை சரியான நேரத்திற்கு மரத்திலிருந்து இறக்கினாலும் அதை சரியான நேரத்திற்கு பதனீர் காய்ச்சும் இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிறார்.

எந்தெந்த பொருட்கள் உற்பத்தி?

எந்தெந்த பொருட்கள் உற்பத்தி?

தற்போது பனங்கருப்பட்டி, பனை சர்க்கரை, மொலாசஸ், கோகனட் சர்க்கரை, சுக்கு கருப்பட்டி (இதில் சுக்கு, மிளகு, திப்பிலி,அதிமதுரம், ஏலக்காய் என பல வகையான பொருட்கள் சேர்த்தது.) பனங்கிழங்கு பொடி, இது தவிர பனை கருப்பட்டியில் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை தற்போது தான் ஆரம்பித்திருக்கிறார்களாம். இது தவிர அனைத்து வகையான பொடிகள் குறிப்பாக கஸ்தூரி மஞ்சள் பொடி, ஆலோவேரா பொடி, நலங்கு மாவு, பூந்திக் கொட்டை பவுடர், இயற்கை டிஸ்வாஸ் பவுடர், சத்து மாவு, ஆவாரம்பூ பவுடர், பருப்பு பொடி, ரசம் பொடி, சாம்பார் பொடி கருவேப்பிலை பொடி, பூண்டு சாதம் பொடி, நிலக்கடலை பொடி, எள்ளு சாதம் பொடி என இன்னும் பல பொடி வகைகள் என அனைத்தும் உற்பத்தி செய்கிறார்கள்.

100 மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு?

100 மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு?

மேற்கண்ட அனைத்து பொருட்களும் உற்பத்தியில் இவர்களின் சொந்த தயாரிப்பே என்கிறார்கள். குறிப்பாக உற்பத்தி பேக்கிங் செய்வது என அனைத்தும், அதை சப்ளை செய்வது, மார்கெட்டிங் என சகலமும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் நேரிடையாகவும் சரி, மறைமுகமாகவும் 100 மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர் என்கிறார்கள்.

எப்படி தயாரிப்பு?

எப்படி தயாரிப்பு?

பனை கருப்பட்டி என்பது சுமார் 70 லிட்டர் பதனீரை காய்ச்சும் போது 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். இதுவே கால நிலைகளை பொறுத்து இந்த அளவீட்டு முறைகள் மாறலாம். இதே பனை சர்க்கரை என்பது 70 லிட்டர் பதனீரை காய்ச்சும் போது 7 கிலோ தான் கிடைக்குமாம். இதே பனங்கற்கண்டு தயாரிப்பில் 70 லிட்டர் பதனீருக்கு வெறும் 5 கிலோ தான் கிடைக்குமாம். அதிலும் இதற்காக 40 நாள் காத்திருக்க வேண்டுமாம். சாதராணமாக ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை தயாரிக்க சுமார் 1500 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுமாம் என்றும், இதே பனை சர்க்கரை தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் இருந்தால் கூட போதுமானது என்கிறார் சரவணபவன்.

என்னென்ன பிரச்சனை?

என்னென்ன பிரச்சனை?

முறையாக எம்.எஸ்.எம்.இயில் பதிவு செய்திருந்தாலும் தாங்கள் முதலாவதாக காணக்கூடிய பிரச்சனையே பொருளாதாரம் தான் என்கிறார்கள். முதலாவதாக தற்போதைக்கு செயல்பாட்டு மூலதனம் மட்டும் 4 லட்சம் ரூபாய் வருகிறதாம். தங்களது பொருட்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தும் தங்களால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் உற்பத்தி இல்லை. அந்தளவுக்கு தயாரிக்க இன்னும் மெஷின்கள், உபகரணங்கள் என பல லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறதாம்.

பனைதொழிலா லோன் கிடையாது?

பனைதொழிலா லோன் கிடையாது?

முறையாக MSME பதிவு, ஜி.எஸ்.டி என அனைத்தும் பதிவு செய்திருந்தாலும் தங்களுக்கு தேவையான பண வசதி கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதோடு பல உயர் அதிகாரிகளால் கூட இந்த தொழில் ஊக்குவிக்கப் பட்டிருந்தாலும் என்ன பயன் எங்களுக்கு லோன் கிடைக்கவில்லையே என்கிறார்கள் இந்த தம்பதிகள். அதிலும் பனை வாரியம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகள் என அனைவரையும் உதவி கேட்டும் இதுவரை எந்த உதவியும் கிடைக்காத பட்சத்தில் இருப்பதை வைத்து தொழிலை செய்து கொண்டுள்ளோம் என்றும் கூறுகிறார்கள்.

சென்னையில் கருப்பட்டி கடையும் இருக்கு?

சென்னையில் கருப்பட்டி கடையும் இருக்கு?

சென்னையில் தற்போது முகலிவாக்கத்தில் கடை இருக்கிறது என்று கூறும் இந்த தம்பதிகளுகள், பனை என்பது ஒரு ஊரின் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒன்று. குறிப்பாக தண்ணீரை சேமித்து வைக்கக்கூடிய தன்மை உடையது. ஆனால் பனையால் எந்த பயனும் இல்லை என்றும் நாம் அதை அழித்து விடுகிறோம், ஆனால் இதை பற்றி இன்னும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், பல கல்விகள் கண்காட்சிகள் என அனைத்து இடங்களிலும் இதை பற்றிய விழிப்புணர்வுகளை கொடுப்பதோடு, பல பள்ளிகளில் விழிப்புணர்கள் பற்றி பேசியும் வருகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் பெருத்த நஷ்டம்

ஆரம்ப காலத்தில் பெருத்த நஷ்டம்

ஆரம்ப காலத்தில், சென்னையில் கடந்த 2015ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கிட்டதட்ட 3 டன் கருப்பட்டிகள் வீணாகி விட்டது என்றும் கூறும் சரவணபவன், கருப்பட்டிக்கு தண்ணீரை ஈர்க்கும் தன்மை உள்ளதால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குளிர்ச்சி அடையும் போது உருக ஆரம்பித்துவிடும். இதே வெள்ள காலத்தில் தங்களது ஏரியாவுக்குள் தண்ணீர் வரவில்லை என்றாலும், குளிர்ச்சியால் வீணாகி விட்டதாக கூறுகிறார்.

சப்ளை எங்கெங்கே?

சப்ளை எங்கெங்கே?

தற்போது சப்ளை பல மா நிலங்களுக்கு செய்யப்பட்டு வருவதாகவும், ஏன் இவர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி அதை அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இவர்கள் பொருட்களுக்கு டிமாண்ட் இருக்கிறதாம். ஆனால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதும், அதற்கு ஏற்றாற்போல் முதலீடு செய்ய முடியவில்லை என்பதே பிரச்சனை என்கிறார்கள். இதன் மூலமாவது எங்களுக்கு வங்கிகளில் லோன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள் இந்த தம்பதிகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Palm sugar is naturally occurring, its makes healthy to people

Palm sugar is naturally occurring, its makes healthy to people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X