ஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹபூர் : உத்திரபிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள, சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். இவரது மனைவி கைரு நிஷா.

 

இந்த தம்பதியின் வீட்டுக்கு சமீபத்தில் மின்சார கட்டணத்துக்கான பில் வந்துள்ளது. அதைப்பார்த்த ஷமீம் அதிர்ச்சி அடைந்தார். அந்த பில்லில் அவரது வீட்டின் மின் கட்டணம் ரூ.128,45,95,444 (128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய்) மின் கட்டணம் என காட்டியுள்ளது.

ஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..!

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அவரின் வீட்டில் மின் கட்டணம் செலுத்த வில்லை என்றும், அவரது வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 கிலோ வாட் மின் இணைப்பு கொண்ட வீட்டுக்கு இவ்வளவு தொகையா? எனது வேண்டுகோளை ஒருவருமே கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான கட்டணம் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை என்னிடம் தந்துள்ளது என்றும் புலம்பியுள்ளார்.

இதுவே அவரின் மனைவி கைரு நிஷா ஐயா சாமி, நாங்க பரம் ஏழைகள் இவ்வளவு தொகை மின்சார கட்டணமாக கட்ட சொன்னால், நாங்கள் என்ன செய்வோம் என்றும் புலம்பியுள்ளார்.

அதுமட்டும் அல்ல, ஐயா சாமி நாங்கள் மின் விசிறி மற்றும் லைட் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு பில் வரும். அதுவும் ஆயிரம் இரண்டாயிரம் இருந்தால் கூட பரவாயில்லை. சராசரியாக ஒரு மாதத்திற்கு, எங்களுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை மின் கட்டணம் மட்டும் தான் செலுத்த வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மின்சார கட்டணத்துக்கான பில் குறித்து மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த தவறு விரைவில் அது சரிசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறதாம்.

 

அதோடு இது குறித்து உதவி மின்பொறியாளர் ராம் சரண் என்பவர் கூறுகையில், இது ஒரு பெரிய விஷயமே அல்ல, இது ஒரு தொழில்நுட்ப கோளாராக இருக்கலாம். விரைவில் இது சரி செய்யப்படும், இதுபோன்ற தொழில் நுட்ப பிழைகள் அசாதாரமாணவை அல்ல. கடந்த ஜனவரியில் உத்திர பிரதேசத்தில் உள்ள கண்ணாஜியில் ஒருவருக்கு, மின்சார கட்டணம் 23 கோடி ரூபாய் காட்டியது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளாராம்.

இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் முதியவர் ஒருவருக்கு 128 கோடி ரூபாய் மின்சார கட்டண பில் வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UP Man Receives Electricity Bill of Rs 128 Crore

UP Man Receives Electricity Bill of Rs 128 Crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X