இந்தா பிடிங்க ரூ. 10 லட்சம்.. சொந்த கிராமத்திற்கு அள்ளி வீசும்.. தெலுங்கானா முதல்வர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத் : பொதுவாக அரசியல் வாதிகள் அனைவரும் பதவிற்கு வருவதற்காக பல கோரிக்கைகளை வாரி வழங்குவார்கள். எனினும் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் பதவியில் இருக்கும் போதே தனது சொந்த கிராம மக்களுக்கு ஒரு கோரிக்கையை கொடுத்துள்ளாராம்.

 

இந்த் நிலையில் தான் பிறந்து வளர்ந்த ஊரான சிந்தமடகாவில், உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு கொடுத்துள்ளார்.

இந்தா பிடிங்க ரூ. 10 லட்சம்.. சொந்த கிராமத்திற்கு அள்ளி வீசும்.. தெலுங்கானா முதல்வர்!

ஆமாங்க.. தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சாதி, மத பாகுபாடு இன்றி அரசு சார்பில், அனைவருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்ததுள்ளது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

தனது சொந்த ஊரான சிந்தமடகாவில் நடந்த பொது‌க் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், சாதி மற்றும் மத பேதங்கள் இல்லாமல், நமது கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினரு‌க்கும் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எனக்கு தெரியும் இங்கு அனைவருக்கும் கடன் பிரச்சனை உள்ளது என்றும், ஆக இந்த பணத்தின் மூலம் அனைவரும் நலம் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளாராம். இதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளாராம்.

அரசு தரும் இந்த பணத்தை வைத்து விவசாய பணிகளுக்கோ, தொழில் தொடங்கவோ மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளதாம். இது இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபரிடமும், இது என் அன்பின் அடை யாளம் என்றும், இதன் மூலம் நான் யார் என்றும் உங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளராம்.

இதெல்லாவற்றையும் விட, இந்த 10 லட்சம் ரூபாய் மூலம் கோழிப் பண்ணை, பால் பண்ணை அமைத்துக் கொள்ள முடியும் என்றும், மேலும் வேளாண் தொழில் விருத்திக்காக டிராக்டர் வாங்குவது, அறுவடை இயந்திரங்களை கொள்முதல் செய்வது, சிறு தொழில் தொடங்குவது, ஆட்டோ வாங்குவது என முன்னேற்றத்திற்கான செலவுகளை கிராமத்தினர் செய்து கொள்ளலாம் என்றும், இதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும் கூறியுள்ளாராம், இதனால் இந்த திட்டம் இந்த மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telangana CM has announced Rs.10 lakh to every household in his village of chintamadaka

Telangana CM has announced Rs.10 lakh to every household in his village of chintamadaka
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X