Cheque bounce-ஆச்சுங்க..! அயன் பட நடிகையை ஆறு மாதம் சிறைக்கு அனுப்பிய நீதிமன்றம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சில நாட்களுக்கு முன்பு அந்தேரி மெட்ரோபொலிட்டன் நீதிமன்ற நீதிபதி கெடகி சவான் (Ketaki chavan) ஒரு அதிரடி தீர்ப்பளித்து பாலிவுட் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

கோனெ மித்ரா (koena Mitra) என்கிற பாலிவுட் நடிகை வெகு சில காலங்கள் மட்டுமே சினிமா துறையில் பணியாற்றினார். விக்ரமின் தூள் திரைப்படத்தில் 'கொடுவா மீசை அருவா பார்வை'பாடல் மற்றும் சூர்யாவின் அயன் படத்தில் 'ஹனி ஹனி நெஞ்சில் ஹனி' பாடலுக்கு நடனமாடியவர்.

இவர் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்கவில்லை. அதோடு வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் கடன் வாங்கியவருக்கு, Cheque கொடுத்து அது வங்கியால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிப்பட்டது தான் பிரச்னை.

கடன்

கடன்

கோனெ மித்ரா சில ஆண்டுகளுக்கு முன் பூனம் சேதி என்கிற நண்பரிடம் 22 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். வாங்கிய கடனை அடுத்த சில ஆண்டுகளில் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். சொன்ன படி பணத்தைக் கொடுக்கவில்லை. அப்போதே நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் சேதி. வழக்கு நடத்தி, வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.

காசோலை

காசோலை

நீதிமன்ற உத்தரவுக்குப் பின், மூன்று லட்சம் ரூபாய்க்கு ஒரு Cheque எழுதி பூனம் சேதியிடம் கொடுத்திருக்கிறார். பூனம் சேதியும் தன் வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு Cheque-ஐ வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். Cheque நிராகரிக்கப்பட்டது. மீண்டும் கடுப்பான சேதி, ஜூலை 19, 2013 அன்று வழக்கறிஞர் மூலம் கோனெ மித்ராவுக்கு நோட்டிஸ் அனுப்பி, அக்டோபர் 2013-ல் வழக்கு தொடுக்கிறார்.

கடன் கொடுக்கவே இல்லை

கடன் கொடுக்கவே இல்லை

கோனெ மித்ராவின் வழக்கறிஞர்கள், 2012 - 13 கால கட்டத்தில், பூனம் சேதி ஒரு சிறிய மாடல் தான் அவரிடம் கோனெ மித்ராவுக்கு கொடுக்க 22 லட்சம் ரூபாய் பணமே இருந்திருக்காது. பூனம் சேதி சட்டத்துக்கு புறம்பாக பணம் கொடுக்கும் வியாபாரத்தை செய்து வந்ததாகவும் வாதிட்டார். கோனெ மித்ராவின் எந்த வாதத்தையும், நீதிமன்றம் ஏற்கவில்லை.

தீர்ப்பு

தீர்ப்பு

பூனம் சேதியை இழுத்தடித்ததற்காகவும், நீதிமன்றம் சொல்லியும் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் Cheque கொடுத்து அது ரத்தானதற்காகவும் 6 மாத காலம் சிறை தண்டணை வழங்கி இருக்கிறார்கள். இப்போதும் பூனம் சேதிக்கு கொடுக்க வேண்டிய பண பாக்கியைக் கொடுக்கவில்லை என்றால் மேலும் 3 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் என தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி கெடகி சவான் (Ketaki chavan).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cheque bounce case covicted actress koena mitra got 6 month jail term

cheque bounce case convicted actress koena mitra got 6 month jail term
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X