சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : நம்ம ஊர் இளைஞர்கள் என்னதான் ஐ.டி நிறுவனங்களில் பணி புரிந்தாலும், லீவு விட்டால் போதும் எப்படா நம்ம் வீட்டுக்கு போய், நம்ம ஊர் சாப்பாடை சாப்பிடுவோம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும்.

ஏன்? இதற்காக அடித்து பிடித்து மாலை 6 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, 8 மணிக்குள் கோயம்பேட்டில் பஸ் ஏறுபவர்கள் எத்தனையோ பேர்.

பல மாதங்களாக சென்னை ஹோட்டல்களிலும், பேச்சுலர்களின் கைவண்ணத்திலும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு, நம்ம ஊர் சாப்பாடு என்றாலே அமிர்தம் தான். அதிலும் நம்ம மதுரை அண்ணன்களுக்கு சொல்லவே வேண்டாம்.

 இளைஞர்களின் புலம்பலுக்கு முடிவு?

இளைஞர்களின் புலம்பலுக்கு முடிவு?

காலையில் எழுந்ததும் சமைக்க நேரமில்லாமல் அவதி அவதியாய், அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் இரண்டு இட்லி பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு செல்லும் பொழப்பு தான் இங்கு பலரின் தினசரி ஷெட்யூல். அட்லீஸ்ட் சண்டேயாவது மனதிற்கு பிடித்தாற் போல சாப்பிடலாம் என்றால், அன்றும் ஏதாவது கமிட்மென்ட். இப்படி இருக்கையில் இதற்கெல்லாம் விடை சொல்லத்தான் மதுரை ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், சென்னை நீலாங்கரையில் உள்ளது. ஆமாங்க மெஸ்சினுள் உள்ளே செல்லும் போது ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள, மெஸ்களுக்குள் சென்றது போல் ஒரு பீல்.

 எப்படி இந்த மாதிரியான ஐடியா?

எப்படி இந்த மாதிரியான ஐடியா?

இந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதாமூர்த்தியும் அவரது மனைவி சுவேதா ராஜா வேதாமூர்த்தியும் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.

 உணவு வகைகள் குறைவு தான்?

உணவு வகைகள் குறைவு தான்?

காலையில் 12 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த உணவகம் மாலை 4.30 மணி வரையிலும் மதிய உணவுக்காக திறந்திருக்குமாம். அதிலும் லீவு நாள்கள் என்றால் மதியம் 2 மணிக்கெல்லாம் அனைத்தும் தீர்ந்து போய்விடுமாம். உணவு வகைகள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற பெரிய ஹோட்டல்களை காட்டிலும் இங்கு மிகக் குறைவுதான் என்கிறார் ராஜா.

 தொழில் வித்தியாசம் வேண்டும்?

தொழில் வித்தியாசம் வேண்டும்?

என்ன தான் நானும் மதுரை ஸ்டைலில் உணவை வழங்கப்போகிறேன் என்றும் கூறினாலும், அதிலும் ஒரு வித்தியாசம் என்ற போது தோன்றியது தான் இந்த மண்பாண்ட ஐடியாக்கள். உணவு மட்டும் கலாசாரத்திற்கு ஏற்ப கிராமிய முறைப்படி சமைத்தால் பத்தாது, அதை மக்களுக்கு கொடுக்கும் விதத்திலும் ஒரு மாற்றம் வேண்டும் என்றும் எண்ணினோம். அதிலிருந்து வந்தது தான் இவையெல்லாம். ஆமாங்க.. உணவு பறிமாறும் தட்டு முதல் தண்ணீர் குடிக்கும் டம்ளர் வரை மண்களால் செய்த பொருட்களே. அதுமட்டுமல்ல, மெஸ்சினுல் நுழைந்ததுமே, நான்கு பானைகளில் ஒவ்வொரு விதமான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. சீரகம் தண்ணீர், வெட்டிவேர், ஓமம் தண்ணீர் என கலக்குகிறார்கள். இந்த சூழலை பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது என்கிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள்.

எப்படி இந்த மாதிரியான ஐடியா?

எப்படி இந்த மாதிரியான ஐடியா?

இந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதமூர்த்தியும் அவரது மனைவி சுபா வரதராஜ் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.

 நம்ம ஊர் கிராமிய முறைப்படி சமையல்?

நம்ம ஊர் கிராமிய முறைப்படி சமையல்?

ஆமாங்க.. சமைப்பதற்கு மண் சட்டிகளும், இரும்பு வடை சட்டிகளும், சிலவற்றிற்கு விறகு அடுப்பும், இதையெல்லாவற்றையும் விட, சமைப்பதற்கு வீட்டிலிருந்து அரைத்து எடுக்கப்படும் மசாலா, செக்கு எண்ணெய் என பல விதத்திலும் கிராமிய வாசத்தை கொடுப்பதல் தான் உணவின் ருசியும் கூடுகிறது. மற்ற உணவகங்களுக்கும், இதற்கும் வித்தியாசமே இதுதான். அஜினோமோட்டோ உள்ளிட்ட மசாலாக்கள் எதுவும் ருசிக்காக சேர்க்கப்படுவதில்லை. எல்லாமே வீட்டுமுறைப்படி, அம்மா செய்யும் மசாலாக்கள் தான் என்கிறார்கள்.

 வெள்ளாடு & நாட்டுக் கோழி

வெள்ளாடு & நாட்டுக் கோழி

இங்கு அசைவ உணவு சமைப்பதற்காக நாட்டுக் கோழியும், வெள்ளாடுகளுமே பயன்படுத்தப்படுகிறதாம். இதோடு நண்டு, இறால், மீன் அனைத்தும் பரிமாறப்படுகிறது. இவை அனைத்துமே பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம். மேலும் சாதம் என்று எடுத்துக் கொண்டால் அது சீரக சம்பா அரிசியில் மட்டும் செய்யப்படுகிறதாம்.

 சராசரி வருமானம் எப்படி?

சராசரி வருமானம் எப்படி?

சாதரணமான நாட்களில் 30,000 ரூபாய் வரை கிடைக்கும், இதுவே லீவு நாட்களில் 1 லட்சம் வரையில் கூட வருமானம் இருக்குமாம். எனினும், லாபம் என்பது குறைவு தான். ஏனெனில் நாம் கொடுப்பது அனைத்துமே விலை அதிகமான பொருட்கள் தான். உதராணமாக கடல் உணவுகள் நேரிடையாக கோவளத்திலிருந்து நேரிடையாக மீன் பிடிப்பவர்களிடம் வாங்குவது தான். எல்லாமே புதுமையான பிரஸ்ஸான உணவு பொருட்கள் என அனைத்தும் வாங்குவதால் விலையும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது.

 விலை அதிகமான தரமான பொருட்கள் தான்.

விலை அதிகமான தரமான பொருட்கள் தான்.

நெய் என்றால் கூட அது காங்கேயம் நெய்தான். இதோபோல் சிக்கன் என்றால் அது நாட்டுக்கோழி தான், ஆடு என்றாலே அது வெள்ளாடு தான். இறால். பிரான் என அனைத்தும் விலை அதிகமான, மக்களுக்கு பிடித்த, எந்த வித பிரச்சனையும் இல்லாதது போல் தான் வாங்குவோம். மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் என அனைத்தும் போக குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் இந்த மதுரை தம்பதிகள்.

 மெஸ் ஓலைக்குடிலில் தான்?

மெஸ் ஓலைக்குடிலில் தான்?

பொதுவாக இந்த மாதிரியான மெஸ்கள் மக்களை கவர முழுவதும் ஏசியால் கவரப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், ஓலைக்குடிசையால் வேயப்பட்ட பாரம்பரியத்தை காட்ட இப்படி செய்ததோடு மட்டும் அல்லாமல் இது செயற்கையான கூலிங்க் பெறவே இப்படி செய்திருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.

 இரவு உணவு?

இரவு உணவு?

இரவு உணவுகளில் மதுரையின் மிகப் பிரபலமான கறி தோசையும், பணியாரம், சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, முட்டை பரோட்டா, தோசையில், நெய் தோசை என அசத்துகிறார்கள். இது மட்டும் அல்லாமல், இட்லி சினை இட்லி, முட்டை பணியாரம், பசு நெய் தோசை, கொத்து மெத்து கல் தோசை, கொத்து கெத்து மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, சின்ன வெங்காயா பரோட்டா என இன்னும் பல வகைகளையும் கொடுத்து அசத்துகிறார்கள்.

 சென்னையில் விலை எப்படி?

சென்னையில் விலை எப்படி?

சென்னையை பொறுத்தவரை இதே உணவை மற்ற உணவகங்களில் விலை அதிகம் கொடுத்து தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால் இங்கு மற்ற உணவகங்களை ஒப்பிடும்போது சற்று குறைவு தான் என்றாலும், ருசியும் பாரம்பரியமும் வேறு என்கிறார்கள் இந்த தம்பதிகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good home food and tasty food in Chennai

Good home food and tasty food in Chennai
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X