ஓட்டு பதிவு இயந்திரங்களில் எந்த வித தில்லு முல்லும் செய்ய முடியாது.. மத்திய அரசு அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையே, அவை முற்றிலும் சேதமடையாதவை (completely non-tamperable), அதில் எந்த வித மாற்றமும் செய்யவும் முடியாது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு உறுதிபட தெரிவித்ததுள்ளது.

ஆமாங்க.. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பில் எந்த வித வெளிநாட்டு நிறுவனங்களின் துணையும் இல்லாமல், இரண்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆக இது முற்றிலும் சேதமடையாதவை. பாதுகாப்பானவை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் எந்த வெளிநாட்டு நிறுவனத்துடனும் இது குறித்த ஒப்பந்தம் இல்லை என்றும், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கார் விற்பனை கடும் டல்... உலகம் முழுக்க 10ஆயிரம் பேருக்கு கல்தா கொடுக்க தயாராகும் நிசான் கார் விற்பனை கடும் டல்... உலகம் முழுக்க 10ஆயிரம் பேருக்கு கல்தா கொடுக்க தயாராகும் நிசான்

பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிப்பு

பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிப்பு

மேலும் தொழில்நுட்ப வல்லுனர் குழுவின் வழிகாட்டுதல் படி, இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனங்களால் தயாரிக்கபடுகின்றன.

மின்னணு இயந்திரங்கள் முற்றிலும் சேதமடையாதவை

மின்னணு இயந்திரங்கள் முற்றிலும் சேதமடையாதவை

இந்த மின்னணு இயந்திரங்கள் முற்றிலும் சேதமடையாதவை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அதோடு மின்னணு மெஷின்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்தவை, இதன் பாதுகாப்புக்காக தொழில்நுட்ப ரீதியாக, கடுமையான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் (Sound) எடுக்கப்பட்டுள்ளன என்றும் ரவி சங்கர் கூறியுள்ளார்.

மின்னணு ஓட்டுப்பதிவுக்கு எதிர்ப்பு

மின்னணு ஓட்டுப்பதிவுக்கு எதிர்ப்பு

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, சில எதிர்க்கட்சிகள் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம், நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு எந்திரங்களில் பிரச்சனை (தில்லுமுல்லு) செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டின. இதனால் முன்னர் இருந்தபடி ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வருமாறும் வலியுறுத்தின.ஆனால், அந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியது.

தொழில்நுட்ப வல்லுனர்கள் வழிகாட்டுதல் படி தயாரிப்பு

தொழில்நுட்ப வல்லுனர்கள் வழிகாட்டுதல் படி தயாரிப்பு

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில், கடந்த புதன் கிழமையன்று கேள்வி நேரத்தின்போது, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனங்களால் தயாரிக்கபடுகின்றன. இதற்கு தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுனர் குழு, தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் தொடர்ந்து அளித்து வருகிறது.

வேறு நிறுவனத்துடன் எவ்வித தொழில்நுட்ப ஒத்துழைப்பும் இல்லை

வேறு நிறுவனத்துடன் எவ்வித தொழில்நுட்ப ஒத்துழைப்பும் இல்லை

மேலும் இதில் எந்த வெளிநாட்டு நிறுவனத்துடனும் எவ்வித தொழில்நுட்ப ஒத்துழைப்பும் வைத்துக்கொள்ளாமல், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மெஷின் கள் தொழில்நுட்ப ரீதியாக மிகத் தரமானவை. இவற்றில் எந்த வித பிரச்சனையும் செய்ய முடியாது. இந்த மெஷின்களில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் பயன்படுத்துவதற்கான கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை தேர்தல் கமிஷன் புகுத்தி உள்ளது.

மொத்த செலவு கொள்முதல் இவ்வளவு தான்

மொத்த செலவு கொள்முதல் இவ்வளவு தான்

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதனுடன் நடந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக, இந்த புதிய மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்களையும், அவற்றுடன் கூடிய உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டன. அதற்கு (வரி சேர்க்காமல்) ரூ.2,056 கோடி செலவு ஆனது என்றும் ரவி சங்கர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: evm ஈவிஎம்
English summary

EVMs procurement cost was estimated to Rs 2,056.20 crore

EVMs procurement cost was estimated to Rs 2,056.20 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X