கார் விற்பனை கடும் டல்... உலகம் முழுக்க 10ஆயிரம் பேருக்கு கல்தா கொடுக்க தயாராகும் நிசான்

ஜப்பானின் பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகம் முழுவதும் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ: ஜப்பானின் பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகம் முழுவதும் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார் தயாரிப்பு தொழில் தற்போது கடினமான சூழ்நிலை அடுத்து வரும் 12 மாதங்களுக்கும் நீடிக்கும் என்பதால், வேறு வழியில்லாமல் வேலை நீக்க முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிசான் கார்களின் விற்பனை கடுமையாக சரிவை சந்தித்ததை அடுத்தே ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, ரெனால்ட் நிறுவனம், தான் முதலீடு செய்துள்ள நிசான் மோட்டார் நிறுவனத்தில் மாற்றத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியது. இதன் முதல் நடவடிக்கையாக உலகம் முழுவதும் உள்ள நிசான் நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் நபர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மந்த நிலை

உலகளாவிய மந்த நிலை

உலகளாவிய அளவில் தொழில் உற்பத்தியும், விற்பனையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் சர்வதேச பொருளாதார வளர்ச்சியும் மந்தமாகவே உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை முதல் தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள் உற்பத்தித் துறை என அனைத்துமே சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் வருவாய் இழப்பை சரிக்கட்ட, தற்போது ஆட்குறைப்பு ஆயுதத்தை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனமான நிசான் மோட்டார் நிறுவனமும் தப்பவில்லை என்பது கவலைக்குரிய விசயமாகும்.

கூட்டுத் தயாரிப்பு நிறுவனம்

கூட்டுத் தயாரிப்பு நிறுவனம்

ஜப்பானின் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார் கார்ப்பரேசன். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ளது. மற்ற நாடுகளில் உள்ளது போலவே இந்தியாவிலும் ஃபிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் (Renault) நிறுவனத்துடன் இணைந்து கார் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது.

ரூ.3 லட்சம் கோடி முதலீடு

ரூ.3 லட்சம் கோடி முதலீடு

தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் ஓரகடத்தில் தனது தொழிற்சாலையை கடந்த 2008ஆம் ஆண்டு நிறுவினாலும், 2010ஆம் ஆண்டிலேயே உற்பத்தியை ஆரம்பித்தது. இதுவரையிலும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிசான் மோட்டார் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்சமயம் உலகளாவிய அளவில் வாகன விற்பனை தொடர்ந்து மந்த நிலையில் உள்ளதால் உற்பத்தியும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் அனைத்து வாகன உற்பத்தி நிறுனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.

ஆட்குறைப்பு நடவடிக்கை

ஆட்குறைப்பு நடவடிக்கை

அந்த வகையில் தற்போது நிசான் நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள தனது தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் கணிசமான ஆட்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதமும் உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் கார் விற்பனை கடும் சரிவை சந்தித்ததால், நிசான் மோட்டார் நிறுவனத்தின் லாப விகிதமும் கடுமையாக சரிந்தது.

உற்பத்தி கடும் சரிவு

உற்பத்தி கடும் சரிவு

இந்நிறுவனத்தின் லாபம் குறைந்ததால் வேறு வழியில்லாததால், தற்போது உலகம் முழுவதும் உள்ள தனது தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. தற்போது உலகம் முழுவதுமே வாகன உற்பத்தி கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதே நிலை அடுத்து 12 மாதங்களுக்கும் நீடிக்கும் சூழல் உள்ளது. எனவேதான், நிலைமையை உத்தேசித்து ஆட்குறைப்பு செய்யும் முடிவுக்கு நிசான் மோட்டார் நிறுவனம் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிதி மோசடி

நிதி மோசடி

குறிப்பாக நிசான் மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான கார்லோஸ் கோஸ்ன் (Carlos Ghosn) நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிசான் கார்களின் விற்கனை கடுமையா சரிவை சந்தித்தது. இந்த கைது விவகாரம், நிசான் நிறுவனத்தில் 43 சதவிகித பங்குகளை வைத்துள்ள ஃப்ரான்ஸ் நாட்டின் ரெனால்ட் நிறுவனத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்

இதனையடுத்து, ரெனால்ட் நிறுவனம், தான் முதலீடு செய்துள்ள நிசான் மோட்டார் நிறுவனத்தில் மாற்றத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியது. இதன் முதல் நடவடிக்கையாக உலகம் முழுவதும் உள்ள நிசான் நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் நபர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nissan planning to cut 10000 Jobs around the worldwide

Nissan, Japan's leading car maker, has reportedly sacked about 10 thousand of its employees worldwide. Nissan's net profit fell to a near-decade low in the last business year and it has already warned of
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X