விலைவாசி குறைய பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரணும் - அசோசெம்

பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து பெட்ரோலியப் பொருட்களையும் விரைவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைக்க வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் அமைப்பு ஜிஎஸ்டி ஆணையத்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து பெட்ரோலியப் பொருட்களையும் விரைவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைக்க வேண்டும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் அமைப்பு ஜிஎஸ்டி ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் வாட் வரி விதிப்பு வட்டத்திற்குள் இருப்பதற்கு காரணமே. அதற்கு அதிக பட்ச வரியான முறையே சுமார் 39 சதவிகிதம் மற்றும் 25 சதவிகிதம்(தோராயமாக) இருப்பதுதான். இதுவே ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டால் அதிகபட்சமாக 28 சதவிகித ஜிஎஸ்டி வரியே விதிக்கப்படும். இதனால் மத்திய மாநில அரசுகளின் கஜானவுக்கு செல்லும் வரி வருவாய் குறையும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் பெட்ரோலியப் பொருட்களை இன்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்கு வெளியிலேயே வைத்திருப்பதால் அனைத்து பொருட்களின் உற்பத்தி விலை உயர்வதோடு விலைவாசியும் அதிகரித்து வருவதாக அசோசெம் கவலை தெரிவித்துள்ளது.

என்னப்பா சொல்றீங்க உடைகளின் மீது அணியக் கூடிய ஏசியா.. வெறும் 9,000 ரூபாய்தானா.. இது நல்லா இருக்கே! என்னப்பா சொல்றீங்க உடைகளின் மீது அணியக் கூடிய ஏசியா.. வெறும் 9,000 ரூபாய்தானா.. இது நல்லா இருக்கே!

அதுக்கு பதிலாக இது

அதுக்கு பதிலாக இது

வாட் வரி, நுழைவு வரி, சுங்க வரி என பலதரப்பட்ட வரிமுறைகளால் மத்திய மாநில அரசுகளுக்கு முறையாக வரவேண்டிய வரி வருவாய் தடைபடுகின்றது என்று நொண்டி சாக்கு சொல்லி, ஒரே நாடு அதேபோல் ஒரே வரி என்று முழக்கமிட்டு சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி வரிமுறையில் அனைத்து பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்படும் என்றும் இதனால் மூலப்பொருட்கள் முதல் முழுமை பெற்ற பொருட்கள் வரையிலும் ஒரே விதமான வரியே அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

பெட்ரோலியப் பொருட்கள்

பெட்ரோலியப் பொருட்கள்

மத்திய அரசு உத்தரவாதம் அளித்ததுபோல் நடக்காமல், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன. அதே சமயத்தில் பெட்ரோலியப்பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரப்படாமல் மிகவும் சாதுர்யமாக வாட் வரி விதிப்பு வட்டத்திலேயே முடக்கப்பட்டன.

அதிகபட்ச வரி விகிதம்

அதிகபட்ச வரி விகிதம்

பெட்ரோலியப் பொருட்கள் வாட் வரி விதிப்பு வட்டத்திற்குள் இருப்பதற்கு காரணமே. அதற்கு அதிக பட்ச வரியான முறையே சுமார் 39 சதவிகிதம் மற்றும் 25 சதவிகிதம்(தோராயமாக) இருப்பதுதான். இதுவே ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டால் அதிகபட்சமாக 28 சதவிகித ஜிஎஸ்டி வரியே விதிக்கப்படும். இதனால் மத்திய மாநில அரசுகளின் கஜானவுக்கு செல்லும் வரி வருவாய் குறையும்.

ஜிஎஸ்டியில் இணைக்கப்படும்

ஜிஎஸ்டியில் இணைக்கப்படும்

இதனை தவிர்ப்பதற்காகவே மத்திய அரசு இன்னமும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வட்டத்திற்குள் இணைக்காமல் போக்கு காட்டி வருகிறது. ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக நிதியமைச்சரும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர அதி தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறோம். விரைவில் கொண்டு வந்துவிடுவோம் என்று நம்பிக்கை அளித்து வருகிறார். ஆனால் இன்னும் இணைத்த பாடில்லை.

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

கடந்த ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியே அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அதற்கு முன்பாக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோலியப் பொருட்களை கண்டிப்பாக ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் இந்திய வர்த்தக மற்றும் தொழில்கூட்டமைப்பும் (The Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அசோசெம் கோரிக்கை

அசோசெம் கோரிக்கை

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஏன் இன்னும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வட்டத்திற்குள் இணைக்கவில்லை. இதனால் மூலப்பொருட்கள் முதல் முழுமை பெற்ற பொருட்கள் வரை அனைத்துமே விலை அதிகரித்துள்ளது. ஆகவே வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலாவது பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசோசெம் கேட்டுக்கொண்டுள்ளது.

வரிப்பயனை பெறமுடியும்

வரிப்பயனை பெறமுடியும்

மேலும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டால் தான் பெரும்பாலான மூலப் பொருட்களுக்கு உள்ளீட்டு வரிப்பயனை (Input Tax Credit) முழுமையாக அறுவடை செய்ய முடியும் என்றும், இதற்காகவே விரைவில் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைக்க வேண்டும் என்றும் அசோசெம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petroleum products should be cover under GST- ASSOCHAM

The GST council to immediately incorporate all petroleum products, into the GST tax regime. The two-year period for keeping petroleum products outside GST is almost over, said Assocham.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X