சியோமிக்கு அதிர்ச்சி கொடுத்த பிபிகே எலக்ட்ரானிக்ஸ்.. அடுத்தது என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான சியோமி இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மாபெரும் வர்த்தக வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதிலும் இந்தியாவில் இதன் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது.

 

இதைத் தான் அனைத்து முன்னணி ஊடகங்களும் பரப்பி வந்தது, ஆனால் அனைவரும் கவனிக்க மறந்த ஒரு நிறுவனம் பிபிகே எலக்ட்ரானிக்ஸ்.

பிபிகே எலக்ட்ரானிக்ஸ்

பிபிகே எலக்ட்ரானிக்ஸ்

பலருக்கும் குழப்பம் வரலாம், இது என்னடா பிபிகே எலக்ட்ரானிக்ஸ், காதில் கூடக் கேட்காத பெயராக இருக்கிறதே என்று. பிபிகே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தான் விவோ, ஓப்போ, ரியல்மீ மற்றும் ஒன்பிளஸ் பிராண்டுகளின் தாய் நிறுவனம்.

விற்பனை

விற்பனை

பிராண்டு வேறு வேறாக இருந்தாலும், தாய் நிறுவனம் என்னவோ ஒன்னு தான் என்பதால் இந்த நான்கு நிறுவனங்களின் விற்பனையும் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை

சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வருவது என்னவோ உண்மை தான், ஆனால் இந்த ஜூன் மாதம் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் கீழ் இருக்கும் நிறுவனங்கள் சுமார் 30 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் சியோமி 28 சதவீத சந்தையை மட்டுமே பிடித்துள்ளது.

தொடர் வளர்ச்சி
 

தொடர் வளர்ச்சி

இந்தியாவில் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் ஜூன் 2018இல் 24 சதவீத சந்தையும், மார்ச் 2019இல் 27 சதவீத சந்தையும், ஜூன் 2019இல் 30 சதவீத சந்தையையும் பிடித்துத் தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சாம்சங், ஆப்பிள்

சாம்சங், ஆப்பிள்

சியோமி, பிபிகே எலக்ட்ரானிக்ஸ் இரண்டும் சாம்சங் நிறுவன வர்த்தகத்தைப் பிரிப்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆப்பிள் நிறுவன வர்த்தகத்தை அதிகளவில் பிடித்தது பிபிகே எலக்ட்ரானிக்ஸ் மட்டும் தான்.

பிபிகே தலைவர்

பிபிகே தலைவர்

பிபிகே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் Duan Yongping. இந்த நிறுவனம் விவோ, ஓப்போ, ரியல்மீ மற்றும் ஒன்பிளஸ் பிராண்டுகளில் ஸ்மார்ட்போன் தயாரிப்பது மட்டுமல்ல டிவி, ஹெட்போன், ப்ளூ ரே பிளேயர் எனப் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிகிறது.

அடுத்தது என்ன..?

அடுத்தது என்ன..?

இதன் மூலம் இனி வரும் நாட்களில் இரு நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி உருவாகும் எனத் தெரிகிறது. சியோமி தயாரிக்கும் அனைத்து பொருட்களும் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பதால் இந்தியாவில் இனி இரு நிறுவன பொருட்களும் அதிகளவிலான விலை குறைக்கப்பட்டுப் போட்டிப் போட தயாராகும்.

மக்களுக்குக் கொண்டாட்டம் தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Shock to Xiaomi, unknown BBK company steals the Show

Big Shock to Xiaomi, unknown BBK company steals the ShowChinese handset maker Xiaomi may have retained the top spot in the Indian smartphone market for the eighth consecutive quarter ended in June. But an under-the radar Chinese company — BBK Electronics, which is the holding company behind Vivo, Oppo, Realme and OnePlus — is close on Xiaomi’s heels
Story first published: Monday, July 29, 2019, 9:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X