அதானி 2.0 ஆரம்பம்..! ரூ. 9,600 கோடி முதலீட்டில் 10 மாநிலத்தில் வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இரு தொழிலதிபர்களின் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சி அடைந்தது. அம்பானி ஒருபக்கம் ஜியோ, டோட்டா சென்டர், ஆன்லைன் - ஆப்லைன் ஷாப்பின் எனப் பிசியாக இருக்கும் வேளையில். அதானி தனது வேலையைத் துவங்கியுள்ளார்.

 

இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு

வாகனங்களுக்குச் சில்லறை விற்பனையிலும், வீடுகளுக்கு நேரடியாகப் பைப் மூலம் எரிவாயுவைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்தைத் தான் தற்போது அதானி கையில் எடுத்துள்ளார்.

கூட்டணி

கூட்டணி

இத்திட்டத்திற்காக இந்தியன் ஆயில் கார்ப் உடன் அதானி கேஸ் கூட்டணி வைத்து சுமார் 9600 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டத்திற்கான உள்கட்டமைப்பு வேலைகளைத் துவங்க உள்ளதாக இக்கூட்டணி நிறுவனமான IndianOil-Adani Gas Pvt Ltd (IOAGPL) தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு 50:50 பங்கீட்டில் இக்கூட்டணி நிறுவனம் உருவானது குறிப்பிடத்தக்கது.

10 மாநிலங்கள்

10 மாநிலங்கள்

இக்கூட்டணி நிறுவனம் இந்தியாவில் 10 மாநிலங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில், தற்போது 2 மாநிலங்களில் வர்த்தகம் செய்ய உரிமம் பெற்றுள்ளது.

போட்டி
 

போட்டி

இத்தனை வருடங்களாக IOAGPL நிறுவனம் பல்வேறு ஏலத்தில் கலந்துகொண்டு உரிமங்களைப் பெற முயற்சி செய்து வந்தது. இந்த ஏலங்கள் அனைத்தும் பெட்ரோலியம் மற்றும் நேச்சுரல் கேஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையில் கட்டுப்பாட்டில் நடக்கிறது.

வர்த்தகம்

வர்த்தகம்

இத்திட்டத்தின் மூலம் IOAGPL நிறுவனம் வீடுகளில் சமையலுக்குத் தேவைப்படும் எரிவாயு முதல் வாகனங்களுக்கு நிரப்பும் எரிவாயு, தொழிற்துறை நிறுவனங்களுக்குத் தேவைப்படும் எரிவாயு வரையில் அனைத்தையும் விநியோகம் செய்யும் மாபெரும் சிட்டி கேஸ் விநியோக திட்டம்.

நடைமுறையில் இருக்கும் மாநிலங்கள்

நடைமுறையில் இருக்கும் மாநிலங்கள்

ஏற்கனவே இந்தியாவில்

சண்டிகர், அலகாபாத், பானிபட், தமன், உத்தம சிங்க நகர், எர்ணாகுளம், தார்வாட் மற்றும் புலந்த்சாஹர் ஆகிய சுமார் 8 பிராந்தியங்களில் இவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் தென் கோவா-விற்கு வர உள்ளது.

மூலதனம்

மூலதனம்

2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் IOAGPL கூட்டணி நிறுவனம் 10க்கும் அதிகமான இடங்களை வென்றுள்ள நிலையில், இப்பகுதியில் சிட்டி கேஸ் விநியோக திட்டத்தைச் செயல்படுத்த 9600 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. இதற்கான வங்கி உத்திரத்தைப் பெற வேலைகளைத் தான் தற்போது IOAGPL நிர்வாகம் செய்து வருகிறது.

லாபம்

லாபம்

வல்லரசு நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஒவ்வொரு வீடுகளிலும் பைப் இணைப்பில் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் இது என்பதால், இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால வர்த்தகமும், லாபம் பெற முடியும். இது அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருவாயை அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani JV to invest Rs 9,600 cr in city gas projects

Adani JV to invest Rs 9,600 cr in city gas projects
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X