CCD Founder V G Siddhaartha-வுக்கு அழுத்தம் கொடுத்த முதலீட்டாளர்கள், வருமான வரித் துறை இயக்குநர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்களூரு, கர்நாடகா: முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் CCD Founder V G Siddhaartha நேற்று (ஜூலை 29, 2019) மாலையில் இருந்து காணவில்லை.

கடைசியாக CCD Founder V G Siddhaartha-வை பார்த்த கார் ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் தொடங்கி அவர் செல்போனில் பேசியவர்கள், நேரடியாகச் சென்று பேசியவர்கள் என பலரிடமும் கர்நாடக காவல் துறை துருவி துருவி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

CCD என இளசுகளால் செல்லமாக அழைக்கப்பட்ட Cafe Coffee Day தான் இந்தியாவின் மிகப் பெரிய காபி செயின் கடை. இந்த CCD Founder V G Siddhaartha தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய காபி எஸ்டேட்டையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காபி டே நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மாயத்தால் விலை சரியும் காபி டே பங்குகள்..! காபி டே நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மாயத்தால் விலை சரியும் காபி டே பங்குகள்..!

அழுத்தம்

அழுத்தம்

CCD Founder V G Siddhaartha காணாமல் போவதற்கு முன், தன் ஊழியர்கள் மற்றும் சக பணியாளர்களுக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பதாகச் சொல்கிறார்கள். இது இணையம் முழுக்க சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை CCD நிறுவன தரப்போ, ஊழியர்களோ அல்லது CCD Founder V G Siddhaartha-த்தின் குடும்பமோ, அந்தக் கடிதத்தை அவர் தான் எழுதினார் என உறுதிபடுத்தும் ரீதியில் எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அந்தக் கடிதத்தில், வருமான வரித் துறையினர், தனியார் ஈக்விட்டி பார்ட்னர் போன்றவர்கள் அதிகப்படியான அழுத்தம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு CCD நிறுவனத்தின் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் விதத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.

பங்குகளை வாங்கச் சொல்லி அழுத்தம்

பங்குகளை வாங்கச் சொல்லி அழுத்தம்

"நான் மிக நீண்ட காலமாக போராடினேன். ஆனால் இன்று என்னால் போராட முடியவில்லை. இன்று நான் என் முயற்சிகளைக் கை விடுகிறேன். நம் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்திருக்கும் ஒரு தனியார் ஈக்விட்டி பார்ட்னர் ஒருவர், தான் வாங்கி இருக்கும் பங்குகளை மீண்டும் என்னை வாங்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நண்பரிடம் ஒரு பெரிய தொகையை கடன் வாங்கி, ஒரு பகுதி பங்குகளை வாங்கிவிட்டேன். இப்போது மற்ற முதலீட்டாளர்களிடம் இருந்தும், அதே போல மிக அதிகமாக அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது" என அந்தக் கடிதத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.

வருமான வரித் துறை

வருமான வரித் துறை

அதோடு "முன்னாள் வருமான வரித் துறை இயக்குநர், எங்கள் பங்குகளை வருமான வரித் துறையோடு இணைத்துவிடுவேன் எனவும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இப்படி இரண்டு முறை நடந்திருக்கிறது. இந்த இரண்டு முறையும் எங்கள் மைண்ட்ரீ டீல்களை நடக்க விடாமல் செய்வதற்காக செய்தார்கள். வருமான வரித் துறை கேட்ட படி CCD நிறுவனம் தன்னுடைய வருமான வரிப் படிவத்தை மறு தாக்கல் செய்த பின்னும், எங்கள் CCD பங்குகளை வருமான வரித் துறை பறிமுதல் செய்து கொண்டது கொஞ்சம் கூட சரியில்லை. இதனால் CCD நிறுவனத்தில் பெரிய அளவில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது" என அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சொத்து பத்து

சொத்து பத்து

மேலும் "நான் யாரையும் ஏமாற்றுவதோ அல்லது தவறாக வழிநடத்துவதோ என் நோக்கம் இல்லை. ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன். ஒரு நாள் நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள், என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். நம் காபி டே சொத்துக்கள் மற்றும் அதன் தோராய சொத்து மதிப்புகளையும் இதோடு இணைத்திருக்கிறேன். நம் சொத்து மதிப்பு நம் கடன் தொகையை விட கூடுதலாக இருக்கிறது. எனவே நாம் கடன் வாங்கிய எல்லோருக்கும் கடனைத் திருப்பிச் செலுத்த உதவும்" என கடிதம் முடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சொத்து மற்றும் கடன் விவரங்கள் பொது வெளியில் வெளியாகவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தின் பின் சில காகிதங்கள் இருப்பதையும், அதை ஒரு ஸ்டேப்ளர் பின்னால் இணைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cafe Coffee Day CCD Founder V G Siddhaartha face pressure from PE investor income tax director

Cafe Coffee Day CCD Founder V G Siddhaartha face pressure from PE investor income tax director
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X