CCD Founder V G Siddhaartha மாயம்..! அதிர்ச்சி தரும் கார் ஓட்டுநர் விளக்கம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்களூரு, கர்நாடகா: நேற்று (ஜூலை 29, 2019) மாலை நேரத்தில் CCD Founder V G Siddhaartha-வை கடைசியாகப் பார்த்தவர், அவருடைய கார் ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் தானாம்.

 

V G Siddhaartha வெறும் காபி டேவின் நிறுவனர் மட்டுமல்ல. இவர் முன்னாள் கர்நாடக முதல் அமைச்சரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கூட.

ஆகையால் ஒட்டுமொத்த கர்நாடகமே பதற்றத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. எஸ் எம் கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள், டி வி சிவகுமார் போன்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், தற்போதைய முதல்வர் எடியூரப்பா என பலரும் எஸ் எம் கிருஷ்ணாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காலை வேலைகள்

காலை வேலைகள்

இனி CCD Founder V G Siddhaartha-வை கடைசியாகப் பார்த்த அவருடைய கார் ஓட்டுநர் பசவராஜ் மொழியில் இருந்து... "நான் தாங்க சாருக்கு (CCD Founder V G Siddhaartha) மூனு வருஷமா டிரைவரா இருக்கேன். நேத்து காலையில அவரோட பெங்களூரு வீட்டுக்கு சுமார் 8 மணிக்கு வேலைக்கு போனேன். அதுக்கு அப்புறம் விட்டல் மல்லையா சாரோட ஆலுவலகத்துக்கு போனேன். அப்புறம் காலையில 11 மணிக்கு திரும்ப வீட்டுக்கே வந்துட்டேன். அப்புறம் மதியம் 12.30 மணி போல சார் (CCD Founder V G Siddhaartha) சகலேஷ்பூருக்கு போகனும்னு சொன்னாரு" என கொஞ்சம் நிறுத்துகிறார் பசவராஜ்.

சற்று நேரம் முன்

சற்று நேரம் முன்

"அவரோட இன்னோவா கார்ல தான் கெளம்புனோம். சகலேஷ்பூருக்கு போற வழியிலேயே, மங்களூர் பக்கம் ஓட்டச் சொன்னாரு. மங்களூரூ சர்கில தொட்றத்துக்கு முன்னாடியே ஒரு லெஃப்ட் எடுத்து சைட்ட பாக்கப் போலாம்ன்னு சொன்னாரு. அப்படியே கேரளா ஹைவேஸ தொட்டு சுமார் 3 - 4 கிலோமீட்டர் ஓட்டுனேன். ஒரு ஆத்துப் பாலம் வந்துச்சு. திடீருன்னு கீழ இறங்கிட்டாரு. என்னைய அந்த ஆத்துப் பாலத்தோட கடைசில போய் நிக்கச் சொன்னாரு" என மூச்சு வாங்குகிறார்.

காணாமல் போகும் போது
 

காணாமல் போகும் போது

"நானும் கார பாலத்தோட கடைசில நிறுத்திட்டு கீழ இறங்குனப்ப, என்ன திருப்பி பாலத்தோடு மறு முனைக்கு போகச் சொன்னாரு. நானும் பாலத்தோட மறு முனைக்கு போய்ட்டு காத்திருந்தேன். சுமார் நைட்டு எட்டு மணி சாருக்கு (CCD Founder V G Siddhaartha) கால் பண்ணா கால் போகல. மொபைல் சுவிட்ச் ஆஃப்-ன்னு வந்துச்சு. சரின்னு முதலாளியோட (V G Siddhaartha) மகனுக்கு கால் பண்ணேன். அவரும் முதலாளிக்கு கால் பண்ணி பாத்தாராம். அவருக்கு கூட கால் போகலன்னு சொன்னாங்க. அதான் போலீஸ்கிட்ட புகார் கொடுத்தேன்" என முடிக்கிறார் பசவராஜ் பாட்டீல்.

காவல் துறை

காவல் துறை

CCD Founder V G Siddhaartha-த்தைத் தேடிக் கண்டுபிடிக்க, மோப்ப நாய்களைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம். அந்த நாய்கள் பாலத்தின் மத்தியில் நின்றுவிட்டதாம். படகு சேவை மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியோடு நேத்ராவதி ஆற்றில் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். தேடுதல் பணியில் 200 காவலர்கள் மற்றும் 25 படகுகள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்களாம். அதோடு CCD Founder V G Siddhaartha கடைசியாகப் பேசியவர்களிடமும் விசாரித்துக் கொண்டிருப்பதாக, மங்களூரூ காவல் துறை ஆணையர் சந்தீப் பாட்டீல் சொல்லி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cafe Coffee Day CCD Founder V G Siddhaartha missing incident explanation from his driver

Cafe Coffee Day CCD Founder V G Siddhaartha missing incident explanation from his driver
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X