Cafe Coffee Day : சித்தார்த்தின் இந்த முடிவு வருத்தமடைய செய்கிறது.. KKR நிறுவனம் வருத்தம்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR நிறுவனம், Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரான சித்தார்த்தா, கடந்த திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போனது மிக வருத்தமடைய செய்வதாக, கடந்த செவ்வாய்கிழமையன்று அறிக்கையில் கூறியுள்ளது.

 

அதோடு அந்த நிறுவனம் இது குறித்து கூறுகையில், சித்தார்த்தா நிறுவன வாரியத்திற்கும் அவர் நிறுவிய Cafe Coffee Day சங்கிலியின் ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், சித்தார்த் ஜூலை 27ம் தேதியன்று, ஒரு தனியார் private equity partners நிறுவனத்திடமிருந்து பங்குகளை திரும்ப வாங்குமாறும் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளாராம்.

 
Cafe Coffee Day : சித்தார்த்தின் இந்த முடிவு வருத்தமடைய செய்கிறது.. KKR  நிறுவனம் வருத்தம்..

அதோடு பிரபலமான இந்த காஃபி நிறுவனத்தில் 9 வருடங்களுக்கு முன்பே, தாங்கள் முதலீடு செய்ததாகவும், கடந்த ஆண்டு தான் இதிலிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளது.

மேலும் முன்னர் 10.3 சதவிகித பங்கினை வைத்திருந்ததாகவும், தற்போது 6 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்த நேரத்தில் எங்களது வருத்தங்களை குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் விஜி சித்தார்த்தாவை நம்புகிறோம். சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம் என்றும் கே.கே.ஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தனியார் ஈக்விட்டி ஃபண்டுகளில், ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை ஒரு குறுகிய முதலீட்டு எல்லைகள் உள்ளன. அதில் அவை முதலீடு செய்யப்பட்ட நிறுவனம் வளர உதவுகின்றன என்றும் கே.கே.ஆர் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனான 57 வயதான சித்தார்த்தா கடனளித்தவர்கள் மற்றும் வருமான வரித் துறையின் அழுத்தத்தையும் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரின் அந்த வெளிப்படையான தற்கொலை குறிப்பில் இயக்குனர் மட்ட வருமான வரி அதிகாரியின் பெயரையும் கூட வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஹெச்.டி.எஃப்.சி சித்தார்த்தாவுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்திற்கும் எந்த வெளிப்பாடும் இல்லை என்றும் மறுத்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி பெங்களூரில் உள்ள குளோபல் வில்லேஜ் டெக் பார்க் என்ற திட்டத்திற்காக கடன் வழங்கியது என்றும், முழு கடனும் 2019 ஜனவரியில் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்றும், இன்றைய தேதியின் படி காபி டே எண்டர்பிரைசஸ் குழுவிற்கு எந்த வெளிப்பாடும் இல்லை என்று ஹெச்.டி.எஃப்.சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cafe coffee day siddhartha
English summary

VG Siddharth's disappearance: KKR says still owns over 6% in Cafe Coffee Day

VG Siddharth's disappearance: KKR says still owns over 6% in Cafe Coffee Day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X