போன எடுத்தா சும்மா நச்சு நச்சுங்கிறானுங்க.. தொல்லை தரும் அழைப்புகளை தடுக்க இயலாது.. RBI தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : போன எடுத்தா சும்மா நச்சு நச்சுங்கிறானுங்க.. என்ற கவுண்டமணியின் காமெடி வார்த்தைகளுக்கு ஏற்ப, அடிக்கடி நமது செல்போன்களில் அழைப்புகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அதிலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்து, இது போன்று கடன் தருவதாகக் கூறி, தொல்லை கொடுக்கும் தொலைபேசி அழைப்புகளை தடை செய்வது தர்க்க ரீதியாக இருக்காது என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

ஆமாங்கா.. கடந்த சில ஆண்டுகளாக தொலைபேசி வாயிலாக, கடன் தருவதாக, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வியாபார யுக்திக்காக அழைப்பு விடுத்து வருகின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தான், இது போன்ற அழைப்புகளை தடை செய்வது குறித்து ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுபாஷ் அகர்வால் என்பவர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

தடை செய்வது சரியாக இருக்காது?

தடை செய்வது சரியாக இருக்காது?

இது குறித்து பதிலளித்த ரிசர்வ் வங்கி, இவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகளை தடை செய்வது என்பது சரியாக இருக்காது எனவும், இது சரியான வழியாக இருக்காது எனவும், தொலைபேசி வாயிலாக கடன் வழங்கும், இத்தகைய நிறுவனங்களின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற அழைப்புகளை தடை செய்வது என்பது, தர்க்க ரீதியாக சரியானதாக இருக்காது என்றும் கூறியுள்ளது. மேலும் கடன் பெற விரும்புபவர், கடன் பெறுவதற்கு முன்பு இது குறித்த விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

பரிந்துரைகளை நிராகரித்த ரிசர்வ் வங்கி?

பரிந்துரைகளை நிராகரித்த ரிசர்வ் வங்கி?

மேலும் தொலைபேசி அழைப்புகள் குறித்து மட்டுமல்லாமல்லாது, இத்தகைய நிறுவனங்களின் பாதுகப்பற்ற கடன்களுக்காக வாடிக்கையாளர்களை கவர்திழுப்பது, வட்டி விகிதங்களை சரி செய்வது, அவற்றுக்கு வங்கிகள் நிதியளிப்பதை தடை செய்வது உள்ளிட்டவை குறித்தும் சில பரிந்துரைகளை வழங்கி இருந்தார் சுபாஷ் . ஆனால், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டாளர்கள் அவருடைய பரிந்துரைகளையும் நிராகரித்து விட்டனர்.

வங்கியின் ஆட்டோ எலக்ட்டானிக் முறையில் கடன்
 

வங்கியின் ஆட்டோ எலக்ட்டானிக் முறையில் கடன்

முன் தேதியிட்ட காசோலை அல்லது வங்கியின், ஆட்டோ எலெக்ட்ரானிக் முறையின் அடிப்படையில், இந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மொபைல் போன் மூலமாக, பாதுகாப்பற்ற கடனுக்கான அனுமதியை வழங்குகின்றன. பிறகு கடன் பெற்றவர்கள், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் சுபாஷ் கூறியுள்ளார்.

கடன் விதிமுறைகளை முறைப்படுத்த வேண்டும்?

கடன் விதிமுறைகளை முறைப்படுத்த வேண்டும்?

இதோடு இத்தகைய கடன் குறித்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இல்லையேல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் கடனை திருப்பியளிக்க முடியாமல் போகும் கடன்தாரர்கள் தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்படும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது வியாபார யுக்தி

இது வியாபார யுக்தி

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், செல்லிடப்பேசிகள் மூலம் கடன் வழங்குவதாக தெரிவிப்பது என்பது, அந்த் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் மற்றும் வியாபார உத்தியாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட திட்டங்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் இது போன்ற அழைப்புகள் வாடிக்கையாளர்களை கடன் வாங்கச் சொல்லி நிர்பந்தித்தால் அது விவாதத்துக்கு உரிய விஷயம் என்றும் கூறியுள்ளது.

பாதுகாப்பை வழங்குவது என்பது எப்போதும்  சாத்தியமில்லாதது

பாதுகாப்பை வழங்குவது என்பது எப்போதும் சாத்தியமில்லாதது

பாதுகாப்பற்ற கடன்கள் என்பதை பொறுத்தவரை, இந்த நிதி நிறுவனங்கள் மருத்துவ அவசரத்துக்கும், கல்வி மற்றும் திருமணத்துக்கும் கடன் வழங்குகின்றன. மற்ற கடன்கள், அளவில் மிகவும் சிறியதே. கடன் வாங்குபவர்களுக்கு, கடன்களை பெறுவதற்கான பாதுகாப்பை வழங்குவது என்பது எப்போதும் சாத்தியமில்லாதது. பாதுகாப்பாற்ற கடன்களுக்கான உண்மையான தேவையும் இருக்கவே செய்கிறது. இந்த நிலையில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பாதுகாப்பற்ற கடன்களை வழங்கும்போது, கடன் வாங்குபவர்களின் எல்லையையும், கடன் பெறுவோருடைய தகுதியையும் அறிந்து, அதற்கேற்ப கடன் வழங்க வேண்டும் இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banning pesky calls from NBFCs: RBI says its not possible

Banning pesky calls from NBFCs: RBI says its not possible
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X