என்னப்பா சொல்றீங்க.. விவசாய வருமானமுன்னு சொல்லி ரூ.500 கோடி வரி மோசடியா.. CAG கண்டுபிடிச்சிடுச்சா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : விவசாய வருமானத்திற்கென வரி சலுகைகள் இருப்பதால், கடந்த ஆண்டு விவசாய வருமானம் என கூறப்பட்டு கிட்டதட்ட 500 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக CAG கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் ஒரு தனி நபர் விவசாயத்தின் மூலம் சம்பாதிக்கும் வருமானம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது ஒரு கவர்ச்சிகரமான வகைப்படாக அமைகிறது.

இந்த வரி விலக்கு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டு, முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

விவசாயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வரி ஏய்ப்பு

விவசாயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வரி ஏய்ப்பு

ஆனால் இந்த வரி விலக்கையும் தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு, சிலர் தங்களது வருமானத்தை விவசாய வருமானமாகக் காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகக் CAG (Conptroller and Auditor General) கண்டுபிடித்துள்ளது.

வருமான வரி சோதனை இடவில்லை

வருமான வரி சோதனை இடவில்லை

அதுமட்டும் அல்லாது, கடந்த ஆண்டு விவசாய வருமானமாகக் காட்டப்பட்ட தொகையில், சுமார் 500 கோடி ரூபாய் வருமான கணக்குகளை, வருமான வரித்துறை சோதனை இடவில்லை என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும் இதுமட்டுமல்ல இது தவிர ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் CAG தெரிவித்துள்ளது.

சரியான ஆவணங்கள் இல்லை

சரியான ஆவணங்கள் இல்லை

மேலும் இதன் படி 6,778 அறிக்கைகள் சந்தேகப்படும் படியாக உள்ளது என்றும், இதன் மூலம் 1,527 அறிக்கைகள் எந்தவித ஆவணங்களும் இன்றி உள்ளதாகவும், அதோடு 716 கணக்குகளில் தேவையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 1,270 கணக்குகள் மூலம் விவசாய வருமானம் என்று கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான சரியான கணக்கு வழக்குகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் தான் அதிகப்படியான வழக்குகள்

மஹாராஷ்டிராவில் தான் அதிகப்படியான வழக்குகள்

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த லிஸ்டி ல் மஹாராஷ்டிரா தான் முன்னிலையில் உள்ளது. ஆமாங்க.. மஹாராஷ்டிராவில் சந்தேகப்படும் படியாக 484 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 303 வழக்குகளும், தமிழகத்தில் 565 வழக்குகளில், 286 (கிட்டதட்ட 50%) வழக்குகளுக்கு சரியான ஆவணம் இல்லை என்றும் சி.ஏ.ஜி கூறியுள்ளது. இதற்கு அடுத்தாற்போல் கர்நாடகம் உள்ளது. மொத்தம் 502 வழக்குகளில் 229 வழக்குகளில் (45%) சரியான ஆவணம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கணக்கில் வராத பணத்தை, விவசாய வருமானமாக காட்டியிருக்கலாம்?

கணக்கில் வராத பணத்தை, விவசாய வருமானமாக காட்டியிருக்கலாம்?

தகுதி வாய்ந்த கணக்குதாரர்களுக்கு எப்படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் assessing officers தெளிவாகக் இதில் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. அதிலும் குறிப்பாக மஹாராஷ்டிராவில் எந்த ஒரு ஆவணமும் இன்றி வருமான வரித்துறை எந்த ஒரு சோதனையும் இன்றி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணக்கில் வராத வருமானத்தை விவசாய வருமானம் என கணக்கு காட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்க வேண்டும்

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்க வேண்டும்

மேலும் இது போன்ற மோசடிகளை தடுக்க, வருமான வரித் துறை 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் விவசாய வருமானம் காட்டும் இடங்களை சோதனை செய்திருக்க வேண்டும். இவ்வாறு சோதனை நடத்தப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகை சரியாக கிடைக்கும். இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CAG found that agricultural income of Rs 500 crore received tax benefits without adequate verification

CAG found that agricultural income of Rs 500 crore received tax benefits without adequate verification
Story first published: Thursday, August 1, 2019, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X