Cafe Coffee Day: சித்தார்த்தாவிற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்.. அதிர்ச்சி தரும் தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடந்த ஜூலை 29 அன்று மாலை திடீரென காணமல் போனதும், கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில் காணமல் போன 36 மணி நேரத்திற்கு பின்பு நேத்ராவதி ஆற்றங்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் அவருக்கு 8,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஃபி டே நிறுவனறுக்கு அதிகப்படியான கடன் பிரச்சனை அழுத்தம் இருந்திருக்கலாம், இதனால் இந்த தீவிர நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Budget 2019-க்குப் பின் 7 சதவிகிதம் சரிந்த சென்செக்ஸ்..! இது முதலீடு செய்ய நல்ல நேரமா..?

CCD நிறுவனத்திற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்

CCD நிறுவனத்திற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்

இந்தியாவின் முன்னணி காஃபி நிறுவனமான Cafe Coffee Day நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தாவிற்கு 11,000 கோடி ரூபாய் வரை கடன் இருக்கலாம் என்று, பங்கு சந்தை மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (stock exchanges and the Ministry of Corporate Affairs ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பங்கு சந்தையில் பட்டியிடப்பட்ட இந்த காஃபி நிறுவனம் (Coffee Day Enterprises Limited (CDEL)) கடந்த மார்ச் 31 வுடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டிலேயே 6,547 கோடி ரூபாய் கடனை பதிவு செய்திருந்தது.

தனியார் அடமான கடன் எவ்வளவு என்று தெரியவில்லை

தனியார் அடமான கடன் எவ்வளவு என்று தெரியவில்லை

மேலும் இந்த நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைத்ததில் நிலுவையில் உள்ள கடன் தொகை 3,522 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. அதிலும் கடன் 2014 முதல் இந்த கடன் தொகை நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவிர CDEL திரட்டிய 1,028 கோடி ரூபாய் கடனுக்கு, தனது தனிப்பட்ட உத்திரவாதங்களை அளித்துள்ளதாகவும், இது கடந்த 2017 - 2018ம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிறுவனம் தனியார் ஹோல்டிங் நிறுவனத்திடம் அடமானம் வைத்து எவ்வளவு வாங்கியுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர் பங்கு வீழ்ச்சியால் அதிகரித்த அழுத்தம்
 

தொடர் பங்கு வீழ்ச்சியால் அதிகரித்த அழுத்தம்

இந்த நிலையில் சித்தார்த்தாவின் காபி சாம்ராஜ்யத்தின் மொத்த கடன் குவியல் 11,096 கோடி ரூபாயாக உள்ளது. இதை சமாளிக்க முடியாத நிலையில் தான், இந்த விபரீத முடிவை அவர் எடுத்திருக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் கஃபே காஃபி டேயின் பங்குகளின் விலை படு வேகமாக வீழ்ச்சியடைந்ததால், சித்தார்த்தாவின் பிரச்சனைகள் மேலும் அதிகரித்தன. கடனளித்தவர்கள் நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்ப்பதற்காக அதிக பங்குகளை அடகு வைக்கும் படி கட்டாய படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

CCD பங்கு விலை வீழ்ச்சி

CCD பங்கு விலை வீழ்ச்சி

மேலும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தகவலின் படி, கடந்த ஜனவரி 22, 2018 அன்று CDEL's பங்கின் விலை 374.60 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்ற ஜூலை 29 ம் தேதி வரை சுமார் 48 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 192.55 ரூபாயாக முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் CDEL's சந்தை மூலதனத்தில் மொத்த படிப்படியான அரிப்பு 5,541 கோடி ரூபாயாகவும் இருந்தது.

பங்குகளில் 75% அடமானம்

பங்குகளில் 75% அடமானம்

மேலும் சித்தார்த்தாவும் அவரது குழு நிறுவனங்களும் CDEL's நிறுவனத்தில் 53.93 சதவிகித பங்குகளை வைத்திருந்தனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஜூன் 30 வரை அடமானம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் கடனை சமாளிக்க முடியவில்லை

அதிகரித்து வரும் கடனை சமாளிக்க முடியவில்லை

இந்த நிலையில் தான் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய தனது கடைசி கடிதத்தில், நிறுவனத்தின் பெருகிவரும் கடனை சமாளிக்க முடியவில்லை என்றும் வருமான வரி அதிகாரிகளால், அவர் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் சித்தார்த்தா குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CCD founder Siddhartha’s total debt may have touched Rs.11,000 crore

CCD founder Siddhartha’s total debt may have touched Rs.11,000 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X