உச்சக்கட்ட ஆபத்தில் ஆட்டோமொபைல் துறை.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில நாட்களுக்கு முன் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் எனச் செய்தி வெளியிட்டு இருந்தோம். இதை நிஜமாக்கும் வகையில் தற்போது நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் விற்பனையில் மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

 

"இது தொடரும் பட்சத்தில் 10 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும்."

 மாருதி சுசூகி

மாருதி சுசூகி

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இன்று ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டது. இதில் இந்நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை சுமார் 36.2 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இது ஒட்டுமொத்த கார் விற்பனை நிறுவனங்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதிலும் முக்கியமான இந்நிறுவனத்தின் ஆட்லோ, வேகன்ஆர் மாடல் கார்களின் விற்பனை ஜூலை மாதத்தில் சுமார் 69.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஹோண்டா

ஹோண்டா

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற ஹோண்டா நிறுவனம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19,970 கார்களை விற்பனை செய்த நிலையில் நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதத்தில் வெறும் 10,250 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 49 சதவீத சரிவு.

இதேபோல் ஹோண்டா நிறுவனம் ஜூலை மாதத்தில் வெறும் 334 கார்களை மட்டுமே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்
 

டாடா மோட்டார்ஸ்

இதேபோல் டாடா மோட்டார்ஸ் தனது இந்திய விற்பனை சந்தையில் ஜூலை மாதம் வெறும் 32,938 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே 2018 ஜூலை மாதத்தில் 50100 கார்களை விற்பனை செய்திருந்தது.

இரண்டையும் ஒப்பிடுகையில் டாடா மோட்டார் ஜூலை மாதத்தில் சுமார் 34 சதவீத விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

இருசக்கர வாகனங்கள்

இருசக்கர வாகனங்கள்

கார் விற்பனை தான் இப்படியென்றால் இருசக்கர வாகன விற்பனையும் மோசமாகத் தான் உள்ளது.

பஜாஜ் நிறுவனம் 3 சதவீத விற்பனை சரிவில் 3,22,210 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் ஜூலை மாதத்தில் 5,35,810 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 21.2 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

ராயல் என்பீல்ட் பைக்குகளைத் தயாரிக்கும் எய்ச்சர் மோட்டார்ஸ் ஜூலை மாதத்தில் வெறும் 54,185 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து 22 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

டிவிஸ் வெறும் 279,465 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து 13 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: car bike கார் பைக்
English summary

Indian Automobile industry in very bad shape

Indian Automobile industry in very bad shape, Auto stocks fall on slump in sales of july month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X