ஐயா மோடி.. ரூ.3,000 கோடியில் புதிய திட்டங்களா.. வட கிழக்கு மண்டலத்திலா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் 100 நாள் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த 100 நாள் திட்டத்தில் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆமாங்க.. நூறு நாள் திட்டத்தில் வட கிழக்கு மண்டலங்களில் 200 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிற பகுதிகளை வட கிழக்கு பகுதியுடன நெருக்கமாக கொண்டு வருவதற்கான இலக்கு அணுகுமுறையை மனதில் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது மத்திய அரசு.

ரூ.3000 கோடியில் புதிய திட்டங்கள்

ரூ.3000 கோடியில் புதிய திட்டங்கள்

100 நாள் திட்டங்களில் Development of North Eastern Region (DoNER) எடுத்துள்ள முடிவுகளில் சுமார் 200 புதிய திட்டங்களில் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இந்த திட்டத்தின் படி, பல திட்டங்களை அனுமதித்தல், அல்லது தொடங்குதல், அல்லது நிறைவு செய்தல் அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு திட்டங்களுக்கு 30 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், Development of North Eastern Region அமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறியுள்ளார்.

மோடி அரசு வடகிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை

மோடி அரசு வடகிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை

அதிலும் நாட்டில் இதுவரை புறகணிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நரேந்திரமோடி தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது. ஆமாங்க.. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டவற்றில் வடகிழக்கு மண்டலமும் ஒன்றாகும். பிரதமர் மோடியின் முதல் பதவிக்காலத்தில், முதன்மை கவனம் வடகிழக்கு பகுதிகளை, இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் நெருக்கமாக கொண்டு வருவதாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் மற்ற பகுதிகளை வடகிழக்கு பகுதிகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதாக இருந்தது.

அசாமில் தொழிற்பூங்கா!

அசாமில் தொழிற்பூங்கா!

இந்த நிலையில் தற்போது அதே நெறிமுறைகள் மற்றும் இலக்குடன் நெறிமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் தொடர்கின்றன. இந்த நிலையில் இந்த திட்டங்களின் முக்கிய அம்சமாக, அசாம் மாநிலத்தின், டிமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள மாண்டெர்டிசாவில் 75 ஹெக்டேர் பரப்பளவில் 50 கோடி ரூபாய் செலவில் மூங்கில் தொழிற்துறை பூங்கா ஒன்று அமைக்கப்படுகிறது.

பல திட்டங்களில் முதலீடு!

பல திட்டங்களில் முதலீடு!

Non Lapsable Central Pool of Resources (NLCPR) உள்ளிட்ட 36 திட்டங்களில் 529.18 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளனவாம். மேலும் இரண்டு திட்டங்கள் 89.63 கோடி ரூபாய் செலவில் இரண்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே காலத்தில் 26.83 கோடி ரூபாய் அளவில் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Goverment to launch Rs.3,000 crore projects in Northeast

Modi Goverment to launch Rs.3,000 crore projects in Northeast
Story first published: Sunday, August 4, 2019, 18:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X