காஷ்மீர் உண்மையிலேயே இனி முதலீடுகளுக்கு பியூட்டிஃபுல் காஷ்மீராகும்.. தொழிலதிபர்கள் உற்சாகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்திய சுதந்திரத்திற்கு பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்டு விட்டது.

இந்த நிலையில், இந்த அதிரடியான நடவ்டிக்கைக்கு, பல விதமான கருத்துகள் இதற்கு எதிராக கிளம்பியுள்ளது. எனினும் நம்ம பிசினஸ் தலைகள் இனி தான் காஷ்மீர் சொர்க்கமாகும். ஏனெனில் அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கும் என்றும் கூறியுள்ளனராம். அதோடு மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆமாங்க.. பல பெரும் பிசினஸ் தலைவர்கள் காஷ்மீரின் இந்த திருத்தம் குறித்து தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

காஷ்மீரிலும் இடம் வாங்கலாம்
 

காஷ்மீரிலும் இடம் வாங்கலாம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து தரும் 370வது பிரிவை ரத்து செய்துள்ளது அரசு. இதன் மூலம் அந்த மாநிலத்தில் இனி யார் வேண்டுமானலும் இடம் வாங்கலாம். மற்ற மாநிலங்களில் உள்ளதை போலவே ஜம்மு காஷ்மீரிலும் இந்திய சட்டங்கள் அனைத்தும் செல்லும் என்றும், இதே போல இம்மக்களுக்கு நாட்டில் உள்ள கட்டாயகல்வி திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு இது துணை புரியும்

நாட்டின் வளர்ச்சிக்கு இது துணை புரியும்

இந்த நிலையில் ஜே.எஸ்.டபள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், நான் பாஜாகாவின் இந்த அதிரடி முடிவை ஆதரிக்கிறேன். மேலும் அவர் I have always believed that Article 370 should be abolished என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் இந்த அதிரடியான நடவடிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்றும் ஜிண்டால் கூறியுள்ளார்.

இது வரலாற்று தருணம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

இது வரலாற்று தருணம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

இதுவே RPG Enterprises நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா கூறுகையில், 370 வது பிரிவை ரத்து செய்தது, வரலாற்று தருணமாக என்றென்றும் நினைவில் இருக்கும். நாங்கள் 80களின் பிற்பகுதியில், காஷ்மீரில் எனது தந்தை இரண்டு தொழிற்சாலைகளை அமைத்தார், அங்கு ஹாலந்திலிருந்து பெறப்பட்ட சிறப்பு விதைகள் மூலம் beautiful tulip garden ஒன்றை உருவாக்கினார். ஆனால் பின்னர் அது தீவிரவாதத்தால் முடக்கப்பட்டது. மேலும் இனி காஷ்மீரில் அமைதி உருவாகும். இதனால் சுற்றுலா பயணிகளும் அதிகரிப்பார்கள். அதோடு நல்ல வேளைவாய்ப்புகளும் உருவாகும். மேலும் முதலீடுகளும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் இன்னும் வலிமையானதாக மாறும்
 

காஷ்மீர் இன்னும் வலிமையானதாக மாறும்

மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இது குறித்து கூறுகையில், முழு நாடும் காஷ்மீர் மீது மூச்சு விட காத்திருக்கிறது. அங்குள்ள அனைவரின் பாதுகாப்பிற்காகவும், தேசத்தை வலிமையாக்கவும், அதன் வருங்காலம் இன்னும் சிறப்பானதாக மாற்ற கடவுளை வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் மக்கள் பலனை அடைவார்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் மக்கள் பலனை அடைவார்கள்

Jaypee Group தலைவர் மனோஜ் கவுர் இது ஒரு தைரியமான மற்றும் தொலை நோக்குடைய பிரதமரின் தைரியமான முடிவு. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் இதனால் பெருமைப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், அடுத்த 10 ஆண்டுகளில் இதன் பலனை அறுவடை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

நாம் ஒரே தேசமாகி விட்டோம்!

நாம் ஒரே தேசமாகி விட்டோம்!

மோதிலால் ஆஸ்வால் குழுமத்தின் சி.எம்.டி, மோதிலால் ஆஸ்வால், டிவிட்டரில், ஜி.எஸ்.டிக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு, நாங்கள் ஒரு தேசம் ஒரு வரிக்கு உள்ளாகி இருக்கிறோம். உண்மையில் நாம் ஒரே தேசமாகி விட்டோம். மோடிஜிக்கும், அமித் பாய்க்கும் எனது பாராட்டுகள், பாஜாவுக்கும் எனது பாராட்டுகள், ஒரு குடிமகனாக பெருமை கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு

நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு

மும்பை பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான் கூறுகையில், இது இந்தியாவிற்கும் இந்திய ஜன நாயகத்திற்கும் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருக்கும். பல இந்தியர்களுக்கு இது ஒரு நிவரணமான நாளாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவின் இந்த முக்கிய பகுதியை ஒருங்கிணைப்பதில் உறுதியும் தைரியமும் கொண்ட, பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி மூலம் இதை சரி செய்யலாம்

பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி மூலம் இதை சரி செய்யலாம்

Lodha Group நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான அபிஷேக் லோதா, 1988 அணுசக்தி சோதனைகளைப் போலவே, நமக்கு சில குறுகிய கால பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நடுத்தர காலத்தில் காஷ்மீர் பிரச்சனையும், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை செயல்படுத்துவதன் மூலம் தீர்க்கும். இதை செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு Hats off என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Business peoples say amending article 370 will attract big investment Kashmir

Business peoples say amending article 370 will attract big investment Kashmir
Story first published: Tuesday, August 6, 2019, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more