அன்று பள்ளி ஆசிரியர்.. இன்று கோடீஸ்வரர்.. டிஸ்னியுடன் கைகோர்க்கும் பைஜூ ஆப்.. அசுர வளர்ச்சி தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் இன்றைய புதிய கோடீஸ்வரர் ஒரு முன்னாள் ஆசிரியர் என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மைதான். பெங்களூரை சேர்ந்த Byju Raveendran என்ற முன்னாள் ஆசிரியர் தான் அந்த கோடீஸ்வரர்.

 

ஆமாங்க.. கற்றலின் புதிய முறையாக உருவெடுத்திருக்கும் பைஜூ ஆப்பின் உரிமையாளர் பைஜூ ரவீந்தரன் தான் இந்த கோடீஸ்வரர். ஆமாங்க.. இந்த பைஜூ ஆப்பின் மதிப்பு கடந்த ஏழு ஆண்டுகளில் 6 மில்லியன் டாலர் ஆக (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 42.5 கோடியாக) உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் புதிய புதிய ஸ்டார்டப் நிறுவனங்கள் மற்றும் சிறு கூறு நிறுவனங்கள் உருவாகி வரும் இந்த நிலையில், புதிய புதிய தொழிலதிபர் உருவாகி கொண்டே தான் இருக்கிறார்கள். அதிலும் இணைய வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இணையம் சம்பந்தமான ஆன்லைன் தொழில்கள் கொடி கட்டி பறக்கின்றன.

இணையக் கல்வியில் அசுர வளர்ச்சி!

இணையக் கல்வியில் அசுர வளர்ச்சி!

அந்த வகையில் ரவீந்தரின் இந்த இணைய வளர்ச்சி அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூறலாம். ஆமாங்க.. ஒரு ஆசிரியராக இருந்தாலும், தன் திறமையால் புதிய தொழில்முனைவோராகவும், புதிய கோடிஸ்வரராகவும் உருவெடுத்து இருக்கிறார் ரவீந்தரன். அதிலும் இணையக் கல்வியில் ரவீந்திரன் இந்த புதிய முயற்சி மிகக் குறைந்த காலகட்டத்திலேயே, அவரை பன்மடங்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தான் எங்கள் நோக்கம் : Fall in love with learning

இது தான் எங்கள் நோக்கம் : Fall in love with learning

Byju's என்பது இந்தியாவின் மிக முக்கியமான, மிகப்பெரிய இணைய கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். Fall in love with learning என்பது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது, அதிலும் இந்த வரிகள் தான் இந்த ஆப்பின் டேக்லைன் என்றால் பாருங்களேன். தற்போது பைஜூ ஆப் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கல்வி முறைக்கு ஏற்ற வகையிலும் தன் சேவையை வழங்கவுள்ளதாம்.

அனிமேஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் தான் ஆசிரியர்!
 

அனிமேஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் தான் ஆசிரியர்!

37 வயதான ரவீந்தரன், தொழில் முனைவோர் இந்திய கல்விக்காக ஆக்கப்பூர்வமாக தனது செயலை செய்ய விரும்புவதாக கூறியுள்ளாராம். மேலும் தன்னுடைய புதிய ஆப்பில் டிஸ்னியின் கதாபாத்திரங்களான தி லயன் கிங்கில் வரும் சிம்பாவும் ஃப்ரோஸனில் வரும் அன்னா என்ற கதாபாத்திரமும் 1 முதல் 3 வகுப்பு வரையான மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கிலத்தையும் கற்பிக்கவுள்ளதாம். அதே அனிமேஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் விளையாட்டுகள் மற்றும் கதைகள் சொல்கின்றன. வினாடி வினாக்களும் நடத்துகின்றன.

கற்றலுக்கு சாதகமாகும் ஈர்ப்பு

கற்றலுக்கு சாதகமாகும் ஈர்ப்பு

குறிப்பாக இன்று அனைத்து இடங்களிலும் குழந்தைகள் டிஸ்னியின் சிம்பா அல்லது மோனாவுடன் தொடர்புபடுத்துகிறார்கள். மேலும் இந்த கதாபாத்திரங்கள் குழந்தைகளின் கவனத்தை எளிதில் கவர்கின்றன என்றும் ரவீந்திரன் கூறியுள்ளார். ஆக இதையே தொழிலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இணையக்கல்வியை அதிகரிக்க முடியும், குழந்தைகளை கவர முடியும். இதனால் குழந்தைகளின் கற்றல் திறன்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் ரவீந்தர் கூறியுள்ளார்.

இணைய கல்வி அசுர வளர்ச்சி காணும்

இணைய கல்வி அசுர வளர்ச்சி காணும்

மேலும் இந்த இணைய வழிக் கல்விதான் பைஜூ நிறுவனத்தின் அடிப்படையாக உள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடும் இணைய பயன்பாடும் வெகுவாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஆன்லைன் கற்றல் சந்தை 2020 ஆம் ஆண்டில் இரு மடங்கிற்கு மேலாக வளர்ர்ச்சி காணும் என்றும் அரசு ஆதரவுடைய இந்தியா பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

சார் எந்த ஊரு?

சார் எந்த ஊரு?

சரி இவர் எந்த ஊர் என்று கேட்கிறீர்களா? பைஜூ நிறுவனத்தின் உரிமையாளர் பைஜு ரவீந்திரன், கேரளா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வளர்ந்தவர். அங்கு அவரது பெற்றோர்கள் அங்கு பள்ளி ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ரவீந்தரன் தனது இளமை காலத்தில் ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டுகளின் மீதான் ஆர்வத்துடனே இருந்துள்ளார். பின் பொறியியல் கல்லூரியில் சேர தானே முயற்சி எடுத்து படித்து நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

Think & Learn உதயம் எப்போது?

Think & Learn உதயம் எப்போது?

பின்னர் தான் அதை தொடக்கமாக வைத்து பின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கியும் உள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 2011ம் ஆண்டில் திங்க் & லர்ன் (Think & Learn) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் தன்னுடைய செயலியை அறிமுகப்படுத்தும் முன் ஆன்லைனில் பாடங்களை வழங்கியும் உள்ளார். இந்த தொழிலில் உள்ள அதிகப்படியான ஈர்ப்பு மற்றும் தேவை காரணமாக 35 மில்லியனுக்கும் அதிகமானவர்களை ஒப்பந்தம் செய்ய வைத்தது. பைஜூ நிறுவனத்தின் வருவாய் இரு மடங்காக உயர்ந்துள்ளதாம். இந்த நிலையில் இதன் வருவாய் சுமார் 3,000 கோடிக்கு மேல் இருக்குமாம்.

இந்த இணைய கல்விக்கு எவ்வளவு கட்டணம்?

இந்த இணைய கல்விக்கு எவ்வளவு கட்டணம்?

இதில் சுமார் 2.4 மில்லியன் பேர் ஆண்டு கட்டணமாக ரூ.10,000 - 12,000 வரை கட்டியுள்ளனர். இந்த நிலையில் தான், கடந்த 2019 மார்ச் மாதத்துடன் லாபகரமான தொழிலாக இந்த ஆன்லைன் கற்றல் மாறியது. பைஜூவின் அணுகுமுறை மிக எளிதானது. கவனத்தை ஈர்க்கும் வகையில் அதன் உள்ளடக்கத்தை மாற்றுவதன் மூலம் குழந்தைகளை வசீகரிக்கிறது என்றும், ஆங்கிலம் பேசும் நாடுகளை பைஜூ நிறுவனம் வெகுவாக அடைந்துள்ளது என்றும், தனது வீடியோ மூலமாக யூடியூப் நட்சத்திரமாகவும் மாறியுள்ளார் ரவீந்தரன்.

பைஜூவுடன் இணையும் டிஸ்னி

பைஜூவுடன் இணையும் டிஸ்னி

பைஜூவின் தனித்துவமான அறிவை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள டிஸ்னி நிறுவனம் எண்ணியுள்ளது. டிஸ்னியும் பைஜுவும் இணைந்து பிரிட்டீஸ் பள்ளி பாடத்திற்கு ஏற்றாற்போல் ஆப்பை அப்டேட் செய்யவுள்ளதாம். இந்தியாவை சேர்ந்த ஒரு ஆசிரியர் டிஸ்னியுடன் இணைந்து, அதிலும் இணைய தள கல்வி சம்பந்தமான வர்த்தகத்தில் அனைவரையும் ஈர்த்திருப்பது, நம் எல்லோரும் பெருமைபடக் கூடிய ஒரு விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: former byju பைஜூ
English summary

Former classroom teacher is India’s newest billionaire

Former classroom teacher is India’s newest billionaire
Story first published: Wednesday, August 7, 2019, 12:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X