Cafe Coffee Day: கடனை கட்ட 9 ஏக்கர் சொத்தை விற்கும் காஃபி டே.. கவலையில் நிறுவனம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு : தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த சமயத்தில் அவருக்கு 8,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக காஃபி டே நிறுவனறுக்கு அதிகப்படியான கடன் பிரச்சனை அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும், அதனால் தான் இந்த முடிவை சித்தார்த்தா எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதன் பின்னர் Cafe Coffee Day நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தாவிற்கு 11,000 கோடி ரூபாய் வரை கடன் இருக்கலாம் என்றும், பங்கு சந்தை மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (stock exchanges and the Ministry of Corporate Affairs ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கதக்கது.

காஃபி டே சொத்து!

காஃபி டே சொத்து!

இந்த நிலையில் காஃபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், கடந்த வியாழக்கிழமையன்று, தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்காக 9 ஏக்கர் அளவுள்ள தொழில் நுட்ப பூங்காவை விற்க போவதாக கூறியுள்ளது. இந்த Coffee Day Enterprises Ltd நிறுவனம், காபி டே குழு நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும். இந்த நிலையில் இந்த நிறுவனம் சொத்தை விற்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிளாஸ்டோன் நிறுவனம் தான் வாங்குகிறதா?

பிளாஸ்டோன் நிறுவனம் தான் வாங்குகிறதா?

தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம், Tanglin Developments Ltd நிறுவனத்திற்கு சொந்தமான (காஃபி டே குழுமம்) குளோபல் வில்லேஜ் பூங்காவை வாங்குவதற்கான சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் இந்த சொத்து விற்பனை குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.டி வாரியம் ஒப்புதல்

ஐ.டி வாரியம் ஒப்புதல்

பெங்களுரில் ஐ.டி பூங்காவை விற்பனை செய்வதற்கு, ஐ.டி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காஃபி டே நிறுவனத்தின் சொத்துக்களை பிளாக்ஸ்டோன் நிறுவனம் வாங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காபி டே நிறுவனத்தின் சொத்துக்களை பணமாக்குவதற்கு, ஐ.டி வாரியமும் உதவிகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன ஆராய திட்டம்?

உண்மை என்ன ஆராய திட்டம்?

கடந்த ஜூலை 29ம் தேதி காஃபி டே நிறுவனத்தின் சித்தார்த்தா மாயமானதாக, பின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் எழுதப்பட்டதாக கூறும் நிலையில் அந்த கடிதம் எந்த அளவுக்கு உண்மை என அறிய தடயவியல் தணிக்கை நிறுவனத்தை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CCD to sell 9-acres IT park in Bangalore to pay back debt

CCD to sell 9-acres IT park in Bangalore to pay back debt
Story first published: Friday, August 9, 2019, 18:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X