BSNLலில் பணி நீக்கம் மட்டுமல்ல..BSNLக்கு சொந்தமான நிலத்தை விற்கவோ குத்தகைக்கு விடவோ அதிரடி திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : மோடி தலைமையிலான 2.0 அரசு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பல இடங்களை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஆமாங்க.. மொத்தம் பி.எஸ்.என்.எல்லுக்கு சொந்தமான 28 இடங்கள் இதில் தேர்வாகியுள்ளனவாம்.

அதிலும் தமிழ் நாட்டில் தான் அதிக இடங்களை தேர்வு செய்துள்ளதாம் அரசு. ஆமாங்க, தமிழ் நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்குமாம்,

எங்களுக்கு 35,000 பேர் போதும்!

எங்களுக்கு 35,000 பேர் போதும்!

அதிலும் மோடி அரசு பதவியேற்றதுமே, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் யாதவ், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை 35,000 ஆக குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது தொலைத்தொடர்பு துறையில் தற்போது 1.65 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோனேர் 2000ம் ஆண்டில், டிபார்மென்ட் ஆப் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

ஓய்வூதிய வயது 60லிருந்து 58 ஆக குறைக்கலாம்!

ஓய்வூதிய வயது 60லிருந்து 58 ஆக குறைக்கலாம்!

மேலும் இந்த நிலையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா, ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில், இந்த வகையை பின்பற்றும் போது பி.எஸ்.என்.எல்லின் ஊழியர்கள் சுமார் 30,000 பேர் இதனால் வேலையிழப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலங்களின் மதிப்பு எவ்வளவு?
 

நிலங்களின் மதிப்பு எவ்வளவு?

மேலும் கடந்த 2015ம் ஆண்டு மதிப்பின் படி, பி.எஸ்.என்.எல் நிலங்களின் மதிப்பு 16,998 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலங்களின் மொத்த மதிப்பு கிட்டதட்ட 56 ஏக்கர் இருக்கலாமாம். இந்த நிலையில் இந்த நிலங்களில் உள்ள பிளாட்களின் மதிப்பு 200 கோடி ரூபாயாம். இந்த வகையில் தமிழ் நாட்டில் சென்னையில் உள்ள 7 இடங்களும், மஹாராஷ்டிராவில் 3 இடங்களும், ஜார்கண்டும் கர்நாடாகா, குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் 2 இடங்களும், இதே கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் 1 இடமும் விற்பனையோ அல்லது குத்தகைக்கோ விடப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாடகைக்கு விடலாம்!

வாடகைக்கு விடலாம்!

இதில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தாவில் உள்ள பி.எஸ்.என்.எல்லின் தொழிற் சாலைகள், மற்றும் வயர்லெஸ் நிலையம் உள்ளிட்ட பலவும் இந்த லிஸ்டில் இடம்பெறுமாம். இதுகுறித்து ஊழியர்கள் மத்தியில், இந்த நிலங்களை விற்க கூடாது, இவற்றை வாடகைக்கு விட வேண்டும் என்றும், அவை நிரந்தரமான வருவாயை உருவாக்கும் என்றும் கூறுகின்றனராம்.

கடன் பிரச்சனையால் தவிக்கும் பி.எஸ்.என்.எல்

கடன் பிரச்சனையால் தவிக்கும் பி.எஸ்.என்.எல்

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் முயற்சியால், நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு, கிட்டதட்ட 14,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் நஷ்டம் கண்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL trying to sell 7 property in Tamilnadu

BSNL trying to sell 7 property in Tamilnadu
Story first published: Sunday, August 11, 2019, 19:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X