10 லட்சம் பேரின் வேலையை காவு வாங்க காத்திருக்கும் ஆட்டோமொபைல் துறை.. அடுத்து என்ன நடக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து சரிவையே கண்டு வரும் நிலையில், பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக கூறப்படும் இந்த நிலையில், தற்போதுள்ள இதே நிலை நீடித்தால், இந்த துறையில் 10 லட்சம் பேர் வேலை இழக்ககூடும் என்றும் Automotive Component Manufacturers Association of India (ACMA) கூறியுள்ளது.

 

மேலும் பல நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனை வீழ்ச்சி கண்டு வருவதாலும், இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து உற்பத்தியை குறைத்து வருகின்றன. இது சங்கிலி தொடராக உற்பத்தியிலிருந்து, விற்பனை வரையிலான பல லட்சம் பேரை சங்கிலி தொடராக பாதிக்கிறது.

எனினும் இந்த துறை மீண்டும் வரும்போது இங்கு, பயிற்சிபெற்ற ஊழியர்கள் கிடைப்பது கடினம் என்றும் ACMA தலைவர், ராம் வெங்கடரமனி கூறியுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கலாம்

மீண்டும் அதிகரிக்கலாம்

இந்த நிலையில் ஆட்டோமொபைல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இதே நிலை தொடர்ந்தால், 15 - 20 சதவிகிதம் உற்பத்தி குறைக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மேலும் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இது மேலும் இத்துறையை அதள பாதளத்திற்கே கொண்டு சென்று விடும் என்றும் நிபுனர்கள் கருதுகின்றனர்.

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஆட்டோமொபைல் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகிதம், அதாவது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதமும், 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த நிதியாண்டில், இத்துறையில் வாகன விற்பனை 3.95 லட்சம் கோடி ரூபாயாக (57 பில்லியன் டாலர் மதிப்பில்) மதிப்பில் விற்பனையாகி உள்ளதாம். இதன் மதிப்பு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 14.5 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

BS VI  விதிமுறையால் விற்பனை பாதிப்பு
 

BS VI விதிமுறையால் விற்பனை பாதிப்பு

எனினும் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி பெரிதாக இருக்காது என்றும், மத்திய அரசு புதிதாக கொண்டு வர இருக்கும், BS VI விதிமுறையால் வாகன துறையின் மீதான முதலீடுகளும் தற்போது குறைந்துள்ளது. இந்த விதிமுறையால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு உள்ள வாகனங்களே விற்பனையாகமல் உள்ளது. இந்த நிலையில் புதிய வாகனங்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏனெனில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில், இந்த வாகனங்களின் மீதான விதிமுறைகளில் மாற்றம் இருக்கும், என்ற எதிர்பார்ப்பில், புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் உள்ளவர்கள் கூட, இந்த விதிமுறைக்கு பின்பு செல்லலாம் என்ற நிலை நிலவி வருகிறது. இதனாலே விற்பனை வீழ்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செலவை மிச்சப்படுத்த பணி நீக்கம்

செலவை மிச்சப்படுத்த பணி நீக்கம்

ஏற்கனவே வாகன உற்பத்தியாளர்கள், செலவை மிச்சப்படுத்த தற்காலிக ஊழியர்களை பணியாளர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பல ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்றும், இத்துறையில் நீடித்து வரும் இந்த மந்த நிலையால் இன்னும் பல ஆயிரம்பேர் வேலை இழக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஏசி உபயோகத்தை குறைத்த நிறுவனம்

ஏசி உபயோகத்தை குறைத்த நிறுவனம்

அதிலும் சில நிறுவனங்கள் மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக, காலையில் எட்டு மணிக்கு ஏசியை ஆன் செய்தால், மாலை 5 மணிக்கெல்லாம் ஆப் செய்து விடுகிறார்கள். அதிலும் சிலருக்கு வீட்டிலிருந்து செய்ய முடிகிற வேலை, வீட்டிலிருந்தே செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்களாம். இதுதவிர இன்னும் பல வழிகளில் நிறுவனங்கள், பல வ்ழிகளில் செலவை மிச்சப்படுத்த, பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனவாம்.

பல நாட்கள் விடுமுறை

பல நாட்கள் விடுமுறை

இந்த நிலையில், தமிழ் நாட்டில் உள்ள கங்கைகொண்டானிலுள்ள லிஸ்டடு நிறுவனமான பாஸ்க் (Bosch Ltd) நிறுவனம், அண்மையில் 5 நாட்கள் விடுமுறையை அளித்துள்ளதாம். Renault Nissan alliance's car plant நிறுவனமும், தங்களது தற்காலிக ஊழியர்களை, பணி நீக்கம் செய்துள்ளதாம். இதே போல் அசோக் லைலேன்ட் நிறுவனமும், வாகனங்களை டெலிவரி செய்யும் காஸ்ட் மற்றும் அலுவலகம் சார்ந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாகவும், இந்த நிறுவனத்தின் இயக்குனர் கோபால் மஹாதேவன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

மேலும் மஹாதேவன் இது குறித்து கூறியதோடு, ஆட்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும், அதே சமயம் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும், இதன் இந்த நிறுவனம் 500 கோடி ரூபாயை மிச்சப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதே போர்டு நிறுவனம் ஏற்கனவே உற்பத்தியை குறைக்க வாரத்தில் ஒரு நாள் இரவு நேர உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More than 10 lakh people may lose their job in auto mobile industry

More than 10 lakh people may lose their job in auto mobile industry
Story first published: Sunday, August 11, 2019, 17:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X