இரண்டு அவித்த முட்டைக்கு 1,700 ரூபாயா..? வாழைப் பழத்தைத் தொடர்ந்து இப்போது முட்டை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை, இந்தியா: சமீபத்தில் தான் நம் விஸ்வரூபம் படத்தில் ஒமர் பாயாக நடித்த ராகுல் போஸ் என்கிற நடிகருக்கு இரண்டு வாழைப் பழத்துக்கு 442 ரூபாய் வசூலித்துவிட்டார்கள் என செய்தி வெளியானது.

 

இப்போது மீண்டும் அதே போல ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. கார்த்திக் தர் என்கிற ட்விட்டர் வாசிக்கு வெறும் இரண்டு அவித்த முட்டைக்கு 1,700 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.

மும்பையில், Four Seasons என்கிற விலை உயர்ந்த உணவகத்தில் நம் கார்த்திக் தர்-க்கு இந்த பெரிய தொகையை வசூலித்திருக்கிறார்கள். 2 அவித்த முட்டைக்கு 1,700 ரூபாய், ஒரு ஆம்லேட்டுக்கு 850 ரூபாய், ஒரு டயட் கோக்குக்கு 260 ரூபாய், ஒரு ஜீரோ கோக்குக்கு 260 ரூபாய் என பில் சகட்டு மேனிக்கு எகிறி இருக்கிறது.

சொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..! சொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..!

ட்விட்டர் பதிவு

மேலே சொன்ன உணவு பில்லை, தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார் கார்த்திக் தர். அதோடு விஸ்வரூபம் படத்தில் ஒமர் பாயாக நடித்த ராகுல் போஸையும் டேக் செய்து "என்னங்க போராடுவோமா..?" எனவும் விளையாட்டாகக் கேட்டிருக்கிறார். கார்த்திக் தர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பில் பதிவை ஆகஸ்ட் 12, 2019 காலை வரை மொத்தம் 1,455 பேர் ரீ ட்விட் செய்திருக்கிறார்கள். 3,223 பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

ரியாக்‌ஷன்கள் 1

கார்த்திக் தர்ரின் பதிவுக்கு சில ட்விட்டர் வாசிகள் கேட்டிருக்கும் சுவாரஸ்ய கேள்விகள் மற்றும் பதில்கள் இதோ உங்களுக்காக. அனுப்ரியா என்பவர், "இந்த முட்டை உடன் தங்கம் ஏதாவது வந்ததா என்ன..?" என ட்ரோல் செய்திருக்கிறார். கார்த்திக் தர்ரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் மற்றொரு ட்விட்டர் வாசி "இந்த முட்டையைக் கொடுத்த கோழி பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்" என ட்ரோல் செய்திருக்கிறார்.

 

ரியாக்‌ஷன்கள் 2

குத்புதீன் ஒவாஸி என்பவரோ "வெறும் முட்டைகளுக்கு 5,100 ரூபாயா..? அப்படி என்றால் இந்த காசில் ஒரு வருடத்துக்கு தேவையான முட்டையை நான் வாங்கிக் கொள்வேன்" என ட்ரோல் செய்திருக்கிறார். மற்றொரு ட்விட்டர் வாசியோ இந்த விலைக்கு எவ்வளவு காஸ்ட்லியாக கணக்கு போட்டாலும் சுமார் 870 முட்டைகளாவது வந்துவிடும் எனப் பதிவிட்டிருக்கிறார். இன்னொரு ட்விட்டர் வாசி "அவர்கள் தான் இவ்வளவு விலை வைத்து விற்கிறார்கள் என்று தெரியும் தானே. பின் எதற்கு இங்கெல்லாம் சாப்பிடவும், தங்குவதற்கும் செல்கிறீர்கள். அதையும் மீறி உணவு சாப்பிட்ட பின் ஏன் குறை சொல்கிறீர்கள்..?" எனக் கேட்டிருக்கிறார்.

மெனு கார்ட்

மெனு கார்ட்

சச்சின் என்கிற ட்விட்டர் வாசி "எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. இப்படி ட்விட்டர் பதிவு செய்து பப்ளிசிட்டி தேடுபவர்கள்... ஏன் சாப்பிடுவதற்கு முன் மெனு கார்ட்களைப் பார்த்து ஆர்டர் செய்யக் கூடாது..?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... நீங்கள் எப்போதாவது ஐந்து நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இப்படி ஆயிரக் கணக்கில் ஒரு தோசைக்கோ அல்லது இப்படி இரண்டு அவித்த முட்டைகளுக்கோ செலவழித்து இருக்கிறீர்களா..? ஆம் என்றால் நீங்கள் உங்கள் அனுபவத்தைப் நம் வாசகர்களோடு கமெண்டில் பகிருங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

two eggs cost rs 1700 after 2 banana cost rs 442 for rahul bose

two eggs cost rs 1700 after 2 banana cost rs 442 for rahul bose
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X