2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 5 வருடத்தில் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் காரணமாக நிலையான வளர்ச்சியை அடைந்தது. இதற்கு அரசின் தொடர் கொள்கை மாற்றங்களும், அரசு திட்டங்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகங்களுக்குச் சாதகமாக அமைந்தது.

 

இந்நிலையில் நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுக்கு வெறும் 2 வருடத்தில் 100 சதவீத லாபத்தை அடைவார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.

முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தின் பிராண்ட்பேன்ட் திட்ட அறிமுகம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கூட்டணி, சவுதி ஆராம்கோ நிறுவனத்துடனான டீல் என 3 அதி முக்கிய அறிவிப்புகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டது.

இந்த அறிவிப்பினால் அடுத்த ஒரு வாரத்திற்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சந்தை மூலதன நிறுவனமாக உயர உள்ளது.

 

சிறந்த வருடாந்திர கூட்டம்சிறந்த வருடாந்திர கூட்டம்

சிறந்த வருடாந்திர கூட்டம்சிறந்த வருடாந்திர கூட்டம்


கடந்த 10 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இந்த வருடாந்திர கூட்டத்தில் தான் எனப் பல முன்னணி முதலீட்டு சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளது.

இதில் மிக முக்கியமானது, சவுதி ஆராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளுக்குச் சுமார் 15 பில்லியன் டாலர் கொடுக்க உள்ளது. இந்தத் தொகை ரிலையன்ஸ்-ன் கடன் அளவை பெரிய அளவில் குறைக்கப் பயன்படும். இதன் மூலம் இந்நிறுவனத்தின் பேலென்ஸ் ஷீட் வலிமை பெற்றுச் சந்தையில் இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு தாறுமாறாக உயர வழி வகுக்கும்.

 

மதிப்பீடு
 

மதிப்பீடு

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் 100 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அடுத்தச் சில காலாண்டுகளுக்குள் 140-150 பில்லியன் டாலர் வரையில் உயரும்.

இதோடு அடுத்த 24 மாதம் அதாவது 2 வருட காலத்தில் இந்நிறுவனத்தின் மதிப்பு 200 பில்லியன் டாலர் வரையில் உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

 

முதலீடு

முதலீடு

2 வருடத்தில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சந்தை மதிப்பு 2 மடங்கு அதிகரிக்கும் போது இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகையும் இரட்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது.

ஆகையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நீங்கள் தற்போது 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 24 மாதத்தில் இதன் மதிப்பு 10 லட்சம் வரையில் உயர வாய்ப்புகள் உள்ளது எனப் பங்குச்சந்தை வல்லுனர் சுஷில் கூறியுள்ளார்.

 

ஜியோ

ஜியோ

உதாரணமாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது (செப்.5 2016) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு வெறும் 506 ரூபாய் மட்டும் தான். ஆனால் மே மாதத்தின் போது இந்நிறுவன பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1400 ரூபாய் வரையில் உயர்ந்தது.

தற்போது சர்வதேச மற்றும் இந்திய பொருளாதாரத்தின் சரிவின் காரணமாகத் தற்போது 1161 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. யாருடைய கூட்டணியும் இல்லாமல் வெறும் 3 வருடத்தில் 100% மேல் லாபம் அடைந்துள்ள நிலையில், ஆராம்கோ, மைக்ரோசாப்ட் கூட்டணியுடன் நிச்சயம் 2 வருடத்தில் 100 சதவீத லாபத்தை அடையாதா என்ன..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance to give 100% return in next 24 months

Reliance will be the largest market cap company this week again and is going to give at least 100% return in the next 24 months helped by the Saudi Amaco partnership, rollout of Jio and also the Microsoft partnership.
Story first published: Tuesday, August 13, 2019, 10:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X