கொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மனிதர்களின் வாழ்வில் எது எப்போது நடக்கும் என கணித்திட முடியாத ஒரு விசித்திரமான செயல்கள், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை நமக்கு ஏதேனும் துரதிஷ்டவசமாக நடந்தாலும், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டாலும், நம்மை சார்ந்தவர்களாவது நன்றாவது இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர். அப்படிப்பட்ட சூழலில் கைகொடுப்பது தான் இந்த இன்சூரன்ஸ்.

 

அதிலும் பலர் தேர்தெடுப்பது டெர்ம் இன்சூரன்சையே. அப்படி இருக்கையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில், குருவி சேர்ப்பது போல் சேர்த்து, அதை முதலீடு செய்வோம்..

ஆனால் கடைசி கட்டத்தில் இதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது என்று கூறினால், எப்படி இருக்கும்? ஆக ஒருவர் இன்சூரன்ஸ் போடும் முன்பே இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

வழக்கு முடியும் வரை பணம் கிடைக்காது?

வழக்கு முடியும் வரை பணம் கிடைக்காது?

ஒரு வேலை பாலிசிதாரர் கொலை செய்யப்பட்டால், அந்த வழக்கு முடியும் வரை இன்சூரன்ஸ் பணத்தை நிறுத்தி வைப்பார்கள். அதிலும் அந்த வழக்கின் சாதகமான தீர்ப்புகள் வந்தால் மட்டும் இன்சூரன்ஸ் பணத்தை க்ளைம் செய்து கொள்ள முடியும். இதுவே பாலிசிதாரர் ஏதேனும் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தால், அந்த வழக்கு முடியும் வரை, அந்த வழக்கில் அவருக்கு சம்மந்தமில்லை. அவருக்கு சாதமான தீர்ப்பு வந்தால் மட்டுமே பாலிசியை க்ளைம் செய்ய முடியும்.

குடிபோதையில் இறந்தால் க்ளைம் கிடையாது

குடிபோதையில் இறந்தால் க்ளைம் கிடையாது

ஒரு பாலிசிதாரர் இறக்கும் போது குடிபோதையிலேயே அல்லது வேறு ஏதேனும் ஆல்காஹாலை பயன்படுத்தி இருந்தாலோ, அவர்களுக்கு க்ளைம் செய்ய முடியாது. ஆமாங்கா.. உதாரணத்திற்கு ஒருவர் மதுபோதையில் வண்டி ஒட்டிக் கொண்டு சென்று, விபத்தில் இறந்திவிட்டால், அந்த இறப்பிற்காக க்ளைம் செய்ய முடியாது. காலம் பூராவும் கஷ்டப்பட்டு, குடும்பத்திற்கு உதவும் என்றும் போடும் இன்சூரன்ஸ் பாலிசிகளும், இப்படி ஒரு சில தவறுகளால் க்ளைம் செய்ய முடியாமல் போகும். இது உங்கள் குடும்பத்தினைரை மேலும் வேதனைக்குள்ளாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டாயம் உண்மையை சொல்லுங்கள்?
 

கட்டாயம் உண்மையை சொல்லுங்கள்?

ஒரு வேலை நீங்கள் உண்மையில் கட்டாயம் புகைபிடிப்பவராக இருந்தால், உங்களுக்கு கட்டாயம் அதை பாலிசி எடுக்கும் முன்னரே அதை தெரிவியுங்கள். ஏனெனில் புகைப்பிடிப்பவர்களுக்கு கட்டாயம் பிரிமியம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இதை பாலிசி எடுக்கும் போது கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள், பாலிசி எடுத்த பின்பு புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், கட்டாயம் அதை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் ஒரு உங்களின் மரணம் புகை பழக்கத்தால் ஏற்பட்டதாக இருந்தால், பின்னர் பாலிசியில் அதை க்ளைம் செய்ய முடியாமல் போய்விடும்.

இதற்கென தனி பாலிசிகள் உண்டு

இதற்கென தனி பாலிசிகள் உண்டு

சிலர் அபாயகரமான விளையாட்டுகள் மூலம் மரணிப்பார்கள். ஆனால் அவர்கள் எடுத்து இன்சூரன்ஸ் அதற்கெல்லாம் க்ளைம் ஆகாது. அதிலும் ஆகாயத்தில் பறப்பது, ஆகாயத்தில் வண்டி ஓட்டுவது, பாராகிளைடிங், பாராசூட்டிங் மற்றும் கார், இரண்டு சக்கர வாகன ரேஸ்கள் என சிலவற்றில் எதிர்பாராத விதமாக மரணித்தால் அதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது. ஏனெனில் இதற்கென பிரிமியம் அதிகம் கொண்ட பாலிசிகள் உண்டு.

HIV or AIDsஉள்ளிட்ட நோய்களுக்கும் க்ளைம் செய்ய முடியாது?

HIV or AIDsஉள்ளிட்ட நோய்களுக்கும் க்ளைம் செய்ய முடியாது?

பாலிசி தாரர் ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது ஹெச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தாலே, அல்லது போதைப் பொருள் அதிகமாக உட்கொண்டதால் இறந்தாலோ, அவருக்கு இன்சூரன்ஸ் தொகையை க்ளைம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.

குழந்தை இறந்துவிட்டால் க்ளைம் இல்லை

குழந்தை இறந்துவிட்டால் க்ளைம் இல்லை

ஒரு வேளை ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாலிசி எடுத்திருந்தாலே அல்லது அதற்கு முன்னர் எடுத்திருந்தாலோ, சில எதிர்பாராத தருணங்களில் பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கின்றன. அவ்வாறு குழந்தைகள் இறந்தால் அதற்கெல்லாம் இன்சூரன்ஸ் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு டெர்ம் இன்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியாதாம்.

தற்கொலைக்கு க்ளைம் இல்லை

தற்கொலைக்கு க்ளைம் இல்லை

ஒரு வேலை பாலிசி தாரர் தற்கொலை செய்து கொண்டால் அந்த பாலிசியை க்ளைம் செய்ய முடியாது. எனினும் தற்போது சில நிறுவனங்கள் பாலிசி தாரர், பாலிசி எடுத்து ஒரு வருடத்துக்குள் இவ்வாறு தற்கொலை மூலம் இறந்துவிட்டால் க்ளைம் செய்ய முடியாது என்றும், இதுவே, பாலிசி போடப்பட்டு இரண்டாவது வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் பாலிசியை க்ளைம் செய்து கொள்ள முடியும் என சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இயற்கை பேரிடரால் அழிவா க்ளைம் இல்லை?

இயற்கை பேரிடரால் அழிவா க்ளைம் இல்லை?

ஒரு வேளை பாலிசி தாரர் இயற்கை பேரிடரால் இறந்துவிட்டால் அதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது. உதாரணத்திற்கு நில நடுக்கமோ, சுனாமியோ, வெள்ளப்பெருக்கே, சூறாவளியோ வந்து, இதனால் பாலிசிதாரர் இறந்துவிட்டால் க்ளைம் செய்ய முடியாது. ஆக மக்களே இன்சூரன்ஸ் போட்டால் மட்டும் பத்தாது. அதை க்ளைம் செய்யும் போதும் இதுபோன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். அவசியம் பாலிசி எடுக்கும் போது உங்களை பற்றி முழுமையான கருத்துளை சொல்லுதல் மிக நன்மையாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some major death cases are not covered in term life insurance

Some major death cases are not covered in term life insurance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X