43% ஊழியர்களை பணீ நீக்கம் செய்துள்ளோம்.. செலவை கட்டுபடுத்த வேறு வழி தெரியவில்லை.. IL & FS அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடன் பிரச்சனையால் தள்ளாடி வரும் ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனம் கடனை குறைக்கவும், செலவை குறைக்கவும் 43 சதவிகித ஊழியர்களை பணீ நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (IL&FS) என்ற இந்த நிறுவனம், இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும்.

எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, யு.ஐ.ஐ மற்றும் என்.ஐ.சி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்துவரும் தொழிலில் ஈடுபட்டு வந்தது.

 ஊழியர்கள் நீக்கம் செலவை குறைக்க உதவியுள்ளது!

ஊழியர்கள் நீக்கம் செலவை குறைக்க உதவியுள்ளது!

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஐந்தாவது தீர்மான செயல்முறை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்த முன்னேற்ற அறிக்கை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (NCLT) அளித்துள்ளது. மேலும் இந்த ஊதிய மசோதா திட்டம் கிட்டதட்ட 47 சதவிகிதம் ஊதியத்தை குறைக்க உதவியுள்ளதாகவும், இந்த நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது. இந்த மனிதளவள குறைப்பு முயற்சிகளில், கடந்த அக்டோபர் 1, 2018 முதல் ஜூன் 30, 2019 வரையிலான காலத்தில் மட்டும் 43 சதவிகிதம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், 47 சதவிகிதம் ஊதியத்தை சேமிக்க முடிந்தது என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 முன்னரே கூறப்பட்ட திட்டம் தான்

முன்னரே கூறப்பட்ட திட்டம் தான்

முன்னதாக நான்காவது தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையின் படி, உதய் கோட்டக் தலைமையிலான புதிய வாரியம், இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதாக கூறியது. ஒன்று மனிதவள நடவடிக்கை மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு வழங்கப்படும் கடன் குறித்த நடவடிக்கை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 தேவையில்லாத ஊழியர்கள் பணி நீக்கம்

தேவையில்லாத ஊழியர்கள் பணி நீக்கம்

இந்த நிலையில் நான்காவது அறிக்கையில் அளிக்கப்பட்ட அறிக்கையின் படி, ஊழியர்களை பணி நீக்கம் செய்தாகி விட்டது. இதனால் சம்பள செலவை மிச்சப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் மூலம் IL&FS, ITNL, IFIN, IL&FS Energy Development Company and IL&FS Engineering and Construction Company Ltd (IECCL) உள்ளிட்ட நிறுவனங்களில், தேவையில்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது இந்த புதிய குழு.

 IECCLலின் ஒப்பந்த ஊழியர்கள் 57% பணி நீக்கம்

IECCLலின் ஒப்பந்த ஊழியர்கள் 57% பணி நீக்கம்

இதுவே இந்த குழுமத்தின் IL&FS Engineering and Construction Company Ltd நிறுவனம் கடந்த அக்டோபர் 2018 முதல் ஜூன் 2019 வரையிலான காலத்தில், 57 சதவிகித மனித வளங்களை குறைத்துள்ளது. இதன் மூலம் 58 சதவிகித சம்பள செலவை மிச்சப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை 90 சதவிகிதம் பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IL&FS Group has either lay off 43% employees as a cost cutting measure since October

IL&FS Group has either lay off 43% employees as a cost cutting measure since October
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X