மக்கள் கவலை தீர்ந்தது.. வங்கி சேவையில் புதிய மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்கள் பணப் பரிமாற்றத்திற்குப் பின் அதிகளவில் பயன்படுத்தும் ஒரு சேவை என்றால் அது ஏடிஎம் சேவை தான். அப்படி இருக்கையில் ஏடிஎம் சேவையின் மூலம் நம்முடைய பணத்தை நாம் எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பதே தவறு என மக்கள் கூறி வரும் நிலையில் தோல்வி அடைந்த பரிமாற்றம், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாமல் இருக்கும் போது செய்யப்படும் பரிமாற்றம் என அனைத்திற்கு வங்கிகள் கட்டணத்தை வசூலித்து வருகிறது. இந்த இக்கட்டான நிலைக்கு ரிசர்வ் வங்கி முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

5 இலவச பரிமாற்றம்
 

5 இலவச பரிமாற்றம்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மாதம் 5 முறை மட்டுமே ஏடிஎம் சேவையை இலவசமாகப் பயன்படுத்தும் விதி, நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் 6வது பரிமாற்றத்தில் இருந்து வங்கிகள் வேறு ஏடிஎம் சேவைகளை கூடுதலாக பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த 5 பரிமாற்றத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் தோல்வி அடைந்த பரிமாற்றம், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாமல் இருக்கும் போது செய்யப்படும் பரிமாற்றம் என அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது இத்தகைய தோல்வி அடைந்த பரிமாற்றங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் தோல்வி அடைந்த பரிமாற்றத்திற்கு வங்கிகள் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் வணிக வங்கிகளுக்கு எழுத்துப்பூர்வமான அறிக்கையைக் கொடுத்துள்ளது. இதனால் மக்கள் இனி வரும் காலத்தில் கொடுக்கப்படும் இலவசமான 5 பரிமாற்றத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

 தோல்வி பரிமாற்றங்கள்

தோல்வி பரிமாற்றங்கள்

வன்பொருள், மென்பொருள், இண்டர்நெட் பிரச்சனை, பணம் இல்லாமல் இருப்பது, ரத்துச் செய்யப்பட்ட பரிமாற்றம் (வங்கி தரப்பு மற்றும் வாடிக்கையாளர் தரப்பு), தவறான கடவுச்சொல் பதிவிடுதல் என அனைத்து வகையான தோல்வி அடைந்த பரிமாற்றங்கள் இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

பணம் பரிமாற்றம் அல்லாத சேவை
 

பணம் பரிமாற்றம் அல்லாத சேவை

இதுமட்டும் அல்லாமல் பணம் பரிமாற்றம் அல்லாத பேலென்ஸ் தெரிந்துகொள்ளுதல், செக் புக் ரெக்வெஷ்ட், வரி செலுத்துதல் ஆகியவையும் இலவசமாகச் செய்துகொள்ளலாம். இதுவும் 5 இலவச பரிமாற்றத்தில் சேர்க்கப்படாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi atm bank of india india
English summary

RBI clarifies on free ATM transactions

The Reserve Bank of India has told banks not to treat failed transactions at ATMs or non-cash transactions such as balance enquiries or chequebook requests as part of five free transactions available to customers every month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X