JioFiber திட்டத்தால் பயன் பெற போகும் கேபிள் நிறுவனங்கள்.. Reliance அதிரடி ஆஃபர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ள JioFiber பிராட்பேண்ட் திட்டங்கள் லேண்ட்லைன் இணைப்பு மற்றும் எச்டி, 4 கே செட் அப் பாக்ஸ் மற்றும் ஜியோவின் இண்டர்நெட் ஆப் திங்ஸ் அணுகலுடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

இந்த அறிவிப்பு மற்ற பிராட்பேண்ட் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தாலும், பல கேபிள் நிறுவனங்களுக்கு இது நல்ல வாய்ப்பை வழங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த ஜியோ பைஃபர் திட்டத்திற்காக, பல கேபிள் நிறுவனங்களின் தேவை ஜியோவுக்கு இருப்பதால், அந்த கேபிள் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் சிலர் வாங்க கூட வாய்ப்புகள் இருப்பதாக அத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அடிசக்க 4 மடங்கு லாபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. அனில் அம்பானி மகிழ்ச்சி..! அடிசக்க 4 மடங்கு லாபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. அனில் அம்பானி மகிழ்ச்சி..!

 பிராட்பேண்ட் சந்தையை சீர்குலைக்கும்

பிராட்பேண்ட் சந்தையை சீர்குலைக்கும்

இந்த நிலையில் ஜியோ ஆரம்பித்த போது இந்த நிறுவனம், எந்த அளவுக்கு பல நிறுவனங்கள் பிரச்சனையை மேற்கொண்டனவோ, சந்தையை சீர்குலைத்தனவோ, அதேபோல் இந்த ரிலையன்ஸின் ஜியோ பைஃபர் திட்டத்தினாலும் பிராட்பேண்ட் சந்தை மேலும் சீர்குலைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. பிராட்பேண்ட் சந்தையில் இந்த ஜியோ பைஃபர் திட்டம் அதிரடியான பல மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செயல்படலாம்

உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செயல்படலாம்

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று, இத்திட்டத்தினை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி, இந்த பிராண்ட்பேன்ட் சேவைக்கு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும், இதனால் இந்த பிராட்பேண்ட் சேவையை விரைவாக விரிவாக்கம் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தார்.

பல நிறுவனங்களை வாங்க கூடும்
 

பல நிறுவனங்களை வாங்க கூடும்

இந்த நிலையில் இந்தியாவில் 1,00,000 எல்.சி.ஓக்கள் இருக்கிறார்கள், இதோடு 1,100 மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர்ஸ் இருக்கிறார்கள். இவர்கள் திரட்டிகளாக இருக்கின்றனர். இவர்கள் கடைசி மைல் இணைப்பு வரை இணைந்திருக்கிறார்கள். ஆக இந்த நிலையில் ரிலையன்ஸ் இவர்களுடன் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ், ஜியோ பைஃபர் திட்டத்திற்காக மேலும் பல கேபிள் நிறுவனங்களை வாங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

பல மடங்கு இலக்கு

பல மடங்கு இலக்கு

இந்த நிலையில் உள்நாட்டு கேபிள் டிவி சந்தையின் தன்மையை கருத்தில் கொண்டும், கடைசி மைல் இணைப்பின் தேவை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, அடுத்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ், 1,600 நகரங்களில், 20 மில்லியன் வீடுகள் மற்றும் 15 மில்லியன் வணிக நிறுவனங்களை, அதன் பிராட்பேண்ட் சேவையை அடைய வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பதாகவும், இதற்காக இன்னும் பலவற்றை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries May Buy More Cable Companies to support JioFiber Plans

Reliance Industries May Buy More Cable Companies to support JioFiber Plans
Story first published: Friday, August 16, 2019, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X