சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உணவு டெலிவரி நிறுவனமான Zomato பல மக்களை அதிரடியான ஆஃபர் மூலம் கவர்ந்துள்ளது. அதிலும் இன்றைய இளைஞர்களின் மிகப்பிடித்த ஆப் என்றே கூட சொல்லலாம். 200 ரூபாய் பிரியாணியை 100 ரூபாய்க்கும், அதற்கும் குறைவாகவும் கொடுத்தால் யாருக்கு தான் பிடிக்காது.

 

அப்படிப்பட்ட இந்த Zomato உள்ளிட்ட உணவு டெலிவரி ஆஃப்களிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள, ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட உணவகங்கள் வெளியேறியுள்ளனவாம்.

இதனால் பதறிப்போன Zomatoவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான Deepinder Goyal தனது டிவிட்டர் பக்கத்தில் இது பற்றிய கருத்துக்களை கூறியுள்ளார்.

எக்சிட் ஆன உணவகங்கள்

எக்சிட் ஆன உணவகங்கள்

Zomato போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், 1000க்கும் மேற்பட்ட உணவகங்கள் Zomato, ஈஸி டின்னர், நியர்பை, டைன்அவுட் மேஜிக்பின், (Zomato Gold, magicpin, EazyDiner, Nearbuy, and Dineout. ) உள்ளிட்ட பல உணவு டெலிவரி நிறுவனங்களின் உணவு டெலிவரி ஆஃப்களிலிருந்து, தங்களது வர்த்தக உறவை முறித்துக் கொண்டுள்ளனவாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள். இதோடு பல உணவகங்கள் Loglout என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனவாம்.

உணவகங்கள் வெளியே போக வேண்டாம்

உணவகங்கள் வெளியே போக வேண்டாம்

அதிகளவிலான உணவுகளை டெலிவர் செய்யும், மிகப் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவின் தலைவர் Deepinder Goyal, உணவகங்களை இவ்வாறு பிரச்சாரம் செய்வதை நிறுத்துமாறும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளராம். அதோடு பேச்சுவார்த்தைக்கும் அந்த உணவகங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளராம்.

பிரச்சாரத்தை கைவிட வேண்டும்
 

பிரச்சாரத்தை கைவிட வேண்டும்

இது மட்டும் அல்ல, உணவகங்கள் நுகர்வோரின் நலன் கருதி, இவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சோமேட்டோவின் தலைவர், உணவக உரிமையாளர்களை, நாங்கள் நுகர்வோரின் நலன் கருதி வெளியேறும் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்றும், மேலும் இந்த உணவக உரிமையாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளாராம்.

உணவகங்கள் உணவு விலையை குறைக்க வேண்டும்

உணவகங்கள் உணவு விலையை குறைக்க வேண்டும்

மக்கள் நாளுக்கு நாள் வீட்டு உணவைத் தவிர்த்து, உணவகங்களை அதிகளவில் நாடுகின்றனர். இதனால் உணவகங்கள் உணவு விலையை குறைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். மேலும் சீனாவை உதாரணம் காட்டி, சராசரியான உணவு டெலிவரி விலை, சீனாவைப் போலவே இந்தியாவிலும் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சீனாவில் ஒரு நபர் வருமானம், இந்தியாவை விட 4.5 மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தவிர இந்தியாவில் உணவு தொழிலை நிலை நிறுத்த, உணவகங்கள் உணவுகளின் விலையை குறைக்க வேண்டும் என்றும், மேலும் இந்த துறையில் நிலையான வளர்ச்சியை காண விலை குறைப்பது மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஒரே வாரத்தில் பல உணவகங்கள் வெளியேற்றம்

ஒரே வாரத்தில் பல உணவகங்கள் வெளியேற்றம்

குருகிராமில் உள்ள 300 உணவகங்கள் இந்த ஆஃப்பிலிருந்து வெளியேறுவதாக கூறிய பின்னர், மூன்றும் நாட்கள் கழித்தே கோயல், இவ்வாறு டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் இந்த வெளியேற்றம் கடந்த வியாழக்கிழமையன்றே 1000க்கும் மேல் தாண்டியதாம். உணவகங்களை மட்டுமே நம்பியுள்ள Zomato, EazyDiner (Prime), Zomato Gold, Dineout, nearbuy and magicpin உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உணவு தள்ளுபடி விலை வேண்டாம்

உணவு தள்ளுபடி விலை வேண்டாம்

ஏன் இந்த பிரச்சனை திடிரென தலைதூக்கியிருக்கிது என்றால், பல உணவு வழங்கும் ஆஃப்களிலிருந்து வழங்கப்படும் தள்ளுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த உணவகங்கள் வெளியேறியுள்ளனவாம். அதிகப்படியான தள்ளுபடிகளால் தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் முழுமையான பிரச்சனை என்னவென்று இந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato's founder urges restaurants to stop logout campaign

Zomato's founder urges restaurants to stop logout campaign
Story first published: Sunday, August 18, 2019, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X