Arun Jaitley நிதி அமைச்சராக இருந்த போது தான் இதெல்லாம் நடந்ததா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் 2014 - 19 ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி (Arun Jaitley)-ன் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் - அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். தற்போது அருண் ஜெட்லி (Arun Jaitley) Extracorporeal Membrane Oxygenation (ECMO) and Intra-aortic balloon pump (IABP)என்று சொல்லப்படுகின்ற மருத்துவ வழிமுறைகள் மூலம் மூச்சுவிட்டுக் கொண்டி இருக்கிறாராம்.

 

66 வயதான அருண் ஜெட்லி (Arun Jaitley) கடந்த ஆகஸ்ட் 09, 2019 அன்று சுவாசப் பிரச்னை இருந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது பல துறை சார்ந்த மருத்துவர்களும் அருண் ஜெட்லி (Arun Jaitley)-க்கு சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.

Arun Jaitley நிதி அமைச்சராக இருந்த போது தான் இதெல்லாம் நடந்ததா..!

பாரதிய ஜனதா கட்சியின் 2014 - 19 கால கட்டத்தில், நிதி அமைச்சராக பொறுப்பேற்று பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துதல் என பல்வேறு முக்கிய திட்டங்களில் மோடியின் திட்டங்களுக்கு பக்க பலமாக இருந்தவர் நம் அருண் ஜெட்லி (Arun Jaitley). இவர் மாநிலங்களவை வழியாக நிதி அமைச்சர் பதவிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் தள்ளுபடி.. மோடி அரசு அதிரடி முடிவு..

கடந்த 2014 - 19 ஆட்சிக் காலத்திலேயே உடல் நலக் குறைபாடு காரணமாக, அமெரிக்காவுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வந்தார். அந்த காலங்களில் பியுஷ் கோயல் நிதி அமைச்சகத்தை கூடுதல் பொறுப்பாக எடுத்துக் கொண்டு ஒரு இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Asian Development Bank எனப்படும் ஆசிய மேம்பாட்டு வங்கியில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தவர். இவர் காலத்தில் தான் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களே முன் வந்து அரசிடம் தெரிவித்து வரி செலுத்தும் Income Decleration Scheme கொண்டு வரப்பட்டது.

 

நவம்பர் 08, 2016 அன்று இந்திய வரலாற்றில் முக்கியமான பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அனைத்து செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் புதிய கலர் நோட்டுக்களும் கொண்டு வரப்பட்டது.

சமீபத்தில் தான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று, மத்திய அமைச்சரவைகளில் எல்லாம் இடம் பிடித்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், பாஜக மக்களவைப் உறுப்பினர் ஸ்வபன் தாஸ் குப்தா போன்றவர்கள் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜெட்லி (Arun Jaitley)-ன் உடல் நிலையைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தவிர, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மற்றும் டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி, ஜோதிராதித்யா சிந்தியா, இந்திய விமானப் படைத் தலைவர் பைரேந்தர் சிங் தானோ என பல தரப்பினர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து அருண் ஜெட்லி (Arun Jaitley)-யைநலம் விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Arun jaitley health condition is critical

Arun jaitley health condition is critical
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X