மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய சியோமி தனது வர்த்தகத்தைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல எலக்ட்ரானிக் உபகரணங்களை அறிமுகம் செய்து மக்களைக் கடந்த 2 வருடமாக ஆச்சரியத்திலும், வியப்பிலும் மூழ்கி செய்தது.

 

இந்நிலையில், ஐஸ்கேக் மீது வைக்கப்படும் செர்ரி பழம் போல் புதிய அதிநவீன டிவி-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

 சியோமி

சியோமி

ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி-யின் நிறுவனர் லேயி ஜூன் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமே வியக்கும் வகையில் மலிவான விலைக்கு 70 இன்ச் ஸ்கிரீன் கொண்ட பிரம்மாண்ட டிவியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

சியோமி நிறுவனத்தின் டிவி அனைத்தும் இதுநாள் வரையில் MI பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த 70இன்ச் பிராம்மாண்ட டிவி-ஐ ரெட்மி பெயரில் வெளியிட முடிவு செய்துள்ளது.

 

ரெட்மி டிவி

ரெட்மி டிவி

MI டிவி போலவே ரெட்மி டிவியும் ஆன்டுராய்ட் இயங்குதளத்தில் இயங்க உள்ளது. மேலும் பேட்ச்வால் யூசர் இன்டர்பேஸ் உடன் மக்களுக்குச் சேவை அளிக்க உள்ளது இந்த ரெட்மி டிவி.

இது 4K தரத்தில், HDR இயங்கும் வகையில், டால்பி டிடிஎஸ் ஆடியோ உடன் மிகவும் கிளாசிக் ஆக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பிரம்மாண்ட ரெட்மி டிவி-ஐ TPV டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் சியோமிக்காகத் தயாரிக்க உள்ளது.

 

விலை போர்
 

விலை போர்

ஸ்மார்ட்போன் சந்தையைப் போலவே டிவி பிரிவிலும் சியோமி வந்த பின் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. பெரு நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையில் இந்நிறுவனம் டெலிவரி செய்யும் காரணத்தால் MI டிவி மாபெரும் வெற்றியை அடைந்தது.

குறைவான விலை, நிறைந்த சேவை எனப் பட்டையைக் கிளப்பும் MI டிவியால் இப்பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான சோனி, சாம்சங், எல்ஜி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது.

 

70இன்ச் டிவி

70இன்ச் டிவி

விலையில் மட்டும் அல்லாமல் தரத்தில் சிறந்த விளங்கும் MI டிவி மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தற்போது 70இன்ச் டிவி-யை ரெட்மி பிராண்ட் பெயரில் அறிமுகம் செய்வதால் சற்று விலை கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் எந்த விதத்திலும் சோனி, சாம்சங் நிறுவனங்களின் விலைக்கு ஈடு செய்யாமல் குறைவான விலைக்கே சியோமி விற்பனை செய்யும் என்பது உறுதி. இதன் அறிமுகத்தின் மூலம் நாட்டின் 30 சதவீத டிவி விற்பனை சந்தையைச் சியோமி பெற்றாலும் ஆச்சர்யம் பட வாய்ப்பு இல்லை.

சமீபத்தில் ஓன்பிளஸ் நிறுவனம் கூடச் சியோமிக்குப் போட்டியாக டிவி வர்த்தகத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: xiaomi lei jun சியோமி
English summary

Redmi's first-ever TV has massive 70-inch display: Big fight to samsung, Sony

Xiaomi Founder, Chairman and CEO Lei Jun has confirmed that the first-ever Redmi TV with a huge 70-inch screen is all set to launch in China on August 29. The Redmi TV (model number L70M5) recently passed its 3C certification in China. Going by the teaser and the model number, it is likely to be the same product.
Story first published: Tuesday, August 20, 2019, 8:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X