ஆன்லைன் டெலிவரியா.. வேண்டாவே வேண்டாம்.. பதறும் உரிமையாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு புறம் நவீன தொழில்நுட்பங்களின் மீதும் தீராத ஆர்வம் கொண்ட நமது இளைஞர்கள் மத்தியில், புதுப்புது அப்ளிகேஷன்கள் மீதும் தீராத ஆர்வம் இருக்கிறது. இதன் விளைவாக சந்தைக்கு வரும் புதுப்புது அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி, அதன் பலன்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள்.

 

அதிலும் இந்த ஆப்களில் கிடைக்கும் சலுகைகளுக்கு தான் சிறந்த இடமே. இந்த ஆப்பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது. அதன் மூலம் இவ்வளவு தள்ளுபடி, இதன் மூலம் இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்ற ஆசையை தூண்டுகிறது.

அந்த வகையில் உணவுகளை டெலிவரி செய்யும் உபர் ஈட்ஸ், ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட பல ஆப்கள் உணவகங்களில், உங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால், அவை சில நிமிடங்களிலேயே உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அது பிரியாணியாக இருந்தாலும் சரி, சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி.

டெலிவரி நிறுவனங்கள் உணவகங்களுடன் ஒப்பந்தம்

டெலிவரி நிறுவனங்கள் உணவகங்களுடன் ஒப்பந்தம்

இது போன்ற உணவு ஆப்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் உணவுப் பொருட்களைப் பெற்று வழங்குவதற்காகவே பிரபலமான உணவகங்கள் மற்றும் உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் அவர்களுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் உணவகங்கள், குறிப்பிட்ட உணவை உணவு டெலிவரி ஆப்களின் மூலம் ஆர்டர் செய்தால், அதை அந்த டெலிவரி நிறுவனத்தின் டெலிவரி பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுடச்சுட டெலிவரி செய்கிறார்கள்.

உணவக உரிமையாளர்களுக்கு நஷ்டம்

உணவக உரிமையாளர்களுக்கு நஷ்டம்

இது நாம் இருக்கும் இடத்திலேயே விரும்பிய உணவை, வீடு தேடிக் கொண்டு வந்து சேர்த்து விடும். இந்த அடிப்படையில் இந்த ஆப்கள் வெகுவிரைவில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிக பிரச்சித்தி பெற்றன என்றே கூறலாம். எனினும் ஒரு புறம் மக்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் ஹோட்டல் மற்றும் பானத் தொழில்களை முடக்குவதாகவும், இதனால் உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

உணவகம் – டெலிவரி நிறுவனங்கள் பேச்சு வார்த்தை
 

உணவகம் – டெலிவரி நிறுவனங்கள் பேச்சு வார்த்தை

இந்த நிலையில் தி நேஷனல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் ஆப் இந்தியா NRAIவில் உள்ள 5,00,000 லட்சம் உணவகங்கள், 5 ஆன்லைன் உணவகங்களோடு கடந்த இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த ஆன்லைன் நிறுவனங்கள் அளித்து வரும் தள்ளுபடியால், உணவகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மறுசீரமைப்புக்கு சிறு காலம் ஆகும்

மறுசீரமைப்புக்கு சிறு காலம் ஆகும்

இந்த நிலையில் NRAIவின் தலைவர் ராகுல் சிங் இது குறித்து கூறுகையில், நாங்கள் உணவை டெலிவரி செய்யும் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம், அவர்களிடம் எங்களது கவலைகளை தெரிவித்தோம். ஆக அவர்களது தயாரிப்புகளை மறுசீரமைக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்றும், ஆழ்ந்த தள்ளுபடிகளில் சீர்திருத்தம் விரைவில் திருதப்பட்ட அம்சங்களுடன் திரும்ப வருவார்கள் என்றும் கூறியுளார்.

உணவகங்கள் லாக்அவுட் பிரச்சாரம்

உணவகங்கள் லாக்அவுட் பிரச்சாரம்

மேலும் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியிலிருந்தே சில உணவகங்கள் #logout லாக்அவுட் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அதோடு இந்த உணவகங்கள் இந்த ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடியான பல ஆழ்ந்த தள்ளுபடிகள் தங்களது வர்த்தகத்தை பெரிதும் பாதிப்பதாக போர்க் கொடி தூக்கியுள்ளன. இந்த நிலையிலேயே என்.சி.ஆர், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா முழுவதிலும் உள்ள 2000 உணவகங்கள், தள்ளுபடி மற்றும் சலுகைகள், கூப்பன்களை வழங்கும் சோமேட்டோ மற்றும் டைன்அவுட், ஈஸிடின்னர், மேஜிக்பின் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளன.

நஷ்டம் காணும் உணவகங்கள்

நஷ்டம் காணும் உணவகங்கள்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள NRAI, ஆன்லைன் தளங்கள் இவ்வாறு அதிகப்படியாக வழங்கப்படும் தள்ளுபடிகளால், பாதிக்கப்படுவது முதலீடு செய்துள்ள உணவகங்களே. மேலும் அது தவிர ஆன்லைன் சந்தாதாரர்கள் கட்டணமாக செலுத்தியதில் உணவகங்கள் எந்த வித பங்கையும் வாங்கவில்லை என்றும் சிங் கூறியுள்ளார். மேலும் இந்த தள்ளுபடிகளும், ஆபர்களும் விரைவில் முடிவுக்கு வரும், ஆனால் உணவகங்கள் அப்படி அல்ல, சில்லறை வர்த்தகங்கள் நடந்து கொண்டே இருக்கும், அது தவிர உணவகங்கள் ஒன்றும், மீதமிருக்கும் உணவுகளை தள்ளுபடி விலையில் கொடுக்கவில்லை. ஏனெனில் உணவுகளை அவ்வப்போது சமைத்து சூடாக தருகின்றன என்றும் சிங் கூறியுள்ளார்.

சோமேட்டோ கோல்டில் மாற்றம்

சோமேட்டோ கோல்டில் மாற்றம்

சோமேட்டோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தீபீந்தர் கோயல் இது குறித்து ட்வீட் செய்துள்ளாராம். நாங்கள் தொழில் துறையுடன் இணைந்து பணியாற்றவும், சோமேட்டோ கோல்டில் மாற்றங்களை செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்றும், இதனால் உணவகங்கள் மற்றும் நுகர்வோருக்கும் வெற்றி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் உணவகங்கள் இவ்வாறு வெளியேறுதல் பிரச்சாரத்தை குறைத்து, முன்னோக்கி செல்லும் வழியை காணலாம் என்றும், இது குறித்து உணவக உரிமையாளர்களுடன் விவாதிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

வளர்ச்சி காணும் உணவு சந்தை

வளர்ச்சி காணும் உணவு சந்தை

மேலும் இந்தியாவில் உணவு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முறையானது வளர்ச்சி கண்டு வருகிறது. இது வருடத்திற்கு 16 சதவிகிதம் வளர்ச்சி கண்டு வரும் இந்த துறை, 2023ம் ஆண்டில் 17.02 பில்லியன் டாலர் அளவு வளர்ச்சி காணும் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். மேலும் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: restaurants உணவகம்
English summary

Food war continues in Restaurants vs online food

Food war continues in Restaurants vs online food
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X