ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடா.. ப சிதம்பரத்தை நெருக்கும் தனியார் நிறுவனம்.. நீடிக்கும் சிக்கல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : மத்திய முன்னாள் நிதியமைச்சரான பா சிதம்பரத்துக்கு எதிராக 63 மூன்ஸ் டெக்னாலஜி நிறுவனம், 10,000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

இந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்றத்தின் சம்மன் நோட்டீஸை எதிர்கொண்டுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம்.

 
 ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடா.. ப சிதம்பரத்தை நெருக்கும் தனியார் நிறுவனம்.. நீடிக்கும் சிக்கல்!

மேலும் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் கூற்றுக்களுக்கு, ப. சிதம்பரம் உள்ளிட்ட சிலருக்கு கடந்த ஜூலை 24ம் தேதியன்றே, அக்டோபர் 15ம் தேதியன்று நேரிலோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ பதிலளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நிதேஷ் ஜெயின் வாதத்தின் நகலையும் நிறுவனம் நம்பியுள்ள அனைத்து ஆவணங்களையும் கோரியுள்ளார். அதோடு சம்மனுடன் வாதத்தின் நகல் அல்லது வேறு எந்த இணைப்புளும் இல்லை எனவும், எனவே சம்மன் சிவில் நடைமுறைகளின் விதிமுறைக்களுக்கு இணங்கவில்லை என்றும் சிதம்பரத்தின் வழக்கறிஞர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

சரி அப்படி என்னதான் அந்த மனுவில் இருக்கு எதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் அபாராதம் என்றும் கேட்கீறிர்களா? மத்தியில் பா சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏராளமான பிரச்சனைகளை 63 மூன்ஸ் டெக்னாலாஜி கொடுத்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு விசாரனையும், சோதனையும் நடத்தியதில், எந்த விதமான பணமுறைகேடோ அல்லது மோசடியும் நடக்கவில்லை என்பது நிருபிக்கப்பட்டது.

ஆனால் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக இவர்கள் சதித்திட்டம் தீட்டித்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்தனர் என்றும், குறிப்பாக ப.சிதம்பரம், பார்வேடு மார்கெட் கமிஷன் தலைவர் ரமேஷ் அபிஷேக், திறன் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து தான் இந்த திட்டத்தினை, எங்கள் நிறுவனத்திற்கு எதிராக தீட்டியுள்ளனர். ஆக எங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு எதிராக 10,000 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former union finance minister Chidambaram seek documents of suit filed by 63 moons technology

Former union finance minister Chidambaram seek documents of suit filed by 63 moons technology
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X