டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெய்ப்பூர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னதாக டெபிட் கார்டினை அகற்ற திட்டமிட்டிருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது டெபிட் கார்டுகளை அகற்ற எந்த திட்டமும் இல்லை, மாறாக டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அதிகரிக்கவே திட்டமிட்டிருப்பதாகவும் எஸ்.பி.ஐயின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.

 

மேலும் இன்னும் 18 மாதங்களில் 10 லட்சத்துக்கு அதிகமான யோனோ கேஸ் பாயின்டுகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 70,000 யோனோ கேஸ் பாயின்டுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார். இந்த விரிவாக்கம் மேலும் டெபிட் கார்டு உபயோகத்தை குறைக்கலாம் என்றும் ரஜ்னிஷ் கூறியுள்ளார்.

டெபிட் கார்டை அகற்றும்  திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி!

மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்! 10918 புள்ளிகளில் நிஃப்டி..!

யோனோ என்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வங்கி தளமாகும். இதை வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி பணத்தை எடுக்கவும், அதோடு பல பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்தவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு ரெபோ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன் குறித்த வங்கியின் புதிய சலுகை, வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும், இதுவே வாடிக்கையாளர்களின் விருப்பமும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆட்டோமொபைல் துறை குறித்து பேசிய அவர், சந்தையில் சில போக்குகள் உள்ளன, அவை பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு வெளிப்படையான உலகளாவிய போக்கு என்றும், வேலைகளின் நிச்சயமற்ற தன்மையால், மக்கள் சொந்த வாகனங்களில் இருந்து, வாடகை வாகன மாதிரிக்கும் மாறலாம் என்றும், இது எந்த அளவு வாகனத் தொழிலை பாதிக்கப்படுகிறது என்றும் கண்டறியப்பட வேண்டும் என்றும் குமார் கூறியுள்ளார்.

இது தவிர வேளாண் துறையையும் வணிக ரீதியாக சாத்தியமான துறையாக மாற்றுவதற்கு, இது குறித்து ஆராய வேண்டிய அவசியமும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் யோனோ பயன்பாட்டினை விவாசாயிகளுக்கு எடுத்துரைத்த வங்கியாளர், யோனோ ஆப்பை பயன்படுத்தி, உரங்கள், விவசாயங்கள், விவசாய கருவிகள் மற்றும் மற்ற பல உபகரணங்கள் நியாயமான விலையில் வாங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State Bank of India has no plans to discontinue debit cards but plan to increased use of digital platform

State Bank of India has no plans to discontinue debit cards but plan to increased use of digital platform
Story first published: Wednesday, August 21, 2019, 17:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X