இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் விதமாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பல மாற்றங்களையும், சலுகைகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல் டைம் செட்டில்மென்ட் சிஸ்டம் எனப்படும் (RTGS) பணபரிமாற்றத்திற்கான நேரத்தை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த பரிவர்த்தனையை இனி, காலை ஏழு மணிக்கெல்லாம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி!

எனினும் இந்த ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) வசதிக்கான நேரத்தை ஆர்பிஐ ஏற்கெனவே மாற்றியது குறிப்பிடத்தக்கது. இது முன்னர் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே இருந்த ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான நேரத்தை, கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் மாலை 6 மணி வரை நீடித்திருந்தது கவனிக்கதக்கது.

தனியார் கம்பெனிகள் கைக் குழந்தைகளா என்ன? அரசிடம் வந்து அழக் கூடாது! பொருளாதார ஆலோசகர் காட்டம்..! தனியார் கம்பெனிகள் கைக் குழந்தைகளா என்ன? அரசிடம் வந்து அழக் கூடாது! பொருளாதார ஆலோசகர் காட்டம்..!

ஆனால் தற்போது இந்த வசதியை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை செய்து கொள்ளலாம் என்று அதிரடியாக மாற்றத்தினை செய்துள்ளது ஆர்.பி.ஐ. மேலும் இது வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த புதிய விதிகளின் படி, வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு வரை செய்து கொள்ள முடியும் என்றும், இதுவே ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு இடையேயான பரிவர்த்தனைகள், காலை 8 மணி முதல் தொடங்கி இரவு 7.45 மணி வரை செய்து கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .

இது தவிர 2 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட NEFT பரிவர்த்தனைகளை தினசரி 24 மணிநேரமும் செய்வதற்கான அனுமதியையும் ரிசர்வ் பேங்க் அளித்துள்ளது. இது அடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தற்போது இந்த NEFT பரிவர்த்தனைகள், வங்கி விடுமுறை நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் காலை 8 மணி முதல், மாலை 7 மணி வரை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI has extended RTGS money transfer timing from August 26

RBI has extended RTGS money transfer timing from August 26
Story first published: Thursday, August 22, 2019, 14:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X