இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை அறிவோம். அதோடு பலரின் வியாபாரம் காலி ஆனது, டீலர்கள் வியாபார்ம இல்லாமல் கடைக்கு பெரிய பூட்டு போட்டுச் சென்றது, அதனால் சுமார் 30,000 பேர் தங்கள் வேலையை இழந்தது, ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்களும் தங்களுக்கான தேவை மிகவும் குறைந்து இருப்பதால் போதுமான உற்பத்தி செய்ய முடியாமல் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது என ரண களமாக காட்சி அளிக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை
இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் விதத்தில் இப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆடோமொபைல் துறையை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

இது நாள் வரை அரசுத் துறைகள் புதிய வாகனங்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு ஏன் பழைய வாகனங்களை புதுப்பிக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அந்தத் தடைய இப்போது நீக்கி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆக இனி அரசுத் துறைகள், அமைச்சகங்கள் பலரும் தங்கள் பழைய வாகனங்களை மாற்றிக் கொள்வது அல்லது புதிய வாகனங்களை வாங்குவது என களத்தில் இறங்குவர்கள். இதனால் கொஞ்சமே கொஞ்சம் ஆட்டோமொபைல் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
மார்ச் 2020-க்குள் வாங்கப்படும் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களின் பதிவு காலம் முடிவடையும் வரை அவைகள் செயல்பாட்டில் இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு 2020-க்குப் பிறகும் இந்த பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை தாராளமாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் விற்பனையை அதிகரித்து தேவையை அதிகரிக்க இருக்கிறார்களாம். அதற்கு வாகன பதிவுக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற விஷயத்தை தற்போது அரசு கைவிடுகிறதாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை இப்படி சரிவு காணத் தொடங்கி சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு அரசுக்கு, ஆட்டோமொபைல் துறையில் நிலவும் பிரச்னை புரிந்து இருக்கிறது. இனியாவது அரசு ஆழமாக யோசித்து உதவுவார்கள் என நம்புகிறார்கள் தொழிலதிபர்கள்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications