இது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : கடனில் சிக்கித் தவித்து ஆர்காம் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தம்பியின் சொத்தை வாங்க நினைக்கும் அண்ணன் ஒரு புறம், மறுபுறம் ஸ்டெர்லைட் குழுமத்தால் ஊக்குவிக்கப்பட்ட டிவின் ஸ்டார் டெக்னாலஜி நிறுவனமும் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனராம்.

இது தவிர ஜியோவால் துவண்டு போயுள்ள பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இதற்காக போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் திவால் நடவடிக்கைகளை தொடங்க, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அனுமதி கொடுத்துள்ள நிலையில், ஆர்காம் சொத்துகள் விரைவில் ஏலத்தில் விடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆயிரம் கோடி நஷ்டம்

பல ஆயிரம் கோடி நஷ்டம்

முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பல ஆயிரம் ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வந்ததும், பின்னர் அதை கடனை கட்ட முடியாமல் தவித்து வந்ததும் தெரிந்த விஷயமே. எனினும் சொத்தை விற்றாவது கடனை செலுத்த முயன்றும், ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் போனதால், திவால் நிலைக்கு தள்ளப்பட்டார் அனில் அம்பானி.

ஆர்காமுக்கு எவ்வளவு கடன்?

ஆர்காமுக்கு எவ்வளவு கடன்?

முன்னதாக எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த ஆர்காமுக்கு, கடந்த ஜூன் 13 தேதி நிலவரப்படி, 57,382 கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டது. இதில் 49,223 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜியோ முன்னதாகவே 18,000 கோடி ரூபாய்க்கு ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முற்பட்டதாகவும், ஆனால் ஒழுங்கு முறை ஒப்பந்தம் இல்லாததால் இது பின்னர் கைவிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆர்காமுக்காக இத்தனை பேர் போட்டியாளர்கள்?

ஆர்காமுக்காக இத்தனை பேர் போட்டியாளர்கள்?

ஆர்காம் நிறுவனத்தை வாங்க, ரிலையன்ஸ் ஜியோ தவிர இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தியுள்ளன (expressions of interest). குறிப்பாக டிபிஜி ஏசியா, அசெட்ஸ் கேர் அன்ட் ரீகன்ஸ்டிரக்சர் எண்டர்பிரைசஸ், அமெரிக்கன் டவர்ஸ்சின் துனை நிறுவனமான ஏடி.சி டெலிகாம் இன்ப்ராஸ்டரக்சர், இந்தியா ஆப்பர்சுனிட்டீஸ் இன்வெஸ்மென்ட்ஸ் சிங்கப்பூர், யூவி அசெட் ரீகன்ஸ்டிரக்சன் கம்பெனி(ஏ.ஆர்.சி), ஜேசி ஃபிளவர்ஸ் ஏ.ஆர்.சி, வர்தே பார்ட்னர்ஸ் உள்ளிட்ட சிலரும் ஆர்காமை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளனராம்.

அனில் அகர்வால் நுழைவு சுவாரஸ்யமானது

அனில் அகர்வால் நுழைவு சுவாரஸ்யமானது

ஆர்காமுக்கான போட்டியில் வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வாலும் நுழைந்திருப்பது போட்டியை இன்னும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் உலகளாவிய உலோகங்கள், சுரங்க மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் நுழைவு, ஆர்காமுக்கான போட்டியை இன்னும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடனை கொண்டுள்ள ஆர்காம் நிறுவனத்திற்கு இது நல்லதாக அமைந்தால் சரியே.

ஆர்காம் சொத்துகள் தொலைத் தொடர்பு துறையில் நல்ல வாய்ப்பு

ஆர்காம் சொத்துகள் தொலைத் தொடர்பு துறையில் நல்ல வாய்ப்பு

தொலைத் தொடர்பு துறையில் முடங்கி போயுள்ள மற்ற நிறுவனங்களுக்கு ஆர்காமின் சொத்துக்கள் பெரிய வரப்பிரச்சாதமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஜியோவால் முடங்கி போயுள்ள இந்த நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரச்சாதமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இது அடுத்தடுத்த நிலைக்கு செல்ல பெரிய அளவில், இந்த சொத்துக்கள் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தளர்ந்து போயுள்ள பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் இந்த பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த பந்தயம் சற்று பரப்பரப்பானதாகவே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who buy rcom assets in auction?

who buy rcom assets in auction?
Story first published: Friday, August 23, 2019, 9:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X