இனி நிறுவனங்களும் இதை பயன்படுத்துவதை தவிர்க்கனும்.. சிஏஐடி அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அகில இந்தியர்களின் வர்த்தக கூட்டமைப்பானது (CAIT), இனி கார்ப்பரேட் நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும், ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்று அதிரடியாக தடை செய்துள்ளது.

 

ஆமாங்க.. மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து தடை செய்து வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 2 முதல் கட்டாயம் நிறுவனங்களும் ஒரு முறை மட்டும் உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் சிஏஐடி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அகில இந்திய வர்த்தக சங்கம் சார்பில், உற்பத்தியாளர்களும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இனி ஒரு பிளாஸ்டிக் முறை மட்டும் உபயோகப்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு கூறியுள்ளது.

இனி இல்லை பிளாஸ்டிக்

இனி இல்லை பிளாஸ்டிக்

அதிலும் குறிப்பாக வேகமாக நகரக்கூடிய நுகர்வோர் பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள், நுகர்வோர் சாதனங்கள், தினசரி பயன்பாட்டு பொருட்கள், மருந்துகள் மற்றும் மருந்துகள், பேக்கேஜிங் துறைகள் உள்ளிட்ட பல துறைகள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை கண்டிப்பாக, அக்டோபர் 2ம் தேதி முதல் கொண்டு நிறுத்த வேண்டும் என்றும் சிஐஏடி கூறியுள்ளது.

மோடியின் உரைக்கு பின்பு அதிரடி நடவடிக்கை

மோடியின் உரைக்கு பின்பு அதிரடி நடவடிக்கை

முன்னதாக பல முறை, இந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைக்கு பின், இது போன்ற பல அதிரடியான மாற்றங்கள் வந்துள்ளது என்றே கூறலாம். அதிலும் பிரதமர் உரையின் பின், சில நாட்களுக்கு பிறகே CAIT, இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ரயில்வே அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மாநாடு
 

டெல்லியில் மாநாடு

வரும் ஆகஸ்ட் 29ம் தேது புதுடெல்லியில் அனைத்து மாநிலங்களின் வர்த்தக தலைவர்களும் ஒன்று கூடும் மாநாட்டில், இந்த அமைப்பானது இது குறித்து பேச உள்ளதாகவும், மேலும் அக்டோபர் 2, 2019 பிறகு அதிகாரிகள் எடுக்கக்கூடிய எந்தவொரு தண்டனை நடவடிக்கையிலிருந்தும், வர்த்தகர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், அது குறித்தான பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கையாகத் தான், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக CAIT கூறியுள்ளது.

தொடர்ந்து வலியுறுத்தல்

தொடர்ந்து வலியுறுத்தல்

முன்னதாக இந்த ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தை, தடை செய்ய வேண்டும் என்றும், மேலும் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நடைமுறை வரும் அக்டோபர் 2ம் தேதி முதல், கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகம் கணிசமாக பாதிக்கும்

வர்த்தகம் கணிசமாக பாதிக்கும்

நாடு முழுவதும் சுமார் 7 கோடி வர்த்தகர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், எஃப்.எம்.சி.ஜி துறையில் டெலிவரி செய்யும் துறையில் உள்ளனர். இது தவிர 30 லட்சம் பேர் எஃப்.எம்.சி.ஜி துறையில், சில்லறை வர்த்தகர்களாகவும் உள்ளனர். பான் இந்தியா அடிப்படையில் இதுபோன்ற பொருட்களை தடை செய்வது, வியாபாரத்தை கணிசமான அளவு பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மறு சுழற்சி செய்யக்கூடியவை மட்டுமே பயன்படுத்துகிறோம்

மறு சுழற்சி செய்யக்கூடியவை மட்டுமே பயன்படுத்துகிறோம்

ஏற்கனவே இந்த பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்துள்ள நிறுவனமான, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் இது குறித்து கூறுகையில், லைஃப் பாய், கார்னெட்டோ, வீல் உள்ளிட்ட சில பொருட்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் அல்லது மட்கக் கூடிய 100 சதவிகித பொருட்களை, 2025க்குள் எடுத்து செல்ல நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இது தவிர கடந்த 2018-லேயே 30க்கும் மேற்பட்ட நகரங்களில் தன்னார்வா தொண்டு நிறுவனங்களூடனும் மற்றும் ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து 20,000 டன் களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் லேமினேட் கழிவுகளைக் சேகரிக்கவும், அதை அகற்றவும் இந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என்றும் கூறியுள்ளது.
இதே போல கோககோலா நிறுவனமும், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களையே உபயோகப்படுத்துவதாகவும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CAIT says Corporates and Manufactures to stop using single use plastic by 2 October

CAIT says Corporates and Manufactures to stop using single use plastic by 2 October
Story first published: Sunday, August 25, 2019, 8:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X