இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அத்தியாவசிய சுகாதார பொருட்களான சானிட்டரி நாப்கின்கள்,சோப்புகள், ஹாண்ட் வாஷ், கிருமிநாசினி போன்றவற்றின் விலை விரைவில் குறைக்கப்படும் என்று கூறப்பட்ட்டுள்ளது.

 

ஆமாங்க.. தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 384 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.

 
இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி!

இவை தற்போது தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயிக்கும் விலையில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் இந்த பட்டியலை மறுஆய்வு செய்யும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பொருட்களுக்கு தனி பட்டியல் தயாரிக்கப்பட்டும் வருகிறது.

இதில் அத்தியாவசிய சுகாதார பொருட்களின் பட்டியலை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இரண்டு மாதங்களுக்கு இந்த பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறப்பகிறது.

மேலும் இந்த பட்டியல் இரு பிரிவுகளாக தயாரிக்கப்பட உள்ளது. இதில் முதல் பிரிவில் இருக்கும் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இரண்டாவது பிரிவில் இருக்கும் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக துணியை பயன்படுத்தும் வழக்கம் தற்போதும் கிராமங்களிலும் நகரத்தில் ஏழைகளிடத்தில் இருப்பதாகவும், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் குறைந்த விலையிலான நாப்கின்கள் கிடைக்காததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்வதற்காக நாப்கின்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய சுகாதார பொருட்களும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவே, இந்த விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை பட்டியலை நிதி ஆயோக்கின் மலிவு விலை மருந்துகள் தொடர்பான குழுவின் தலைவர் வி.கே.பால் இறுதி செய்ய உள்ளார்.

இவ்வாறு விலை குறைக்கப்படும் போது அத்தியாவசிய பொருட்களின் தேவையானது, மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்றும், அதிலும் விலை குறைவாக கிடைக்கு என்றும் கூறப்படுகிறது.

மேலும் எல்லா நேரங்களிலும், சுகாதாரத் துறையில் அணுகக்கூடிய,சுகாதார தயாரிப்புகளின் பல அம்சங்கள் குறித்து வல்லுனர்கள் கலந்துரையாடி வருகிறார்கள். உதாரணமாக எந்த வகையான சோப்பை சுகாதாரப்பிரிவின்ம் கீழ் வைக்க வேண்டும், அது திரவமாக இருக்க வேண்டுமா? அல்லது மருந்தாக இருக்க வேண்டுமா என்ற விவாதங்களைக் நடந்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hygiene products like soaps, adult diapers could come under price control

Hygiene products like soaps, adult diapers could come under price control
Story first published: Sunday, August 25, 2019, 18:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X